சிறப்பாக செயல்படும் சில அரசு நூலகங்கள்!| Dinamalar

சிறப்பாக செயல்படும் சில அரசு நூலகங்கள்!

Added : ஜன 13, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தமிழக நுாலகத் துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், சென்னையில், சில நுாலகங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.அந்த நுாலகங்களை நாடி, வாசகர்கள், ஆர்வமுடன் செல்கின்றனர். அங்கு, வாசகர்களுக்கான கூட்டங்கள் நடக்கின்றன. அந்த நுாலகங்களின் நுாலகர்கள் இதற்காக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். காலை 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, சிறந்த முறையில் இயங்கி வரும் சில நுாலகங்களை பற்றி, அந்தந்த நுாலகர்கள் கூறியதாவது: பெரியார் நகர் வட்டார நுாலகத்தின், நுாலகர் வெங்கடேசன் கூறியதாவது: எங்கள் நுாலகத்தில், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் சார்ந்த, 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு, 25 நாளிதழ்களும், 150 பருவ இதழ்களும் வருகின்றன. இங்கு, ஒரே நேரத்தில், நுாறு பேர் படிக்க கூடிய வசதி உள்ளது. மகளிர், சிறுவர்களுக்கான தனிப்பிரிவுகள் உள்ளன. 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி, 300 புத்தகங்கள் இரவலாக வழங்கப்படுகின்றன. இவை மட்டும் இன்றி, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில், வாசகர் வட்டம் சார்பில், இலக்கிய நிகழ்ச்சி கள் நடந்து வருகின்றன. ஆங்கில பேச்சு பயிற்சி, இலவச சட்ட உதவி, ரத்த தான முகாம்களும் நடந்து வருகின்றன. மொத்தம், 345 புரவலர்கள், நுாலக புரவலர் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். மகாகவி பாரதியார் நகர் நுாலகத்தின், நுாலகர் கனகராஜா கூறியதாவது: எங்கள் நுாலகத்தில், 65 பேர் புரவலர்கள். 4,500 பேர் உறுப்பினர் களாக உள்ளனர். தினசரி 200 பேர் வந்து செல்கின்றனர். தினசரி, 120க்கும் மேற்பட்டோர் புத்தகங்களை இரவலாக பெறுகின்றனர். இங்கு, சிறுவர்களுக்கான தனிப்பகுதி உள்ளது. புரவலர்கள், நுாலகத்தை நன்றாக கவனித்து கொள்கின்றனர். இங்கு, மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில், வாசகர் வட்டத்தின் சார்பில், மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப் படும். 'பிரவுசிங்' வசதியும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். அடையாறு காந்திநகர் வட்டார நுாலகத்தின், நுாலகர் மகேஸ்வரி கூறியதாவது: எங்கள் நுாலகத்தில், 2.௧௮ லட்சம் புத்தகங்கள் உள்ளன. போட்டி தேர்வுகளுக்காகவே, ஒரு லட்சம் புத்தகங்கள் உள்ளன. 13,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் மாணவர்கள். 110 புரவலர்கள் இந்த நுாலகத்திற்கு உதவுகின்றனர். மாதத்தில் ஒரு நாள், எங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று, புத்தகங்களை வழங்கி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். கே.கே.நகர் கிளை நுாலகத்தின் நுாலகர், அண்ணாதுரை கூறியதாவது: இந்த நுாலகம், 130 புரவலர்களின் உதவியால் இயங்கி வருகிறது. இங்கு, 65,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதில், 8,000 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், 3,000 பேர், மாணவ உறுப்பினர்கள். ஒவ்வொரு மாதமும், 3வது ஞாயிற்றுக்கிழமை, வாசகர் வட்டத்தின் சார்பில், போட்டிகளும், பரிசளிப்பு விழாக்களும் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார். கே.கே.நகர் வட்டார நுாலகத்தின் நுாலகர், தீனதயாளன் கூறியதாவது: எங்கள் நுாலகத்தில், இரண்டு லட்சத்து எண்ணுாறு புத்தகங்கள் உள்ளன. 16,௮௦௦க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 186 புரவலர்கள் உள்ளனர். பொதுப்பிரிவும், நாளிதழ், பருவ இதழ்கள், குழந்தைகள், குறிப்புதவி நுால்களுக்கான தனிப்பிரிவு களும், உள்ளன. தினசரி 2,500 புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எம்.ஜி.ஆர்., நகர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு, நேரடியாக சென்று, நுால்களை வழங்கி வருகிறோம். இங்கு, கணினி வசதி மட்டுமின்றி, குடிநீர், கழிப்பறை வசதியும், நன்றாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். மேலும், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'அரசு, நுாலகங்களின் மீது, போதிய கவனம் செலுத்த துவங்கினால், இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும். மாணவர்களுக்கான புத்தகங்களை, அதிகம் வாங்க வேண்டும். கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என்றனர்.
- நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X