சங்காலம் முதல் தற்காலம் வரை...| Dinamalar

சங்காலம் முதல் தற்காலம் வரை...

Added : ஜன 12, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உலக தமிழர்களின் பயன்பாட்டிற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மின்நுாலகம் தான், www.tamilvu.org. இதில், நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என, மூன்று பிரிவுகள் உள்ளன. நுால்கள் பிரிவில், சங்க காலம் முதல், இக்காலம் வரையிலான இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அகராதிகள் பிரிவில், தமிழ்- தமிழ், தமிழ்-பிறமொழிகள், பிறமொழிகள்- தமிழ், நிகண்டு கள் என்னும் வகைப்பாட்டின் படி, சென்னைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரகராதி, பழனியப்பா சகோதரர்களின் 'பால்ஸ்' ஆங்கிலம் -தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம் -தமிழ்ச் சொற்களஞ்சியம், மு.சண்முகம் பிள்ளை தமிழ் -- தமிழ் அகரமுதலி உள்ளிட்டவை உள்ளன. பிற பார்வை கூறுகள் என்னும் பிரிவில், கலைச் சொற்கள், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளின் ஒளிக் காட்சிகள், பிற தமிழ் இணையதள இணைப்புகள், கலைச்சொற்கள் என்ற பிரிவில், சமுதாயவியல், கலை மற்றும் மானுடவியல், அறிவியல், மருத்துவ இயல், தகவல் தொழில்நுட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவ இயல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இயல், மனை இயல், உயிரியல் தொழில்நுட்ப இயல் மற்றும் வேளாண்மைப் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளின் கலைச் சொற்கள் இடம் பெறுகின்றன. அதில், இரண்டு லட்சம் கலைச்சொற்கள் வரை தேடுதல் வசதியுடன் தளத்தில் இடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X