புத்தகங்களை தேட ஒரு இணையதளம்| Dinamalar

புத்தகங்களை தேட ஒரு இணையதளம்

Added : ஜன 11, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பலருக்கு எழுத்தாளர் பெயர் தெரிந்திருக்கும். ஆனால், அவரின் குறிப்பிடத்தகுந்த புத்தகம் பற்றி தெரிந்திருப்பதில்லை. சிலருக்கு பதிப்பகம் பெயர் மட்டும் தெரிந்திருக்கும். மற்ற விவரங்கள் தெரிந்திருப்பதில்லை. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற பிரச்னையை போக்க, 1945ம் ஆண்டிலிருந்து, 2014 வரை, தமிழில் வெளிவந்த புத்தகங்களை, 'விருபா' இணையதளம் தொகுத்துள்ளது. www. viruba.com இந்த இணையதள முகவரியில் சென்று, எழுத்தாளரின் பெயரை தட்டச்சினால், அவர் எழுதிய புத்தகங்கள், எந்தப் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்தது; அதன் விலை என்ன; பதிப்பக முகவரி போன்ற அனைத்து தகவல்களும் கிடைத்து விடும். குழந்தை இலக்கியம் முதல் துறை வாரியாக நுால்கள் வகுத்து வைக்கப்பட்டுள்ளன. இதில், 121 வகைகளில், 1,506 ஆசிரியர்கள் எழுதிய, 3,462 புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 112 மொழிபெயர்ப்பு புத்தகங்களும் அவற்றில் அடக்கம். புத்தகங்கள் குறித்து, வெகுஜன ஊடகங்களில் வெளிவந்த மதிப்புரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள், 'இலக்கிய சிந்தனை' அமைப்பின் விருது பெற்ற புத்தகங்களுக்கு சிறப்பு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசின் பரிசுக்கு, எழுத்தாளர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X