திருவான்மியூரில் வட்ட தொட்டி| Dinamalar

திருவான்மியூரில் வட்ட தொட்டி

Added : ஜன 12, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புத்தகங்களை வாசித்து, கலந்துரையாடி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்ற நோக்குடன், திருவான்மியூரில் செயல்பட்டு வருகிறது, வட்ட தொட்டி அமைப்பு. இதுகுறித்து, வாசகர் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான, அப்பணசாமி கூறியதாவது:தென்காசியில், 1940களில், டி.கே.சிதம்பரநாத முதலியார் துவக்கிய, வட்ட தொட்டி என்ற வாசகர் வட்டத்தில், கல்கி, ராஜாஜி போன்றோர் பங்கேற்று புத்தகம் குறித்து விவாதம் செய்துள்ளனர்.வாசிப்பு, பகிர்வு, கூடுகை என்ற குறிக்கோளுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருவான்மியூரில் துவங்கிய வட்ட தொட்டியில், 20 முதல் 70 வயது வரை உள்ளோர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். மாதத்தில், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டத்தில், சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை குறித்து கலந்துரையாடல், விமர்சனம் நடக்கும். இதன்மூலம், ஆக்கபூர்வமான வாசிப்பை பரவலாக்க முயல்கிறோம். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தொடர்புக்கு: 9840027712,மின்னஞ்சல்: jeon08@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X