குழந்தைகளை வாசிக்க விடுங்கள்!| Dinamalar

குழந்தைகளை வாசிக்க விடுங்கள்!

Added : ஜன 08, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

உலகமெங்கும் குழந்தைகளுக்கான கற்பனை கதைகளும், அறிவியல் புனைகதைகளும் வெளிவருகின்றன. ஆனால், தமிழகத்தில் அறிவியல் புனைகதை வாசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால், எழுத்தாளர்களும் குறைந்து விட்டனர். குழந்தைகள் வாசிப்பதில்லை என்பதே, பெற்றோர்களின் முன்முடிவு. குழந்தைகளை வாசிக்க விடுங்கள். பொது அறிவு புத்தகங்களை படித்தால், குழந்தைகள் அறிவாளியாகி விடுவர் என, பெற்றோர் நினைக்கின்றனர். அறிவு தளம் விரிவு பெறுவதற்கு, படைப்பாக்கமும் கற்பனையும் அவசியம். அதற்கு, புனைகதை நுால்களே உதவி செய்யும். சிறுவர்களுக்கான புனைகதைகளில், கரிசல் மண்ணின் எழுத்தையோ, நெல்லை வட்டார வழக்கையோ எழுத முடியாது. காரணம், அவர்கள் பொதுமொழிக்கு பழக்கப்பட்டு விட்டனர். அவர்களின் பார்வையில், வட்டார வழக்கு மொழி, பிழையோடு அச்சான வாசகங்களாகவே தெரியும். அவர்கள், அடுத்தடுத்த மொழிநடைக்கு செல்வதற்கு, பொதுமொழியே அடிப்படை. பாடத்திட்டங்களின் மற்றொரு வடிவமாக, குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதைகளை பார்க்க கூடாது. அதன் சாராம்சம் புனைகதைகளில் இருந்தால், குழந்தைகள் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டார்கள். இன்றுள்ள குழந்தைகளின் அறிவு, பல மடங்கு விரிவடைந்துள்ளது. புராண, நீதிக் கதை நுால்களை மட்டுமே வாங்கிக் கொடுக்காதீர்கள். முதுகலை படிக்கும் ஒருவருக்கு இருக்கும் ஆற்றல், இன்றுள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ளது. அவர்கள் இணையத்தில் புகுந்து விளையாடுகின்றனர். குழந்தைகளின் அறிவை குறைத்து மதிப்பிடாதீர்கள். இன்றுள்ள வெகுஜன தமிழ் அச்சு ஊடகங்கள், வண்ணம் தீட்டுவதற்கும், பீர்பால் கதைகளை படிப்பதற்கு மட்டுமே, குழந்தைகளை தயார்படுத்துகின்றன. இது குழந்தைகள் மீதான முன்முடிவு. இணையத்தில் எழுதும் கோடிக்கணக்கான குழந்தைகளில் ஒருத்தியே, மலாலாவாக வெளிவந்தாள் என்பதை, பெரியவர்கள் மறந்து விடக்கூடாது. நாடு முழுக்க, இணையத்தில் வாசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இணையத்தில் குழந்தை இலக்கியங்கள் குறைவாகவே உள்ளன. இது குழந்தைகளுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும். அச்சு ஊடகங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு பக்கங்கள் ஒதுக்குவதைப் போல, இணையத்திலும் ஒதுக்க வேண்டும்.
- ஆயிஷா இரா.நடராஜன் -

என்னை உருவாக்கிய படிப்பு ஆர்வம்என் சிறுவயதில், இலக்கிய வீதி இனியவனின், 'இன்று புதிதாய் பிறந்தேன்' நுாலையும், ஆங்கிலத்தில் வெளியாகும், 'ட்விங்கிள்' காமிக்ஸ் நுால்களையும் விரும்பி படித்தேன்.என் தாத்தா, அம்மா என, என் வீட்டார், எப்போதும் படித்து கொண்டே இருப்பர். வீட்டில், 2,000க்கும் மேற்பட்ட நுால்களை கொண்ட நுாலகம் உள்ளது. அதுதான், என்னை மேடை பேச்சாளராகவும், ஆங்கில இலக்கியம் படிப்பவராகவும் வளர்த்தது. சமீபத்தில், ராஜம் கிருஷ்ணனின் தரிப்பு மணிகள், நீதியரசர் ராமசுப்பிரமணியத்தின், 'கம்பனில் சட்டமும் நீதியும்' உள்ளிட்ட நுால்களை படித்தேன். கம்பன், திருவள்ளுவர், பாரதி, தாராபாரதி, இறையன்பு, சேத்தன் பகத் படைப்புகளை விரும்பி படிப்பேன்.



யாழினிஇளங்கலை ஆங்கில இலக்கியம், இரண்டாம் ஆண்டு, ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி.



பாடத்திற்கு கதை புத்தகம் தடையில்லை!பேய் கதைகளை விரும்பி படிப்பேன். அந்த கதைகளை படித்தால் பயம் ஏற்படும் என, கூறுவர். ஆனால், எனக்கு பயத்தை போக்கியதே அந்த பேய் கதைகள் தான். பள்ளி பாடத்திற்கு, கதை புத்தகங்கள் இடையூறாக இல்லை. 'டிவி' அதிகம் பார்க்க மாட்டேன். பள்ளி பாடத்தை, 2 மணிநேரம் தொடர்ந்து படிக்கும்போது, இடையில், சில நிமிடங்கள் ஒரு கதை புத்தகத்தின், சில பக்கங்களை படிப்பேன். அது, எனக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன், பள்ளி பாடத்தின் மேல் உள்ள சலிப்பையும் போக்கும். விடுமுறை என்றால், அத்தை வீட்டுக்கு சென்றுவிடுவேன். அங்கு, கதை புத்தகம் படித்து, அதுகுறித்து உறவினர்களுடன் உரையாடி மகிழ்வதில் உள்ள சுகமே தனிதான்.



ரேகா 11ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நங்கநல்லுார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X