Accounts for Tihar inmates | டில்லி திகார் சிறை கைதிகளுக்கு ஆயுள், விபத்து காப்பீடு! 'ஜன் தன்' திட்டம் மூலம் வங்கி கணக்கும் உண்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி திகார் சிறை கைதிகளுக்கு ஆயுள், விபத்து காப்பீடு! 'ஜன் தன்' திட்டம் மூலம் வங்கி கணக்கும் உண்டு

Added : டிச 22, 2014 | கருத்துகள் (5)
Advertisement
டில்லி திகார் சிறை கைதிகளுக்கு ஆயுள், விபத்து காப்பீடு! 'ஜன் தன்' திட்டம் மூலம் வங்கி கணக்கும் உண்டு

புதுடில்லி: டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, பிரதமரின், 'ஜன் தன்' திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்கி, அதன் மூலம், தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டதை நிறைவேற்ற, இந்தியன் வங்கி முன் வந்துள்ளது.

ஊதியம்:நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ௪,௫௦௦ குற்றவாளிகள், டில்லியில் உள்ள பிரபல திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் தண்டனை காலத்தில், தங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், இவர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க, இந்தியன் வங்கி முன் வந்துள்ளது. அதில் அவர்களின் ஊதியத்தை செலுத்த சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கைதிகளின் ஊதியத்தை,அவர்களின் குடும்பத்தார்வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்கும் அனைவருக்கும், ஒரு லட்சம் ரூபாய்க்கான தனிநபர் விபத்துக் காப்பீடும், 30 ஆயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.

'இதன் மூலம், சிறையில் கைதிகள் ஆர்வமுடன் பணியாற்ற முடியும் எனவும், அவர்களின் உழைப்பின் பயன், உடனடியாக அவர்களின் குடும்பத்தாருக்கு சென்றடைவதால், கைதிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, விரைவில் திருந்தி வாழும் முடிவுக்கு வருவார்கள்' எனவும், சிறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இன்று துவங்கும் இந்த பணியை, ஒரு மாதத்திற்குள் முடிக்க, இந்தியன் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம், சிறைக் கைதிகளுக்கு புத்தாண்டு பரிசாக அமையும் என, இந்தியன் வங்கியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பரிந்துரை:இந்த நடவடிக்கை வெற்றி பெறும் பட்சத்தில், நாட்டின் அனைத்து சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கும் வங்கிக் கணக்கு துவங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும், திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் ஆதார்!திகார் சிறையில் உள்ள, பெரும்பாலான கைதிகளுக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கு துவங்க, இந்த ஆதார் அட்டையை அடையாளஆவணமாக பயன்படுத்தவும், ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, சிறை நிர்வாகமே தகுந்த அடையாள அட்டையை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.'விரைவில் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, சிறைத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தற்கொலைகள்!ஒரு புறம் சிறைக் கைதிகளின் வாழ்வாதாரத்திலும், அவர்களின் நலனிலும் அக்கறை காட்டி வரும், திகார் சிறை அதிகாரிகள், அங்கு நிலவும் இடப் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கின்றனர். டில்லி திகார் சிறைச்சாலையில், 6,250 கைதிகளை மட்டுமே அடைக்க அனுமதி உள்ள நிலையில், 12 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை காரணமாக, நாளுக்கு நாள் திகாரில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கைதிகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கடந்த, மூன்று ஆண்டுகளில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில், டில்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம் சிங் உட்பட, 11 கைதிகள், மன அழுத்தம் காரணமாக, தற்கொலை செய்து இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
22-டிச-201409:25:55 IST Report Abuse
Sundeli Siththar இவை, அரசியல் கைத்ஹிகளுக்கு.. ஊழல்வாதிகளுக்கும் பொருந்துமா? அவர்களுக்கு எதற்கு விபத்து காப்பீடு... இந்த பிசாத்து காசு, அவர்களது வீட்டில் வேலை செய்யும் சமையல் காரர், டிரைவர், தோட்டக்காரர் போன்றவர்களின் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தை விட குறைவாகவே இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
22-டிச-201409:23:51 IST Report Abuse
Sundeli Siththar ஒரு விதத்தில், இந்தத் திட்டம் நல்லதே... கைதிகள் திருந்தி வாழ ஒரு நல்ல வாய்ப்பு....
Rate this:
Share this comment
Cancel
ganesan bala - karaikal,இந்தியா
22-டிச-201407:54:41 IST Report Abuse
ganesan bala முதலில் லாக் அப் கைதிகளுக்கு ஆயுள் காப்பிடு செயுங்கள்.ஏனெனில் அவர்கள் திடிர் திடீர் என்று இறந்துவிடுகின்றனர்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-டிச-201412:13:13 IST Report Abuse
மதுரை விருமாண்டிசூப்பர். அதற்குத் தான் இந்த காப்பீடு என்று நினைத்திருந்தேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X