நதிகள் இணைப்பு இதுவே தருணம்: என் பார்வை| Dinamalar

நதிகள் இணைப்பு இதுவே தருணம்: என் பார்வை

Updated : டிச 26, 2014 | Added : டிச 26, 2014 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நதிகள் இணைப்பு இதுவே தருணம்: என் பார்வை

'நம் நாட்டில் நதிகள் இணைப்பு நடக்கும்' என்பர் சிலர்; 'நடக்காது' என்பர் சிலர். இதேபோல 'நதிகளை தேசியமயமாக்க வேண்டும்' என்றும் 'நதிகள் இணைப்பு நடக்காத ஒன்று' எனவும் பல கருத்துக்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.கடந்த 1969 கே.எல்.ராவ் என்பவர் சமர்ப்பித்த 'நதிகள் இணைப்பு திட்டத்தை' செயல்படுத்த அப்போதைய பிரதமர் நேரு விரும்பினார்; அத்துறைக்கு அவரையே அமைச்சர் ஆக்கினார். இத்திட்டத்தில், கங்கை நதியில் இருந்து விந்திய மலையை தாண்டி 1800 அடி உயரத்திற்கு தண்ணீரை 'பம்ப்' செய்ய வேண்டியிருந்தது. நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதையும் இத்திட்டத்திற்காக பயன்படுத்த வேண்டியிருந்தது. திட்டத்தை முடிக்க 40 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டது. அப்போதைய திட்டக்குழு இதை நிராகரித்தது.கடந்த 1977ல் மொரார்ஜி பதவியேற்ற போது கேப்டன் தஸ்தர் என்பவர் தயாரித்த 'மாலைக் கால்வாய்' (கார்லேண்ட் கேனல்) திட்டம் பரிசீலிக்கப்பட்டது; ஆனால் திட்டம் உருப்பெறவில்லை.
1982ல் அப்போதைய பிரதமர் இந்திரா, 'தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை' என்ற அமைப்பை ஏற்படுத்தி முயற்சிகளை எடுத்தார்; அவை சாத்தியப்படவில்லை. வடமாநிலங்களில் ெவள்ளமும், தென்மாநிலங்களில் வறட்சிக் கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.இதைத் தவிர்க்க முடியாமல் திண்டாடிய மத்திய அரசு, புதிய திட்டம் ஒன்றை எதிர்நோக்கியது.
இந்நிலையில் தான் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் ஏ.சி.காமராஜ், 'கங்கா- குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை' அறிமுகம் செய்தார். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. மாநில நீர்வழிச்சாலைகளை இணைத்துக் கொள்ள இதில் வழி உண்டு.மூன்று கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
அதன் விபரம்:இமயமலை நீர்வழிச்சாலை கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரம், நீளம் 4500கி.மீ., இது கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின் அனைத்து கிளைகளையும் ஒன்றிணைக்கும்.மத்திய நீர்வழிச்சாலைகடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரம். நீளம் 5750 கி.மீ., மகாநதி, நர்மதா, தபதி நதிகளின் அனைத்து கிளைகளையும் இணைக்கும்.தெற்கு நீர்வழிச்சாலைகடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரம். நீளம் 4650கி.மீ., கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் அனைத்து நதிகளையும் இணைக்கும்.இந்த மூன்று அமைப்புகளின் மொத்த நீளம் 15,000 கி.மீ., அகலம் 120 மீட்டர்; ஆழம் 10 மீட்டர். நீரேற்றம் இன்றி சமச்சீர் கால்வாய் மூலம் கங்கையில் இருந்து தாமிரபரணி வரை நதி நீரை இணைக்க முடியும்.
பாதிப்பு இல்லை:நதிப்படுகைகளில் நீரை சேமித்தல், பகிர்ந்தளித்தல் போன்ற பணிகள் நீர்வழிச்சாலையில் நடக்கும். எந்த மாநிலத்தவரின் தண்ணீர் தேவைக்கும் பங்கம் ஏற்படாமல், உபரி நீரை மற்ற இடங்களுக்கு திருப்பிவிட்டு வறட்சிப் பகுதிகளையும் வளம் பெறச் செய்யும்.திட்டத்தின் பயன்கள்* ெவள்ளச் சேதம் தவிர்க்கப்பட்டு வறட்சிப்பகுதிகளுக்கும் பாசன வசதி.* ஆண்டு முழுதும் தடையின்றி குடிநீர்.* உணவு உற்பத்தியில் தன்னிறைவு.* 25 கோடி பேருக்கு தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு.* 15 கோடி ஏக்கர் நிலங்களில் கூடுதலாக பாசன வசதி.* 60 ஆயிரம் மெகாவாட் நீர் மின் உற்பத்தி.* நீர்வழிச்சாலையின் இருபுறமும் காடுகள் உருவாகும்.* எரிபொருட்கள் இறக்குமதி குறைந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து ௫௦ ஆயிரம் கோடி ரூபாய் செலவு குறையும்.* அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருமானம்.வறட்சி நீங்கும்இத்திட்டம் செயலுக்கு வந்தால் ெவள்ளம், வறட்சி கொடுமைகள் நீங்கும். அதற்காக செலவிடப்படும் நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கலாம். பிரதமராக வாஜ்பாய் இருந்த போது 'நதிகள் இணைப்பு செயலாக்கக் குழு' அமைக்கப்பட்டு, ௨௧ திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன; இதில் 'கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்திற்கு' செயலாக்கக்குழு தலைவர் சுரேஷ்பிரபு சான்றளித்தார்.இதில் முடிவு எடுக்கப்பட இருந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, செயலாக்கக்குழு கலைக்கப்பட்டது; பின், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.தற்போது, நதிகள் இணைப்பில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். 'இந்த ஆட்சியிலாவது நீர்வழிச்சாலை திட்டம் நிறைவேறுமா?' என்ற ஏக்கம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த இதுவே பொன்னான தருணம்.-கா.கருப்பையா,துணை கலெக்டர் (ஓய்வு)மதுரை.9443477241

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201516:09:47 IST Report Abuse
JeevaKiran நீரேற்றம் இன்றி சமச்சீர் கால்வாய் மூலம் கங்கையில் இருந்து தாமிரபரணி வரை நதி நீரை இணைக்க முடியும். பிறகு என்ன தாமதம். சீக்கிரமே பணியை துவங்கவேண்டியதுதானே? கங்கையை சுத்தபடுத்த 100 கோடி தருகிறார்கள். ஆதுஎல்லம் வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
jeyasusi - trichy1,இந்தியா
02-ஜன-201509:31:31 IST Report Abuse
jeyasusi நாற்கர சாலையினை தற்போது மிக மகிழ்ச்சியாக நினைத்து பெருமைப்படுகிறோம்...தினமும் வாஜ்பாயை நினைத்து பெருமைப்படுகிறோம்... அதுபோல் நெடு வருடங்களாக பல வழிகளில் தடங்களில் சிக்கி இருக்கும் சிக்கல்களை அறுத்தெரிந்து புத்துயிர் கொடுத்து நதிநீர் இணைப்புகளுக்கான திட்டத்தை தங்கு தடையின்றி நிறைவேற்ற மோடி அவர்கள் பாடுபட்டால் நிரந்தர பிரதமர் அவரே.....இது சத்தியமான உறுதி ......திட்ட நிதிக்கு பஞ்சமே இல்லை.... முதலில் தேர்தெடுத்த திட்டத்தை துவக்கட்டும் .... பிறகு பாருங்கள், நிதிக்கு பல ஆதாரங்களை மக்களிடம் இருந்தே பெறலாம்.. எதெதெற்கோ கண்டகண்ட செலவுகளை செய்துவரும் மக்களே தானாக முன்வந்து திட்டத்திற்கான செலவுகளை ஈடுகட்டுவார்கள்.. ஒரு உதாரணம்,,,,,,அரசிடம் இருந்து பல வழிகளில் இலவசம்,,மான்யம் , சலுகைகள் , ,,பெற்றுவரும் மக்கள் நன்றி விசுவாசம் காட்ட மாட்டார்களா? வேடிக்கை பார்பார்களா? திட்டத்தின் செயல்பாடுகள்,,முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளத்தான் துடிப்பார்கள்.. நான்கு சக்கர சாலை திட்டத்தை அப்படித்தான் எதிர் பார்த்தார்கள்...எப்போது முடியும் என்று மனம் நிறைந்து எதிர் பார்த்தார்கள்.....திட்டப்பணிகளையும் கண்கூடாக பார்த்து விமரிசனம் செய்து வந்தார்கள்...இப்போது எல்லோரும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.... அதுபோல்தான் நதிநீர் இணைப்பு திட்டத்திலும் நடக்க வேண்டும்... நடக்கும்....மக்களிடம் இருந்து நல்லமனதொடு நிதியும் திரட்டலாம்.... பலமாநிலங்களுக்கு துயரம் வந்த பொது தானாகவே மனம்வுவந்து வாரி வழங்கி வருவது அரசுகள் மறந்து போயிற்றா ...திட்டம் நிறைவேறும் வரை மக்கள் துணை இருப்பார்கள் ...எத்தனையோ திட்டங்களை தீட்டிவரும் மோடி அரசு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கும் முன்னுரிமை கொடுத்து உடனடியாக துவக்கி வைக்க போர்கால அடிப்படையில் துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்... மக்கள் மிகவும் எதிபார்க்கிறார்கள்....இந்த மாதிரியான மக்களின் கருத்துக்கள் பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வது பத்திரிகை ஆசிரியர்களின் தலையாய கடமை எனவும் நினைத்து செயல்படவும் வேண்டும் என மக்களும் எதிர்பார்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
RASHID ALI.R - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201410:37:56 IST Report Abuse
RASHID ALI.R பிரதமர் மோடி அவர்கள் நதிநீர் இணைப்பு செய்தால் எல்லா மக்களும் பாரடுவர்கள்
Rate this:
Share this comment
Cancel
RASHID ALI.R - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201410:18:30 IST Report Abuse
RASHID ALI.R அழைப்புக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
RASHID ALI.R - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201410:16:08 IST Report Abuse
RASHID ALI.R இறைவன் கொடுத்த அருள் அதை நாம் பகிந்துகொள்வோம்
Rate this:
Share this comment
Cancel
K.Ramesh - goa,இந்தியா
30-டிச-201415:36:37 IST Report Abuse
K.Ramesh ஆதி காலத்தில் மனிதன் நாடோடியாக திரிந்து விலங்குகளை கொன்று தின்று வந்தான். பின்னர் ஓரிடத்தில் தங்கி வாழ தொடங்கினான். அவ்வாறு ஓரிடத்தில் தங்கி வாழும் போது அவன் விவசாயம் செய்யவும், கால்நடைகளை பழக்கவும், உபயோகிக்கவும், மண் பாண்டங்கள் செய்யவும், தானியம் சேகரிக்கவும் சக்கரங்களை கண்டுபிடித்து வண்டிகள் முலம் நெடுந்துரம் பயணம் செய்யவும் பழகி கொண்டான். mukkiyamaga ஒவொரு நதி அதனை சார்ந்த மக்களிடம் ஒரு மொழி தோன்றியது. அதன் முலம் தனி தனி மனித சமுதாயம், அதன் முலம் நாகரிகங்கள் தோன்ற ஆரம்பித்தது.பின்னர் வாழ்வியலுக்கு ஏற்றவாறு கலை தத்துவம் இலக்கணம் போன்றவை உண்டாயிற்று. உதாரணமாக, கங்கை, சிந்து, மெசபடோமிய nile எகிப்து நாகரிகம் சுமேரிய நாகரிகம். பின்னர் மக்கள் தொகை பெருக பெருக போட்டி, பொறாமை, சிறு சிறு கலவரங்கள் தொடங்கி பெரிய பெரிய படை எடுப்புகள் ஒரு கலச்சரதினை அழிப்பது ஆனாகரிகங்கள் போன்றவை நடந்தேறியது. இப்போது அறிவியல் தொழில்நுட்பம் முன்னேற முன்னேற கற்காலம்,வேத காலம், உலோககாலம், கடந்து தற்போது அனுயுகமில் வாழ்ந்து கொண்டு இருகிறோம். இப்போது எல்லாம் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. அதில் ஒன்று தான் தண்ணீர். மனிதன் ஆதிகாலத்தில் ஆற்று படுக்கையில் வாழ்ந்து விவசாயம் செய்து அமைதியாக வாழ்ந்தது போக தேவை அதிகரிக்கும் போது ஆற்றின் நீரோடதினை தடுத்து அபரிதமான வேழ்ல நீரை சேகரிக்க அணை கட்டி வாழ்ந்தது போக தற்போது தேவை ஆற்றினை திசை திருப்பி எல்ல இடங்களுக்கும் அது பயன்பட முயற்சிக்கிறான். இது ஒரு விதத்தில் நல்லது என்ன்றாலும் இதை செயல் படுத்த பரந்த செயல் திட்டம் ஒட்ற்றுமை, தேவை. இல்லை என்றால் நதி செல்லும் மாநிலங்கள் எல்லாம் தண்ணீர் தேவைக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அதுவே நாட்டில் அமைதி இன்மைக்கு வழி வகுத்துவிடும். தண்ணீர் செல்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. இதை செய்யும் போது எவ்வளவு தண்ணீர் உபரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிடைக்கும் என தெரியவேண்டும். இதில் எதாவது குளறுபடி நிகழ்ந்தால் மாற்று ஏற்பாடு என்ன? paathukaapu அம்சங்கள் என்ன போன்றவை தெளிவு படுத்தவேண்டும். எல்லாம் செய்தபின் திட்டத்தினை செயல் படுத்தினால் வறண்ட நிலங்கள் வழம் பெரும் மக்களும் மேன்மை அடைவர்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
26-டிச-201408:46:13 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே படிக்கறதுக்கும், கேக்கறதுக்கும் நல்லாத்தான் இருக்கு, ஆனா படிக்காம வந்துட்ட டிக்கெட் வாங்கமா வர்ற அரசியல்வாதிங்க, இதுனால என்ன லாபம் அப்படீன்னு தான யோசிப்பானுங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை