புதுவரவு| Dinamalar

புதுவரவு

Added : ஜன 11, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே, அறிவியல் மீது பெரிய ஈடுபாடு ஏற்படும். அதற்கு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இந்த நுாலில், குழந்தைகளுக்காக, அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளில், முன்னோடிகளாக இருந்த ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, மேகனநாத் சாகா, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் சுருக்கமாகவும், எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. வான் இயற்பியலின் தந்தையான மேகனநாத் சாகாவின் மறைக்கப்பட்ட வரலாறு, தமிழில் சுருக்கமாகவேனும் வெளிவருவது, இதுவே முதல் முறை.

'மெனிஞ்சியோமா' என்ற மூளையில் முளைத்த வைரஸ் கட்டியினால் பாதிக்கப்பட்டவனின், உள்மன உலகம், இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென யாருக்காவது வலிப்பு வரும்போது, உதவும் நம்மால், அந்த நேரத்தில் அவர்கள் என்ன உணர்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியுமா? அவர்களது உளவியலை புரிந்து கொள்ள முடியுமா? ஐ.சி.யூ., பிரிவில், அறுவை சிகிச்சைக்கு ஆளாகும் நோயாளியின் பதற்றம் நிறைந்த இரவு எப்படி இருக்கும்? சக நோயாளிகளின் மீதான அவனது பார்வை என்னவாக இருக்கும்? இவைதான் இந்த நாவலின் கருக்களம். இந்த நாவலில், அறிவியலும் நவீன தமிழும் இரண்டறக் கலந்து உள்ளன. கூடவே, வலிப்பு வருகின்றோருக்கு, இரும்பு பொருட்களை தந்தால், வலிப்பு நின்று விடும் என்ற மூடநம்பிக்கையையும், இந்த நாவல் உடைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X