படிப்படியாக முன்னேற படியுங்கள்! : மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை| Dinamalar

படிப்படியாக முன்னேற படியுங்கள்! : மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

Added : ஜன 10, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

நந்தனம்: ''படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்கு தான்,'' என, சந்திராயன் திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லுாரி மைதானத்தில், 48வது சென்னை புத்தக கண்காட்சி நேற்று மாலை துவங்கியது. அதனை, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: இலக்கை அடைய, திசை, வேகம், நேரம் சரியாக இருக்க வேண்டும் என்பதை, அறிவியல், இலக்கியம், ஆன்மிகம் ஆகிய அனைத்தும் சொல்கின்றன. அவற்றை புரிந்துகொள்வதில் தான், அவரவர் வெற்றி இருக்கிறது. கடந்த ஆண்டு, இதே நிகழ்ச்சியில் பேசியபோது, எழுதி வைத்து பேசினேன். இப்போது, கையில் ஒரு காகிதம் கூட இல்லாமல் பேசுகிறேன். காரணம், போன ஆண்டு பேசியதை, நான் அவமானமாக கருதினேன். இனிமேல், எங்கும், இப்படி தோற்க கூடாது என, தீர்மானித்தேன். அதன்பின், பேசுவதற்கும், எழுதுவதற்கும் தேவையான புத்தகங்களை படித்தேன். நாம், கோடியில் ஒருவராக இருக்க பிறக்கவில்லை. இதை, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களை அங்கீகரியுங்கள். சிறுவயதில், என் அப்பாவும், அம்மாவும் என்னோடு சேர்ந்து, அம்புலிமாமா கதைகளை படித்தனர். பின், என் வளர்ச்சியோடு சேர்ந்து, அவர்களும் படித்தனர். அப்படித்தான், எனக்குள் படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. நான், சாதாரண அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்தவன். சந்திராயன் வெற்றிக்கு முன், அமெரிக்காவை பார்க்காதவன். அதன் பின், அமெரிக்கர்களால் பாராட்டப்பட்டவன். மாணவர்களே, உங்களை படி... படி... என கூறுவது, நீங்கள் படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதற்காக தான். நீங்கள் படிப்பதை, உணர்ந்து படியுங்கள். படைப்பாளர், பதிப்பாளர், வாசகர் என்ற, மூன்று கட்சி கூட்டணி அமைந்தால், நாம், நிலவை தேடி போக வேண்டாம்; அது, நம்மை தேடி வரும். இவ்வாறு, அவர் பேசினார். துவக்க விழாவில், பதிப்பக செம்மல் க.கணபதி விருது, ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் பதிப்பகத்திற்கும், பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது, ராஜ் ஆனந்துக்கும், குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது, நெல்லை ஆ.கணபதிக்கும், ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது, ஸ்ரீகுமார் வர்மாவுக்கும், சிறுவர் அறிவியல் நுாலுக்கான நெல்லை சு.முத்து விருது, இ.கே.தி.சிவகுமாருக்கும், தமிழறிஞருக்கான பாரி சு.செல்லப்பனார் விருது, சிலம்பொலி செல்லப்பனுக்கும், 'பபாசி' நுாலகர் விருது, சம்யுக்தாவுக்கும் வழங்கப்பட்டன. காவல் துறை தலைவர் (பயிற்சி), வன்னியபெருமாள், விருதுகளை வழங்கி, வாழ்த்தினார்.
10 ரூபாய் கட்டணம்; சீசன் டிக்கெட் கிடைக்கும்!



* புத்தக கண்காட்சி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. * திங்கள் முதல் வெள்ளி வரை, மதியம் 2:00 மணிக்கு துவங்கும் கண்காட்சி, இரவு 9:00 மணிக்கு நிறைவுறும். சனி, ஞாயிறுகளில், காலை 11:00 மணிக்கு துவங்கி, இரவு 9:௦௦ மணிக்கு நிறைவுறும். * 750க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. வயதுக்கேற்ற, ரசனைக்கேற்ற வகையில், 5 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. * 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 10 ரூபாய் நுழைவு கட்டணம். அடிக்கடி வர விரும்புவோருக்கு, 50 ரூபாய்க்கான, சீசன் டிக்கெட்டுகளும் உள்ளன. * ஒவ்வொரு நாளும், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அறிஞர்கள், இதழாளர்கள் பங்கேற்கும், உரை, விவாதம், விருது வழங்குதல் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளும், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். * இணையதளம் மூலம் முன்பதிவு, வி.பி.பி., ஏ.டி.எம்., கூரியர் வசதிகள் உள்ளன.



சாதாரண அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்தவன். சந்திராயன் வெற்றிக்கு முன், அமெரிக்காவை பார்க்காதவன். அதன் பின், அமெரிக்கர்களால் பாராட்டப்பட்டவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X