விசுவக்குடி அணை கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசுவக்குடி அணை கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

Added : டிச 26, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement



பெரம்பலூர்,: விசுவக்குடி கல்லாற்றின் குறுக்கே ரூ.33 கோடியில் புதிய நீர்தேக்க அணை கட்டும் பணியை பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழக அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் நேரில் சென்று அறிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் விசுவக்குடி நீர்தேக்க அணையில் ஷட்டர் அமைக்கும் பணி மற்றும் ஷட்டர் மூலம் நீர் வெளியேற்றும் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த பெரிய அளவிலான கற்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பதிக்கப்பட்டு வருவதையும், ஏரிக்காக 12 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கரைப்பகுதினையும், நீர்வழிந்தோடிக்காக அமைக்கப்பட்டுள்ள கான்கிரிட் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு கலெக்டர் தரேஷ்அஹமது ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறுகையில், விசுவக்குடி கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் மூலம் ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் அணை கட்டப்பட்டு வருகின்றது.
இந்த அணை அமைவதின் மூலம் 30.67 மில்லியன் கன அடி நீர் 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இந்த ஏரியின் நீர்ப்போக்கி அமைக்க 11 மீட்டர் உயரத்திற்கு கான்கீரிட்டினால் ஆன பலமான கட்டுமான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்படாத வண்ணம் கருங்கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஏரி அமைக்கும் பணிக்காக கூடுதலாக மறு மதிப்பீட்டின்படி ரூ.14.07 கோடி மதிப்பீடு சேர்த்து மொத்தம் ரூ.33.07 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஏரி அமைக்கப்படுவதன் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். ஆற்று மதகின் மூலம் வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.01 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.மறைமுகமாக 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த அணைக்கு அன்னமங்கலம் வழியாக வரும் வகையில் அரசலூர் மற்றும் விசுவக்குடி வரையில் 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. அணையின் இடதுபக்க வாய்க்கால் நீளம் 1,750 மீட்டர் அதன் ஆயக்கட்டு 299.24 ஏக்கர்கள் அணையின் வலதுபக்க வாய்கால் நீளம் 2,425 மீட்டர் மற்றும் அதன் ஆயக்கட்டு 559.76 ஏக்கர் என மொத்தம் இத்திட்டத்தின் மொத்தம் பயனடையும் ஆயக்கட்டு சுமார் 2,400 ஏக்கர் ஆகும்.அணையின் திட்ட பணியின்படி தேக்கப்பட உள்ள 30.67 மில்லியன் கனஅடி நீருடன், ஏரியின் உட்பகுதியில் ஆழப்படுத்துவதன் மூலம் மேலும் 10 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையில் கருத்துரு மாநில திட்டக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கடப்பட உள்ளது. இதனால் இதனை சுற்றியுள்ள 6 கிராமங்கள் பயனடையும்.பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக இந்த அணையை உருவாக்கும் வகையில் அணையின் கீழ் பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி செலவில் பூங்காவும், ஏரியின் கரைப்பகுதியில் ரூ. 20 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணைப்பகுதிக்கு பொதுமக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக மேலும் ஒரு சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X