மின்னிதழில் சிந்தாமணி நிகண்டு | Dinamalar

மின்னிதழில் சிந்தாமணி நிகண்டு

Added : ஜன 08, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐரோப்பியரின் கல்விமுறை, இந்தியாவுக்குள் நுழைந்த இருபதாம் நுாற்றாண்டின் இறுதிக்கு முன்பு வரை, தமிழுக்கென, அகரவரிசையில் அகராதிகள் வரவில்லை. அதற்கு பதில், பாடல் வடிவில் மனப்பாடம் செய்யும் வகையில், சொல்லும், அதனை தொடர்ந்து பொருளுமாய் வரும் வகையில், அகராதிகள் அமைக்கப்பட்டன. அவையே நிகண்டுகள். கி.பி.,9ம் நுாற்றாண்டின் திவாகரர் நிகண்டு முதல், 20ம் நுாற்றாண்டின், நீரரர் நிகண்டு வரை, பல நிகண்டுகள் தமிழில் உள்ளன. அவற்றில் பல மின்னிதழிலும் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று தான், இலங்கையின் வல்வெட்டி துறையை சேர்ந்த, வல்வை ச.வயித்தியலிங்கரால் இயற்றப்பட்ட சிந்தாமணி நிகண்டு. ஆனால், இந்த நிகண்டு, மற்ற நிகண்டுகளை போல் அல்லாமல், செய்யுள் வரிசைப்படி, சந்தி பிரித்து சொல், பொருள் என பகுக்கப்பட்டு, கணினிமயமாக்க முறையில் http://www.viruba.com/Nigandu/CN_Stats.aspx என்ற, இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அகரவரிசைப்படியும், எதுகை, மோனை சொற்களை தேடும் வகையில், தலைச்சொல்லையும், பொருள் விளக்க சொல்லையும் வரிசைப்படுத்தி, தேடுவதற்கு எளிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் அகராதியில், 5,427 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. வசதிகளும் உள்ளன. இந்த, இணைய மின்னிதழை உருவாக்கியவர், து.குமரேசன் என்னும், யாழ்ப்பாண தமிழர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X