வாசகர்களை பட்டை தீட்டும் 'கணையாழி'| Dinamalar

வாசகர்களை பட்டை தீட்டும் 'கணையாழி'

Added : ஜன 13, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்தின் பாரம்பரிய சிற்றிதழான கணையாழியின் வாசகர் வட்டம், சென்னையில் உள்ள, முக்கிய வாசிப்பு இயக்கங்களில் ஒன்று. 1990களில், கணையாழி நடத்தும் கூட்டங்களில், கலந்து கொள்வதற்காகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாசகர்கள் வருவர். கணையாழியில் வரும் கடைசிப் பக்க கட்டுரை, தமிழக வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பத்தியாக மாறியதால், அந்தக் கூட்டத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இன்றைய திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, சிறுகதை ஆசிரியர் வெ.ஸ்ரீராம் போன்றோர் கணையாழி பட்டறையில், பட்டை தீட்டப்பட்டவர்கள். ஒவ்வொரு மாதமும், நடக்கும் கூட்டத்தில், குறிப்பிட தகுந்த எழுத்தாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். அவர், தற்போதைய எழுத்தின் போக்கு குறித்தும், தன் எழுத்து குறித்தும் பேசுவார். பேசிமுடிந்த பின், வாசகர்கள் அவருடன் கலந்துரையாடுவர். அந்த மாதத்தில், கணையாழியில் பிரசுமாகிய கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றில், சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணமுடிப்பு வழங்கப்படும். தொடர்புக்கு: 99622 78990

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X