ஆறறிவா? ஐந்தறிவா?| Dinamalar

ஆறறிவா? ஐந்தறிவா?

Updated : டிச 27, 2014 | Added : டிச 26, 2014 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 ஆறறிவா? ஐந்தறிவா?

ஆறறிவு கொண்ட மனிதனை ஐந்தறிவு மிருகமாய் ஆக்கவல்லது மது. நாம் ஐந்தறிவு மிக்கவர்களாய் மாற வேண்டுமா? கோப்பயை வாயில் வைக்கும் முன் சிந்திப்பீர். 'உண்ணற்க கள்' என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு உரக்கச்சொன்னவன் தமிழன். ஐவகை நிலப்பாகுபாடு அறிந்து ஆட்சி
நடத்தியவர்கள் நம்முன்னோர்.

அவர்கள் பார்வையில் மலை, காடு, வயல், கடல், மணல் எனத்தெரிந்ததே தவிர 'மது' தெரியவில்லை. அன்றே சோமபானம், சுறா பானம் அருந்தினர். கள்ளுண்டு வயலில் நடவு செய்தனர் என கலிங்கத்துப்பரணியை சுட்டிக்காட்டி நாம் கூறலாம். ஆனால் கள்ளுண்பதும் நஞ்சுஉண்பதும் ஒன்றே எனச்சொல்கிறது உலகப்பொதுமறையான திருக்குறள்.நம் சங்க இலக்கியங்கள் கள் உண்பவர்களை கீழ்மக்களாகவே சித்தரிக்கின்றன.புத்தகமும் கையுமாய் படிக்கச்செல்லும் நம் கல்லுாரி மாணவர்கள் மதுபாட்டிலும் கையுமாய்க் குடிக்கச்செல்வது கண்டு நெஞ்சம் நடுங்குகிறது. கள்ளச்சாராய சாவுகளை தடுக்கவே டாஸ்மாக்
நடத்தப்படுவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இன்றோ வாழும் மக்களை உயிரோடு வதைத்து வருவாய் ஈட்டும் காமதேனுவாய் அரசிற்கு அது திகழ்கிறது.


ஏன் இந்த முரண்பாடு :

2013ல் டாஸ்மாக் மூலம் அரசிற்கு கிடைத்த வருவாய் 22,000 கோடி ரூபாய். நாங்கள் தள்ளாடுவதால்தான் அரசு உறுதியாய் நிற்கிறது என்பது குடிமகன்களின் உளறல்பேச்சு. 6,500 கடைகள், 41 குடோன்கள், 36,000 ஊழியர்கள் என நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துவருகிறது டாஸ்மாக்.கோஹெய்ன், ஹெராயின், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விற்போரைத்தடுக்க, கைது செய்ய தனிப்படை. உள்நாட்டு கள்ளை விற்றால், குடித்தால் தடை. ஆனால் சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை விற்பதற்கு அரசே நடத்துகிறது கடை. ஏன் இந்த முரண்பாடு. ராஜாஜியால் 1937ல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, 1944--47ல் ஓமந்துாராரால் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு தவிர மற்ற காலங்களில் சாராயக்கடைகளில் விற்பனை ஜோராக நடந்துவருகிறது. பற்றாக்குறை பட்ஜெட்டை சரிகட்டவே மதுவிற்பனை என்கிறது அரசு. 'கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால் கைகொட்டிச்சிரியாரோ? என்ற பாரதியின் வரிகளை படிக்காதவர்களா நாம்.


பாதிவருவாய் போதை வருவாய் :

கல்லீரல் இறுக்கம், குடல் அழுகல், ரத்த நாள பாதிப்பு, வாய் மற்றும் தொண்டைப்புற்றுநோய், கணைய அழற்சி, ஆண்மைக்குறைவு, புத்திகூர்மை இழப்பு, தசைநார் வலுவிழப்பு, ரத்தசோகை என ஒட்டு மொத்த உடலையும் சிதைப்பது மதுதான் என்பதை நாம் ஏன் மறந்தோம். கோயில் திருவிழா, திருமணம், பிறப்பு, இறப்பு என ஏதாவது ஒரு காரணம் கூறிக்கொண்டு கூடிவிடுகிறார்கள் 'குடி'மகன்கள். முதலில் தள்ளாட்டம். இறுதியில் தற்கொலை என்பதை ஏன் இவர்கள் மறந்தார்கள். மேற்கத்திய நாகரீக பரவல், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கலாசாரம் என போர்வை போர்த்திக்கொண்டு இச்சமுதாய சீரழிவுக்கு சிவப்புக்கம்பளம் விரிப்பதை நாம் நிறுத்தியாக வேண்டும்.வறுமை, நோய், குற்றச்செயல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கு 'பாட்டிலில் அடைந்துள்ள இந்த மது பூதம்தான்' அடிப்படையாக அமைகிறது என்பதை நாம் உணர வேண்டும். மது தீமைகளின் தாய் என்றார் நபிகள். ஆனால் அரசின் பாதி வருவாய் போதை வருவாயாகிவிட்டது.


'குடி'மக்களை குடிமக்களாக்கிட வேண்டும்:

1950ல் ஜன.,26ல் நமக்கென சட்டம் நடைமுறைக்குவந்த நாளில் பூரண மதுவிலக்கு சட்டப்பிரிவு -4ல் உள்ளதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்களா? இல்லை மறைத்து விட்டார்களா? சமீபத்தில் ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் பிளஸ் 2 மாண வர்களின் 45 சதவீதம்பேர் மாதத்தில் 6முறை மது அருந்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2013ல் சாலை விபத்துக்களில் பலி யானோர் எண்ணிக்கை 15,563 பேர். அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பலியானவர்கள் 718 பேர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1972ல் கள்/சாராயக்கடை, அதன்பின் பாக்கெட் சாராயம் என்ற வளர்ச்சி தமிழகத்தின் தலைவிதி என இன்னும் கூறிக்கொண்டிருப்பது அழகல்ல. ஆணுக்குப்பெண் இளைப்பில்லை என மதுகுடிப்பதில் ஒருசில மகளிரும் இப்போது முனைப்புக்காட்டுவது மலட்டுத் தன்மையை அதிகரிக்கும் அல்லவா. இலவசங்களை ஒழித்துவிட்டு 'குடி'மக்களை இனியாவது குடிமக்களாக்கிட அரசு எண்ண வேண்டும்.
'உட்கப்படார் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகுவார் (குறள் 921)
என வள்ளுவர் கூறுகிறார். கள் குடியில் விருப்பங்கொண்டவர்களிடம் பகைவர் அஞ்சமாட்டார். தமக்குரிய புகழையும் அவர் இழப்பார் என்பதே இதன் பொருள். இந்த எச்சரிக்கையை மனதில் வைத்து போதையை ஒழிப்போம்... சமுதாயத்தில் வெற்றிப்பாதை வகுப்போம்!
மு.முத்து முருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ம.ரெட்டியபட்டி,
விருதுநகர் மாவட்டம்
94433 23199

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Ramesh - goa,இந்தியா
30-டிச-201414:58:26 IST Report Abuse
K.Ramesh டாஸ்மாக் இல் வரும் வருமானத்தை வைத்து நடத்தப்படும் அரசு நெடு நாளிற்கு நிலைக்காது. மக்களின் குமுறல் அரசிற்கு சாபமாக அமையும். அது அரசை கவிழ்த்துவிடும். கள்ள சாராயம் வந்து விடும் என்பதற்காக ஏன் அரசே ஒரு தவறான டாஸ்மாக் இணை நடத்த வேண்டும். சாராயம் விற்பது அரசிற்கு அழகா? ஏன் அக்காலங்களில் நாடு மக்கள் நலனில் ஒரு மன்னன் கண்ணும் கருத்துமாக இருந்தான். நாட்டில் அவலமாக இருந்தால் ஆட்சி நன்றாக நடத்த முடியாது. டாஸ்மாக் இ ஒழித்து கட்டிவிட்டு கள்ள சாராயம் பரவாமல் கடுமையான நடவடிக்கை எடுப்பது அரசிற்கு நல்லது. அப்போது தான் தமிழகத்தினை அழிவில் இருந்து காக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
K.Ramesh - goa,இந்தியா
30-டிச-201414:50:32 IST Report Abuse
K.Ramesh குடி குடியை கெடுக்கும். குடி பழக்கம் நாட்டை கெடுக்கும். குடி பழக்கம் இல்லாத சமுதாயம் மலர வேண்டும். டாஸ்மாக் ஒழிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
29-டிச-201412:32:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சிகரெட்டில் பயமுறுத்தும் போட்டோக்களை போட்டது போல எல்லா டாஸ்மாக்கிலும் நினைவு தப்பி சாக்கடையில் கிடக்கும் மக்களின் படத்தை கண்டிப்பாய் போட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ravi - coimbatore,இந்தியா
27-டிச-201419:42:30 IST Report Abuse
ravi வரும் 2016-லில் dmk மது இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை கொண்டு வந்தால் ... நிச்சயம் மாற்றத்தை காணலாம்
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
27-டிச-201415:08:24 IST Report Abuse
Raja //சமீபத்தில் ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில், பிளஸ் 2 மாணவர்களின் 45 சதவீதம் பேர் மாதத்தில் 6 முறை மது அருந்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.// எந்த நாட்டில், எந்த ஊரில்? இந்த ஆராய்ச்சியை செய்த நிருவனந்தின் பெயரை கட்டுரையாளர் வெளியிட்டு இருந்தால் மேலும் விபரம் தெரிந்து கொள்ள உதவியாக இருந்து இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
27-டிச-201414:35:08 IST Report Abuse
N.Purushothaman யார் என்ன சொன்னாலும் கழகத்தினர் கேட்பார்கள் என்று தெரியவில்லை... மதுவை தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாற்றி விட்டார்கள்..
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
27-டிச-201416:30:49 IST Report Abuse
P. SIV GOWRIமது இல்லாத function இங்கு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
27-டிச-201413:31:26 IST Report Abuse
பிரபு நல்ல வேலை வள்ளுவர் இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் "அறிவே இல்லாத இந்த மது அருந்துபவர்களை எஜமான் சொல் கேட்டு நடக்கும் ஐந்து அறிவு ஜீவிகளாகிய எங்களோடு ஒப்பிடாதீர்கள்" என்று அவைகள் போராட்டம் நடத்தியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Prakash Sundar K - Chennai,இந்தியா
27-டிச-201411:07:37 IST Report Abuse
Prakash Sundar K மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வாசகத்தை நாட்டுக்கு வருமானம், வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று மாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Nannisigamani Baskaran - Chennai,இந்தியா
27-டிச-201410:46:27 IST Report Abuse
Nannisigamani Baskaran டாஸ்மாக் வருவாய் 30 ஆயிரம் கோடி இதில் 5% சதவிகிதம் டாஸ்மாக் ஊழியர்கள், போலீஸ், கவுசிலர் முதற்குண்டு பங்கு பிரிக்க படுகிறது ? மோடி அவர்கள் இதை ஆராய்ந்தால் பல கோடீஸ்வரர்கள் மாட்டுவார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
RSaminathan - Thirumangalam - Abu Dhabi,இந்தியா
27-டிச-201410:05:33 IST Report Abuse
RSaminathan - Thirumangalam அய்யா, தாங்களின் கட்டுரை மிகப்பெரிய நன்மையை உள்ளது. ஆனால் அதனடியில் ஏன் உங்களின் பெயர் பதவி விலாசம் தொலை பேசியை தந்துள்ளீர்கள்? சமூக விரோதிகள் பெயரில் உங்களுக்கு எதிர்ப்பு கிளம்பும். கவனமாய் இருங்கள்.
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
27-டிச-201416:31:35 IST Report Abuse
P. SIV GOWRIஉண்மை . அவர் கவனமாக இருப்பது நல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை