Australians visiting India warned of terror attacks | மோசமான நாடா இந்தியா?....சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அனுப்பும் ஆஸி.,| Dinamalar

மோசமான நாடா இந்தியா?....சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அனுப்பும் ஆஸி.,

Added : ஜன 07, 2015 | கருத்துகள் (36)
Advertisement
Australians, visiting India, warned,terror attacks, ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள், எச்சரிக்கை, பயங்கரவாத தாக்குதல், இந்தியா

மெல்போர்ன் : இந்தியாவில் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கவனமுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டும் என இந்தியா செல்லும் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியா செல்ல விண்ணப்பித்திருக்கும் ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகளை, இணையதளம் மூலம் ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தக துறை எச்சரித்து, தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில், இந்தியா செல்ல விரும்புவர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது ஒன்றே ஒன்று தான். இந்தியாவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. பெரிய நகரங்களில் இருக்கும் பெரிய ஹோட்டல்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமின்றி, இந்தியாவில் மக்களிடையே ஏற்படும் மோதல்கள், மத கலவரங்கள், பாலியல் குற்றங்கள், அதிக அளவிலான வாகன விபத்துக்கள் போன்றவைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் அங்கு செல்பவர்கள் கவனமாக இருங்கள். பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளது. அந்த தாக்குதல்கள் எப்போது, எங்கு நடக்கும் என தெரியவில்லை. ஆஸ்திரேலியர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடத்தை அவர்கள் குறி வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவிற்கு செல்வது முதல் அங்கிருந்து திரும்புவது வரை இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்தியா மட்டுமல்ல இந்தோனேஷியா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளும் கவனமுடன் இருங்கள். குறிப்பாக பாலி இனத்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடன் நிலைமையை புரிய வைப்பதற்காக மும்பை தாக்குதல், சமீபத்தில் கயாவில் ஜப்பான் நாட்டு பெண் 5 பேர் கொண்ட கும்பலால் 14 நாட்கள் கடத்தி வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றை உதாரணமாக காட்டி உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mannaiyaar - mannargudi,இந்தியா
08-ஜன-201507:29:27 IST Report Abuse
mannaiyaar ஆஸ்திரேலியாவில் இரண்டுகோடி மக்கள் மட்டுமே அதிக பரபளவில் வசிகின்றார்கள் . இந்தியாவில் 120 கோடி மக்கள் வாழ்கின்றார்கள் . இரண்டு கோடி மக்கள் வாழும் ஆஸ்திரேலியாவில் அந்த சதவிகித அளவுக்கு குற்றங்கள் நடைபெறுவதை அந்த நாட்டு தினசரிகளில் காணலாம் . நம்நாட்டில் உள்ள மக்களின் சதவிகித அளவுக்கு இங்கு குற்றங்கள் நடைபெறுகின்றன .. ஆஸ்திரேலிய இளைஞர்கள் இந்திய நாட்டினரின்மீது அழுகிய தக்காளிகளையும் முட்டைகளையும் மறைந்து இருந்து பல முறை தாக்கியுள்ளார்கள் . தற்போதுதான் திருந்தியுள்ளார்கள். இந்தியாவில் பாலியல் குற்றங்கள் மற்றுமுள்ள குற்றங்களுக்கும் தண்டனை கொடுக்க பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு செல்லும் ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க அந்த நாடு தெரிவித்துள்ள செய்திக்கு நாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை .
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-ஜன-201507:06:50 IST Report Abuse
தங்கை ராஜா வகுப்புவாதப்பேய் எந்தப் பகுதியில் வலுப்பெருகிறதோ அங்கு குற்ற செயல்கள் அதிகரிக்கவே செய்யும். என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற எண்ணம் ஒரு பகுதியினரிடையே வந்து விட்டால் அவர்கள் தப்பு செய்ய அதுவே காரணமாகி விடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
08-ஜன-201504:37:34 IST Report Abuse
Unmai vilambi மனித நேயம், சுய ஒழுக்கம் இதெல்லாம் காணாமல் போய் விட்டது நமது இந்தியாவில். மக்களாக உணர்ந்து திருந்தவேண்டும். ஆஸி தன் நாட்டு மக்களை எச்சரித்தது தவறொன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
chinnuz - Sydney,ஆஸ்திரேலியா
07-ஜன-201523:29:35 IST Report Abuse
chinnuz இதில் பெரிதாக ஒன்றும் இல்லை ... ஆஸ்திரேலியாவில் குடியுரிமையுள்ளவர்கள் எந்த வெளி நாடுகளுக்கு போக விரும்பினாலும், அந்த நாடுகளில் உள்ள நோய்கள் , ஆபத்தான இடங்கள் போன்றவைகளை குறித்து ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்தே அனுப்புகிறது. இதில் என்ன தவறு? குடிமக்களை காப்பது ஒவ்வொரு நாட்டின் கடமை. ஏன், இவர்களிடம் இங்கிருந்து செல்பவர்களை track செய்யும் வசதி கூட உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
07-ஜன-201517:57:08 IST Report Abuse
OUTSPOKEN There is no doubt in this. Go and see North India particularly Bihar and UP. Worst and nastiest people not deserved to live as a humanbeing. South India is far better.
Rate this:
Share this comment
Cancel
uma krishna - Tirunelveli,இந்தியா
07-ஜன-201517:54:34 IST Report Abuse
uma krishna எல்லா காலத்திலும், எல்லா நாட்டிலும் குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனுடைய அளவுகோல் தான் மாறுபடுகிறது. இன்றைய உலக சூழ்நிலையும், வாழ்கைமுரையும் இவற்றின் அளவை அதிக படுத்தி உள்ளது. அவ்வளவுதான். நம் நாட்டின் மக்கள் தொகைக்கும், மற்ற நாடுகளின் தற்போதைய நிலைக்கும் இந்திய தான் பெஸ்ட். கொஞ்சம் களை எடுக்க வேண்டும். அதை மக்களே கூடிய விரைவில் செய்வார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அதுதான் உலக நியதி.
Rate this:
Share this comment
Cancel
ravi - coimbatore,இந்தியா
07-ஜன-201517:40:46 IST Report Abuse
ravi எப்போது இந்த மனித மிருகங்கள் குழந்தைகள் என்று கூட பாராமல் தன் காம இச்சைக்கு உட்படுத்த ஆரம்பித்தார்களோ அப்போதே இந்த நாட்டின் அழிவு ஆரம்பித்து விட்டது இறைவனால் ......
Rate this:
Share this comment
Cancel
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-201517:06:08 IST Report Abuse
Sundar The warning by Australia is justified.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
07-ஜன-201516:23:44 IST Report Abuse
ganapathy வெளிநாட்டு பயணிகளுக்கு பாலியல் குற்றம், திருட்டு, கொலை போன்ற தவறு இழைப்பவர்களுக்கு உடன் தண்டனை தரனும்... அவர்களும் வந்து போகும் வரை நமது விருந்தினர்களாய் பாதுகாக்க வேண்டும்...அது சுற்றுலா மூலம் வருமானம் ஈட்ட உதவும்... அவர்களுக்கு எல்லாவிதத்திலும் நாம் உதவியாய் இருக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
07-ஜன-201516:19:21 IST Report Abuse
LAX நல்ல விஷயம்.. அந்த அரசு தம் மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படுகிறது.. ( நம் நாட்டிலும் சில வெளிப்படையான வெளிநாட்டுக்கு/அண்டைநாட்டுக்கு சேவையாற்றும் கைக்கூலிகள் செயல்படுகின்றன.. கைது செஞ்சவங்கள விடுவிக்காதே.. அப்படியே விடுவித்தாலும் அவர்களுடைய பொருட்களைத் திருப்பித் தராதீர்கள் என்று என்ன ஒரு நல்லெண்ணத்துடன் செயல்படுகிறார்கள்.. இதுபோன்ற ஆட்களைக் கண்டிக்காமல் இருப்பதுடன் கட்சியில் முக்கிய பொறுப்பளித்திருப்பது தான் உண்மையில் வெட்கக்கேடான விஷயம்..)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை