குழந்தை இலக்கியத்துக்கு பக்கம் ஒதுக்குங்கள்!| Dinamalar

குழந்தை இலக்கியத்துக்கு பக்கம் ஒதுக்குங்கள்!

Updated : ஜன 13, 2015 | Added : ஜன 13, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குழந்தை எழுத்தாளர்கள் மத்தியில், கொ.மா.கோ. இளங்கோ வித்தியாசமானவர். கவிதையிலிருந்து, குழந்தை இலக்கியத்திற்கு வந்தவர். 'குழந்தைகளுக்கு வழிகாட்டினால், பிற்காலத்தில், அவர்கள் நம் சமூகத்துக்கு நல்வழி காட்டுவர்' என்பதை கொள்கையாக கொண்டவர்.'ஜிமாவின் கைப்பேசி, எட்டுக் கால் குதிரை, குட்டி டாக்டர் வினோத், ஆயிரங்கால் பூச்சி, தேனென இனிக்கும் தீஞ்சுவை கதைகள்' என, குழந்தை களுக்காக பல நுால்கள் எழுதி உள்ளார். கணித எண்கள், உயிர் பெற்று பள்ளிக்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பது குறித்து, இவர் எழுதி உள்ள, எட்டுக்கால் குதிரை நாவல், பல்வேறு சுவாரசியங்களைக் கொண்டது. தாய்லாந்து நாட்டில், பொறியியல் மேலாளராக பணிபுரியும் இளங்கோ, தன் இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளுக்கான இலக்கியம் படைத்து வருகிறார்.தன் படைப்புகள் குறித்து, கொ.மா.கோ.இளங்கோ கூறியதாவது: குழந்தைகளுக்கு சிறுவயதில் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டால், கற்பனை வளம் அதிகரிக்கும்; படைப்புத் திறன் ஊக்கம் அடையும். எதிலும் புதிதாக கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தேடுதல் இருந்தால், வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். அந்த தேடுதலை புத்தகங்களே துவக்கி வைக்கும். குழந்தை இலக்கியங்களில், நீதி போதனைகள் மட்டுமே, அறிமுகப்படுத்தப் படுவதில்லை. அறிவியல், கணிதம், இலக்கியம், கருணை, அன்பு என, எல்லாமுமே அறிமுகப்படுத்தப் படுகிறது. வாழ்வின் நீண்ட பயணத்துக்கு, இது அடிப்படையாக துணைபுரியும். எனவே, அனைத்து தளங்களிலும் குழந்தை இலக்கியம் அவசியம். வெகுஜன பத்திரிகைகள், குழந்தைகளுக்கான பக்கங்களை அதிகரிக்க வேண்டும்; இதழ்களையும் அதிகப்படுத்த வேண்டும். சிறு பத்திரிகைகள், குழந்தை இலக்கியத்துக்கு பக்கம் ஒதுக்க வேண்டும். மலம் அள்ளும் மனிதர்களைப் பற்றி, பெரியவர்களாகிய நாமே அக்கறை செலுத்துவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக, நாவல் எழுதி வருகிறேன். இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட ஜப்பான் அழிவு குறித்த நுாலை, தமிழுக்கு மொழிபெயர்க்க உள்ளேன். அதேபோல், குழந்தைகள் குறித்த, ஓவியர் பிகாசோவின் பங்களிப்பு குறித்தும், புத்தகம் எழுத உள்ளேன். மூங்கிலில் புல்லாங்குழல் செய்யலாம்; பல்லக்கு அமைக்கலாம். குழந்தைமையை துாக்கிச் செல்லும், பல்லக்காகவே இருக்க, நான் ஆசைப்படுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

எழுத்தாளர் ஆக வேண்டும்!

நீதிநெறி கதைகள் மிகவும் பிடிக்கும். ஏழு ஆண்டுகளாக நுாலகம் செல்கிறேன். அங்கு தான், காந்தி, பாரதி, பெரியார், அம்பேத்கரை படித்தேன். 'சீக்ரெட் வே, கல்லிவர்ஸ் டிராவல்ஸ்' போன்ற ஆங்கில புத்தகங்கள் படித்திருக்கிறேன். தற்போது, தன்னம்பிக்கை, அறிவியல் சார்ந்த புத்தகங்களை தேடுகிறேன். பள்ளி படிப்புக்கு பின், இரவு நேரத்தில் சில பக்கங்கள் படித்தால் தான் துாக்கம் வரும். பெரிய தொகை கொடுத்து புத்தகம் வாங்க வசதி இல்லாததால், பழைய புத்தக கடைகள் சென்று, பிடித்த புத்தகங்களை வாங்கி சேகரித்து படிப்பேன். எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது, என் ஆசை.


சுருதி11ம் வகுப்பு, ஏ.ஜி.எஸ்., நிதி மேல்நிலை பள்ளி, ஆலந்துார்



புத்தகங்கள் என்னை துாங்க விடுவதில்லை!
என், அப்பாவின் மூலம், சிறுவயதில், படக்கதை புத்தகங்கள் அறிமுகமாகின. பின், பள்ளிகளில் நடந்த பல போட்டிகளில், பல புத்தகங்களை பரிசுகளாக பெற்றுத் தந்ததும் அந்த புத்தகங்கள் தான். புதிய புத்தகங்களை வாங்கும் சூழல், வீட்டில் இல்லை; அதனால், நுாலகங்களை தேடி ஓடினேன். இப்போது, எங்கள் பகுதி நுாலகம், எங்கள் கல்லுாரி நுாலகம், கன்னிமாரா நுாலகங்களில் உறுப்பினராக இருக்கிறேன். தேர்வு நாட்களை தவிர, மற்ற நாட்களில் தினமும் புத்தகம் படிப்பேன். அதிகாலை 3:00 மணிக்கு கூட, சில புத்தகங்கள் என்னை எழுப்பியதுண்டு. சில புத்தகங்கள், அதிகாலை 5:00 மணி வரை கூட துாங்க விட்டதில்லை.


சுஜாதாகணினி அறிவியல், முதுநிலை இரண்டாமாண்டு, பாரதி மகளிர் கல்லுாரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X