பகவத்கீதைக்கு இலவச செயலி!| Dinamalar

பகவத்கீதைக்கு இலவச செயலி!

Added : ஜன 13, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழின் முன்னணி எழுத்தாளர் கள் பலர் எழுதிய புத்தகங்களை, 'ஆண்ட்ராய்ட்' செயலியாக மாற்றுவதில், மிகவும் உற்சாகத்தோடு செயலாற்றுபவர், சுதாகர் கனகராஜ். பொன்னியின் செல்வன், காந்தியின் சத்திய சோதனை, காமராஜரின் வாழ்க்கை வரலாறு, புதுமைப்பித்தன், அண்ணாதுரை, மு.வரதராசனார் சிறுகதைகள், திருக்குறள், பகவத்கீதை, கம்ப ராமாயணம், பாரதியார் கவிதைகள் என, இவரது வடிவமைப்பின் கீழ் பல படைப்புகள், அலைபேசியிலேயே வாசிக்க கிடைக்கின்றன. ஆங்கிலம் -- தமிழ் அகராதி, நகைச்சுவை துணுக்குகள், சித்த வைத்திய குறிப்புகள், உலகத் தலைவர்களின் வரலாறுகள் ஆகியவற்றை படிக்கவும் இவர் செயலிகளை உருவாக்கி உள்ளார். அவை அனைத்துமே, 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இலவசமாக கிடைக்கின்றன. உங்கள், 'ப்ளே ஸ்டோர்' செயலியில் Sudhakar Kanakaraj என்று அல்லது https://play.google.com/store/apps/developer?id=Sudhakar+Kanakaraj என்ற சுட்டியின் வாயிலாக, சுதாகர் உருவாக்கி இருக்கும் செயலிகளைச் சென்றடையலாம். இவற்றை அலைபேசியில் நிறுவுவதும் மிக எளிது. நிறுவ நினைக்கும் செயலியின் மேற்புறம் நிறுவு (Install) என்று இருக்கும் பொத்தானை இயக்குவதன் மூலம், அவற்றை எளிதாக தரவிறக்கிக் கொள்ளலாம். அவை அலைபேசி யின் வேகத்தை மட்டுப்படுத்தாது என்பது கூடுதல் தகவல்.-- சீனு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X