சிஞ்சுவின் சின்ன சின்ன நிமிடங்கள்....| Dinamalar

சிஞ்சுவின் சின்ன சின்ன நிமிடங்கள்....

Added : டிச 21, 2014
Advertisement
சிஞ்சுவின் சின்ன சின்ன நிமிடங்கள்....

புதிய கோணத்தில் தமிழ் சினிமாவின் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்க புதிய வரவுகளும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். முன்பு ஒரு நடிகையின் தேதிக்கு மொத்த யூனிட்டும் காத்திருக்கும். இன்று நீ இல்லையா... வேறு ஆள்... என்கிற 'சாய்ஸ்' அதிகரித்து விட்டது. அப்படி ஒருவர் தான் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட புலிப்பார்வை படத்தின் நாயகிசிஞ்சு மோகன். மலையாளத்தில் ஷாஜிகைலாஷ் இயக்கிய ஸ்வர்க்கம் ௯ கி.மீ., உள்ளிட்ட படங்களில் நடித்தவர். புலிப்பார்வை இவர் மீதான இயக்குனர்களின் பார்வைக்கு காரணமானது.இனி சிஞ்சுவோடு சின்ன சின்ன நிமிடங்களில்...* சினிமா ஆசை சிறுவயது கனவா?நிச்சயம் இல்லை. பி.டெக்., படித்துக் கொண்டிருந்த போது மாடலிங் செய்தேன். நிறைய விளம்பரங்களில் நடித்தேன். அதைப் பார்த்து சினிமா வாய்ப்பு கிடைத்தது.* மலையாளத்திலிருந்து தமிழுக்கு தாவிய தருணம்...புலிப்பார்வை நாயகிக்கான தேர்வை இயக்குனர் பிரவீன் நடத்தியது அறிந்து என் போட்டோக்களை அனுப்பினேன். அவர் 'ஓகே' சொன்னதால் தமிழில் தடம் வைத்தேன்.* இலங்கை தமிழ் எப்படி கற்றீர்கள்?அது இயக்குனர் ரிஸ்க். அவர் மலையாளத்தில் எழுதி தந்த வசனத்தை அப்படியே பேசினேன். இப்போது பேசும் போது இலங்கை தமிழ் என்னை அறியாமல் வருகிறது.* இரண்டாவது படம் அப்படி அதற்கு மாற்றல்லவா?ஆமாம்... 'புலிப்பார்வை' பரபரப்பான கதைக்களம். 'அய்யனார் வீதி' காதல் கலந்த குடும்பப் படம். அய்யனார் வீதியில் எனக்கு நிறைய 'ஸ்கோப்' கிடைத்தது.* தென் மாவட்ட படப்பிடிப்பு எப்படி இருந்தது?விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தான் சூட்டிங் நடந்தது. அங்குள்ளவர்கள் ரொம்ப பாசக்காரர்கள். புறப்படும் போது மனமின்றி பிரிந்தேன்.* வழக்கமான கேள்வி தான்... உங்கள் ரோல்மாடல்...யாரும் இல்லை. எனென்றால் யாரும் முழு திறமை பெற்றவர்கள் இல்லை. அனைவரிடமும் நிறை, குறை இருக்கு. நிறைகளை எடுத்துக் கொள்வேன். அனைவரும் ஜெயிக்க வேண்டும். அவர்களுடன் நானும் ஜெயிக்க வேண்டும் என்றவர் இயக்குனர் அழைத்ததும் மீண்டும் 'அய்யனார் வீதி'யில் நடக்கத் தொடங்கினார்.chinchumohanp@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X