Vikatan balasubramanian passes away | விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்

Added : டிச 19, 2014 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன்  காலமானார்

சென்னை: விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன் மாரடைப்பு காரணமாக இன்று இரவு 7.45 மணியளவில், சென்னை மலர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79.
ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ். வாசனின் மகனான பாலசுப்ரமணியன், கடந்த 1936ம் வருடம் டிசம்பர் 28ம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் லயோலா கல்லூரியில் பி.காம்., பட்டப்படிப்பு படித்தார். விகடன் குழுமத்தில், கடந்த 1956ம் ஆண்டு இணைந்தார். பின்னர் அவரது தந்தை மரணத்திற்கு பின் ஜெமினி மற்றும் விகடன் குழும தலைவராக பதவியேற்றார். அன்றிலிருந்து இன்று வரை அவர் விகடன் குழும தலைவராக உள்ளார். இவர் நடிகர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, அமிதாப் பச்சன், ராஜேஸ் கண்ணா உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து படங்கள் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அவர், இன்று இரவு 7.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக மலர் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். மகன் சீனிவாசன் தற்போது விகடன் குழும நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மூன்று மகள்களும் அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் வந்த பிறகு தான் நாளை அல்லது நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறும். பாலசுப்ரமணியனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நாளை வைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elumalaiyaan - Chennai,இந்தியா
20-டிச-201400:03:00 IST Report Abuse
elumalaiyaan அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
19-டிச-201423:43:58 IST Report Abuse
JAIRAJ மூத்த பத்திரிகையாளருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Share this comment
Cancel
Jegun - chennai,இந்தியா
19-டிச-201423:25:58 IST Report Abuse
Jegun ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X