வாசிப்பிற்கு ஏற்ற சூழல் குடும்பத்தில் உருவாக்குவது எப்படி?| Dinamalar

வாசிப்பிற்கு ஏற்ற சூழல் குடும்பத்தில் உருவாக்குவது எப்படி?

Added : ஜன 11, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குழந்தைகளிடம் 'இப்படி இரு' என்பதை விட, 'என்னை போல் இரு' என்பது, சுலபமாய் சென்று சேரும் என்கின்றனர், உளவியலாளர்கள். ஆனால், குழந்தைகளை வழிநடத்தும் வகையில், பெற்றோர் நடந்து கொள்வது எவ்வளவு சிரமம் என்பது, பெற்றோருக்கு தான் தெரியும். ''பெற்றோரே! குழந்தைகளிடம், படி... படி... என்பதை விட்டு விட்டு, நீங்கள் படிக்க துவங்குங்கள். குழந்தைகள் தானாகவே படிக்கும்,'' என்கின்றனர், படிப்பாளிகள். தாம்பரத்தை சேர்ந்த கணபதி கூறியதாவது:நான், இப்போ ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திட்டு வர்ற பொறியாளர். எனக்கு, 6 வயசில் இருந்தே, படிக்கிற பழக்கம் உண்டு. அதற்கு காரணம், என்னோட பெற்றோர் தான். அவங்க, படிக்கிற புத்தகங்கள் பத்தி, நிறைய எங்கிட்ட பேசுவாங்க. அப்படித்தான், எனக்கு கதை புத்தகங்கள் படிக்கிற பழக்கம் வந்தது. அப்போ, வகுப்பறையில, நீதி போதனை வகுப்புகள் இருக்கும். அதில கதை சொல்வதற்காகவே நிறைய படிப்பதுண்டு. இப்போ, குழந்தைகள் படிப்பதில்லைன்னு சொல்றோம். அவர்கள் படிப்பதற்கான சூழலை, நாம் தான் உண்டாக்கணும். அவங்களுக்கான புத்தகங்களை, நிறைய வாங்கி தரணும். அவங்களுக்கு முன்னால, நாம படிக்கணும். புத்தகங்களை கிழிக்காம, அடுக்க கத்து தரணும். எளிதா, புத்தகங்களை எடுக்கற வகையில, தலைப்பு வாரியா பிரிச்சு வைக்க சொல்லி தரணும். நாங்க, எங்க குழந்தைகள் கிட்ட அப்படி தான் நடந்துக்கிறோம்.இவ்வாறு, கணபதி தெரிவித்தார். ஆர்.ஏ., புரத்தில், பி.பி.ஓ., நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் கூறியதாவது: எனக்கு, 9, 13 வயதுகளில், இரு குழந்தைகள் உள்ளனர். எங்கள் வீட்டில், மூன்று ஆண்டுகளாக, திங்கள் முதல் வெள்ளி வரை, தொலைக்காட்சி பார்ப்பதில்லை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே, தொலைக்காட்சியை பார்ப்போம். நான், பொதுவான ஒரு ஆங்கில செய்தித்தாளையும், இரண்டு வணிக செய்தித்தாள்களையும் தினமும் படிப்பேன். என்னோடு, மனைவி, குழந்தைகளும் படிப்பர். அப்படித் தான், எங்களின் நாள் துவங்கும்.நான், என் வேலை தொடர்பான புத்தகங்களையும், நிறைய நாவல்களையும் படிப்பேன். என் மனைவி, பொழுதுபோக்கு தொடர்பான புத்தகங்களை படிப்பார். உடற்பயிற்சி கூடத்திற்கு போய் வந்த நேரம் போக, புத்தகங்களுடன், குழந்தைகள் பொழுதை கழிக்கின்றனர். ஒரு புத்தகத்தை, ஓரிரு நாட்களில் படித்து விடுவதால், அடிக்கடி புத்தக கடைகளுக்கு அழைக்கின்றனர். முதலில், இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைய போராட வேண்டி இருந்தது. இப்போது, பழகி விட்டது. இவ்வாறு, சிவகுமார் தெரிவித்தார். தன்னையே, குழந்தைகளுக்கு, உதாரணமாக கட்டமைத்துக்கொண்ட, அடையாறு, சுரேஷ்கிருஷ்ணா, ஒரு கட்டுமான பொறியாளர். அவர் தன் வீட்டு சூழல் குறித்து கூறியதாவது:புத்தகங்கள், பல குழந்தைகளுக்கு பூச்சாண்டிகளாக தெரிகின்றன. அதனால் தான், அவர்கள், அவற்றை பார்த்ததும் தலைதெறிக்க ஓடுகின்றனர். புத்தகங்கள் என்றால், பாடப்புத்தகங்கள் தான், அவர்களுக்கு நினைவுக்கு வருகின்றன. காரணம், அவ்வளவு சுமை, அந்த புத்தகங்களில் உள்ளது. முதலில், குறைந்த பக்கங்களை கொண்ட, அளவில் சிறிய புத்தகங்களை தான், குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அந்த புத்தகங்களில், அவர்களின் எண்ணங்களை ஈர்க்கும் வகையில், வண்ண வண்ண படங்களுடன், சின்னஞ்சிறிய விளக்கங்களும், கதைகளும் இருக்க வேண்டும். பெற்றோர், காலை எழுந்த பின்பும், துாங்குவதற்கு முன்பும், படிக்கும் பழக்கத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு, பெற்றோர் தான், கதாநாயகர்கள். குழந்தைகள், பெற்றோரை தான் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிப்பர் என்பதை, என் குழந்தைகளின் வழி உணர்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டில், இரவு 8:00 மணிக்கு பின், கணினி, ஐபோன், ஐ-பாட், தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அணைத்து விடுவேன். இதை, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கிறேன். முதலில் எதிர்த்த என் மனைவி, தற்போது, எழுத்தாளர்களை பற்றியும், கதாபாத்திரங்களை பற்றியும் பேசுகிறார். இவ்வாறு, சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.
- நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X