வாசகர்கள் எதிர்பார்த்த புத்தக கண்காட்சி இன்று துவக்கம்| Dinamalar

வாசகர்கள் எதிர்பார்த்த புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

Added : ஜன 09, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நந்தனம்; சென்னை வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த, சென்னை புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது.நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில், சென்னை புத்தக கண்காட்சி, இன்று மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. இதனை, 'இஸ்ரோ'வின் சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சியில், 700 அரங்குகளில், 5 லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. வாரநாட்களில், மதியம் 2:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும், விடுமுறை நாட்களில், காலை 11:00 மணி முதல், இரவு 9:00 மணி வரையிலும், கண்காட்சி நடைபெறும். புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. கண்காட்சி அரங்கின் பொது மேடையில், தினமும் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வாகனங்களை நிறுத்த, நந்தனம் கலைக்கல்லுாரியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே, மிக பெரிய அளவில் நடக்கும் இந்த புத்தக கண்காட்சி, படைப்பாளிகள், படிப்பாளிகள் மட்டும் இன்றி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X