ஆளுமைகளை உருவாக்கிய பெருமை 'வனம்!'| Dinamalar

ஆளுமைகளை உருவாக்கிய பெருமை 'வனம்!'

Added : ஜன 11, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னையின் வாசிப்பு இயக்கங்களுக்கு முன்னோடியாக செயல்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கது, சென்னை கிறிஸ்தவக் கல்லுாரியில் செயல்படும், 'வனம்!' பாடலாசிரியர் முத்துக்குமார், இயக்குனர் ராம், கவிஞர் பச்சியப்பன், கஜேந்திரன், ஆவணப்பட இயக்குனர் சாரோன் செந்தில் குமார் போன்ற ஆளுமைகளை உருவாக்கிய பெருமை வனத்தைச் சேரும். பத்தாண்டுகளாக செயல்படாமல் இருந்த வனம் அமைப்பு, இப்போது புதுப்பொழிவோடு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில் நடக்கும் வனம் கூட்டத்தில், புத்தக விமர்சனம், கவிதை, சிறுகதை வாசிப்பு, அதற்கான விமர்சனம் போன்றவை நடக்கும். வனத்தின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருவது, அதன் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு. படைப்பாளர்கள் தங்களை படைப்பை மெருகூட்டுவதற்கும், இலக்கிய ஆர்வலர்களின், இலக்கியத்தின் பல்வேறு முகங்களை அறிவதற்கும், வனம் மிகச்சிறந்த தளம். மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு: 94442 34511

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X