குடும்பம் ஒரு கோயில்: அ.ஸார்ஜான் பேகம்,| Dinamalar

குடும்பம் ஒரு கோயில்: அ.ஸார்ஜான் பேகம்,

Added : டிச 29, 2014 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 குடும்பம் ஒரு கோயில்: அ.ஸார்ஜான் பேகம்,

தன்னலம் கருதாதவள் அடக்கம், அமைதி, அன்பு, பொறுமை மட்டுமின்றி அறநெறியால் கூறப்பட்ட பெண்மைக்கான அத்துணை நற்குணங்களும் அமையப்பெற்றவள் ஒரு நங்கை நல்லாள். கட்டிய மஞ்சள் கயிறுக்கு கட்டுப்பட்டு கணவனுக்காக அவன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக தன்னலம் கருதாது குடும்பநலம் பேணுபவளாக ஒரு சுமைதாங்கியாய் வாழ்ந்து குடும்பத்திற்குள் தன்னை தொலைத்துக்கொள்கிறாள்.


பண்புள்ள குடும்பம்

அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவாகும் என்பது வள்ளுவன் வாக்கு. சச்சரவு, அன்பின்மை, குரோதம், வன்மை, பொறாமை, கணவன் மீது வஞ்சம், மனைவி மீது இரக்கமின்மை, குழந்தைகளிடம் அன்பு செலுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களினால் சில குடும்பங்கள் புயலின் நடுவே சிக்கிய சிறுபடகின் நிலையில் உள்ளன. குடும்பம் என்பது பெரும் காற்றாலும் அணையாத ஜெகஜோதியாய் மிளிர வேண்டும்.


மனம்விட்டுப்பேச வேண்டும் :

கணவன், மனைவிக்குள் எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இன்றி ஆணும், பெண்ணும் சம அந்தஸ்து கொண்ட உயிரிகள்தான் என்ற எண்ணமே குடும்பத்தினை நல்லதொரு முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக அமையும். இன்றைய வரவு என்ன? செலவு என்ன? சேமிப்பு என்ன? பிள்ளைகளின் நலன்குறித்த கலந்துரையாடல், மனம்விட்டுப்பேசுதல் ஒன்றே குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு மிகப்பெரிய தீர்வு. இருவரிடையேயோன புரிதல் மிக முக்கியம். இதையே 'புரிதல் இல்லாத வாழ்வு கொத்தும் பாம்போடு வாழ்வதற்கு சமமானது' என்கிறார் வள்ளுவர். வயதிற்கு வந்த பெண், ஆண் பிள்ளைகளிடமும் உலக யதார்த்தத்தினை பதிவு செய்ய வேண்டும். அதற்கான நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். ஆனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பேசநேரமின்றி 'டிவி' முன்னும், பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன்னும் அமர்ந்து முடங்கிக்கொள்கின்றனர். பின்னர் எவ்வாறு அன்பு பரிமாற்றம் கிடைக்கும். புராணக்கதைகள், நன்னெறி கதைகளை கூறும் தாத்தா, பாட்டிகள் பல வீடுகளில் இல்லை. அவர்கள் முதியோர் இல்லத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு விட்டனர். 'டிவி' வடிவில் வந்த பேய் நம்மை ஆட்டிப்படைக்கின்றது. அதற்கு அடிமையாகிவிட்டு குடும்பத்தினருடன் குதூகலமாய் பேசிடாமல் தனித்தனி தீவாய் நம்மை சுற்றிமட்டும் ஒரு கூட்டுப்புழுவாய் கூடுகட்டி வாழப்பழகியதை நாம் முற்றிலும் உடைத்தெறிய வேண்டும்.


விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் :

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு குடும்பத்தின் பெண் நல்லவளாக அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் அமைதியாய், அழகாய் அமையும். இதனை அக்குடும்பத்தலைவன் அதாவது கணவன் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறி, குடும்ப நலனில் அக்கறை செலுத்தி, விட்டுக்கொடுத்து குடும்பம் அமைதி பூங்காவாக நறுமணம் தரும் நந்தவனமாக அமைந்திட பாடுபட வேண்டும். குடும்பம் என்பது நல்லதொரு இரட்டை மாட்டுவண்டி போன்றது. அதில் கணவன், மனைவி ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். ஆளுக்குகொரு திசையில் சென்றால் வண்டி இயங்குவது பிரச்னை தான். தற்போதுள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை சீர்குலைந்து ஆணும், பெண்ணும் சண்டையிட்டு போலீஸ், கோர்ட் என அலையும் நிலை உள்ளது. ஒருவருக்கொருவர் அன்பிற்கு அடிமையாகி கட்டுண்டு இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் காட்டி வெட்டுண்டு கிடப்பது எந்த வகையில் நியாயம். இருவரும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் ஆண்களும் பெண்களுக்கு வீட்டுவேலைகளில் உதவ வேண்டும். அதன்மூலம் பெண்களுக்கு சுமை குறையும். இவ்வாறு பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்தால் குடும்பம் எப்போதும் கோயிலாகவே இருக்கும்.
-அ.ஸார்ஜான் பேகம்,
தாசில்தார்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
சாத்தூர். 99525 97937

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Faithooran - Thondamaan Puthukkottai,இந்தியா
01-ஜன-201514:10:59 IST Report Abuse
Faithooran இஸ்லாம் கூறிய குடும்ப நேரமான மாலை வேலையையும் இரவின் முன்பகுதியையும் சரியாக ஒதுக்க மறந்த மக்கள் இப்போது அந்த நேரத்தை தொலைக்காட்சிக்காக ஒதுக்கி விட்டார்கள். பின்னர் எப்போது நேரம் கிடைக்கும்? பேச்சு குறைந்ததினால் பிரச்சினைகள் கிளம்புகின்றன. தீர்க்க வழிதெரியாத தலைமுறைகலாகி விட்டோம். வெட்ட வெளியில் நொறுக்குதீனி சூடான தேனீருடன் அமர்ந்து பேசுகையில் பரம எதிரியும் பக்க நண்பனாகி விடுவான். நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள் தாசில்தாருக்கு என்றும் இடியன் :வாசகருக்கு கண்டனம்.
Rate this:
Share this comment
Cancel
K.Ramesh - goa,இந்தியா
30-டிச-201414:59:36 IST Report Abuse
K.Ramesh samuga sinthanai udan eluthapatta arumaiyana katturai. nandri
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
29-டிச-201422:45:13 IST Report Abuse
Amanullah இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் முக்கியமான, இன்னும் சொல்வதென்றால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து எனும் சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் இளம் தம்பதியருக்கும் மிகத்தேவையான கட்டுரை. நன்றி சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-டிச-201417:28:40 IST Report Abuse
Endrum Indian இந்து வாழ்கையை கூறும் முஸ்லிம் பெண்மணி.
Rate this:
Share this comment
kumarkv - chennai,இந்தியா
29-டிச-201422:09:26 IST Report Abuse
kumarkvMessage is important not the person. When everybody is trying to look in to the message, why you are looking at the person....
Rate this:
Share this comment
Cancel
Shruti Devi - cbe,இந்தியா
29-டிச-201416:00:46 IST Report Abuse
Shruti Devi எங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் ....... மகிழ்ச்சி அன்பு சண்டை கோவம், அனைத்தும் உண்டு அனால் ஒரு சில மணி நேரம் தான் எங்கள் பிள்ளைகள் எப்பவும் யாராவது துணையுடன் தான் இர்ருகிர்ரர்கள் .....ஆட்டம் பாட்டு , விளையாட்டு எல்லாமே உண்டு ......கணவன் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறி, குடும்ப நலனில் அக்கறை செலுத்தி, விட்டுக்கொடுத்து வாழவேண்டும் .....சின்ன சின்ன சண்டைகள் கூட பெட்றவர் காதுகளுக்கு போகாமல் பார்த்து கொள்ளவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
29-டிச-201412:29:37 IST Report Abuse
Divaharan புத்தி உள்ள பெண் வீட்டை கட்டுகிறாள். புத்தி இல்லாதவள் அதை தன கையால் இடித்து போடுகிறாள் -நீதி மொழிகள்
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-டிச-201420:38:58 IST Report Abuse
மதுரை விருமாண்டி"புத்தி உள்ள ஆண் வீட்டை கட்டுகிறான். புத்தி இல்லாதவன் அதை தன் கையால் இடித்து போடுகிறான் - இதுவும் நீதி மொழி தான்.. ஆணாதிக்கத்தால் பல பழமொழிகளில் பெண்ணை சிறுமைப் படுத்தியே வாசகங்கள் இருக்கும். அவற்றை இன்று மாற்றியமைப்பது நலம்.....
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
29-டிச-201412:21:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சரியான கருத்துகள்
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
29-டிச-201410:22:52 IST Report Abuse
JeevaKiran யதார்த்தமான உண்மை. அனால், இன்றைய பெண்களிடம் இது இல்லாமல் போனதே. கணவன் தன்னை கவனிக்கவில்லையே என்று கூட வேலை பார்க்கும் ஆண்களிடம் பெண்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமன் போனது. நடு இரவில் மொபைலில் பேச்சு. கேட்டால், கணவனுக்கு புரிந்து கொள்ளும் மனம் இல்லை என்ற வாதம். அதனால் தான் பல குடும்பம் மூன்றாவது நபரால் பாதிக்கபடுது. இது ஏனோ பெண்களுக்கு புரிவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-டிச-201409:28:14 IST Report Abuse
Swaminathan Nath நல்ல சிந்தனை, மனம் விட்டு பேசினால் எல்ல குடும்ப ப்ரசெனைகளும் தீர்க்கலாம்,. குடும்பம் ஒரு கோவில்.
Rate this:
Share this comment
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
29-டிச-201409:26:19 IST Report Abuse
paavapattajanam சகோதரி கூறுவது உண்மை - ஆனால் பெரும்பாலான இடங்களில் நல்ல கணவனோ மனைவியோ பூஜிக்கவோ பாராட்ட்டவோ படுவதில்லை - குடிகாரன் பொண்டாட்டி அவருக்கு குடி மட்டும் இல்லேன நல்லவர் என்பாள் - வாயாடி மனைவி பெற்றிருந்தால் - அவள் வாயை மட்டும் த்ருரகாதிருந்தால் நல்லவள் என்பார் - ஆனால் இயற்கையில் நல்ல கணவனை பெரும்பாலான பெண்கள் குத்தி குத்தி சிதைத்து கெட்டவர்களாக மாற்றுகிறார்கள் - இது உண்மை - கணவன் சிதைந்தால் போச்சு - அதே சமயம் சில நல்ல மனைவிகளுக்கு ரசிக்க தெரியாத ஆண்கள் இருக்கிறார்கள் பெரும்பாலும் சந்தேக புத்தியோடு - இதற்கெல்லாம் காரணம் பெண்கள் முக்கால்வாசி பேர் சுயனலவாதிகலாகிவிட்டார்கள் - தன அம்மா அப்பா கணவன் தான் குடும்பம் என நினைக்கிறார்கள் - கணவனுக்கு மூளை இருந்தால் பிழைத்துகொள்வான் - ஆனால் பெரும்பாலும் ஆண்கள் பெண்கள்தான் இந்த விஷயத்தில் - கட்டிலுக்காக பெற்றவர்களை கூட பிறந்தவர்களை தூக்கி போடுகிறார்கள் - நாத்தர்களோ இருந்தால் அளவுக்கு அதிகமாக தொல்லை கொடுப்பார்கள் இல்லாவிட்டால் முற்றிலும் ஒதுங்கி கொள்வார்கள் - இந்த சூழ்நிலையில் எல்லா உறவுகளும் செத்து போகின்றன - கொஞ்சம் சுயநலத்தை மறந்து - சொந்தங்களுக்கு மரியாதை கொடுங்கள் - கூட பிறந்தவர்களிடமே திருடாதீர்கள் - சொத்துக்களை ஜனநாயாக முறைப்படி பிரித்துகொள்ளுங்கள் - நாம் வாழ்வது பிறருக்கு பாடம் ஆகும்படி வாழ பழகுங்கள் - சந்தோஷம் தானே பொங்கி வரும் - பெரிவர்கள் - தாத்தாக்கள் பாட்டிகள் முதியோர் இல்லத்திற்கு செல்ல மாட்டார்கள் - ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை