புதுவரவு| Dinamalar

புதுவரவு

Added : ஜன 08, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட னைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில், தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், செடி, கொடி, பூனை போன்ற பல்லுயிர்களின் மீதான பேரன்பு, ஒவ்வொரு எழுத்திலும் உள்ளது. குறிப்பாக, நாய் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. மொத்தத்தில், புதிய எக்ஸைல், புதிய தரிசனம்.
இந்த நுால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், தமிழகத்தின் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடைய ஜாதிகளான, தேவர், வேளாள கவுண்டர், வன்னியர், நாடார் ஆகிய ஜாதிகள் குறித்தும், இரண்டாவது பகுதியில், வேட்டுவர், ஆசாரி, போயர், வண்ணார், நாவிதர், குலாலர், மீனவர் ஆகிய எளிய ஜாதிகளின் தொன்மை, பழக்க வழக்கங்கள் போன்றவையும், அந்த மக்களின் தொன்மை, கோவில் விழா கலை மூலம், உயர் ஜாதியினர், தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறு நிலை நாட்டுகின்றனர் என்பது குறித்தும் விரிவாக அலசும் நுால். மானிடவியல் ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர் மட்டுமின்றி, வரலாற்றை விரும்புவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நுால்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X