இலக்கியங்களை தொகுக்கும் 'ப்ராஜக்ட் மதுரை'| Dinamalar

இலக்கியங்களை தொகுக்கும் 'ப்ராஜக்ட் மதுரை'

Added : ஜன 14, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தொன்மையான தொல்காப்பியத்தில் துவங்கி, அகநானுாறு, புறநானுாறு, தேவாரம், திருவாசகம் என, பல இலக்கியங்களை, இணையம் மூலமாக படிக்க, 'ப்ராஜக்ட் மதுரை' உதவுகிறது. கடந்த, 1998 ம் ஆண்டு முதல் இயங்கி வரும், இந்த தன்னார்வ குழுமம், உலகின் பல்வேறு பகுதி களில் வாழும், தமிழ் ஆராய்ச்சியாளர் களையும் ஆர்வலர்களையும் உள்ளடக்கி, செயல்பட்டு வருகிறது. சங்க இலக்கியங்களின் மூல நுால்களை, தேடித்தேடி தொகுத்து, அவற்றை மின்நூலாகவும் மாற்றி இருக்கின்றனர். http://www.projectmadurai.org/pmworks.html என்ற சுட்டியின் வாயிலாக, இவர்கள் தொகுத்து பாதுகாத்து வரும் தமிழின் அத்தனை இலக்கியங்களையும், கணினியில், இலவசமாக, தரவிறக்கி கொள்ளலாம். சமயம், காப்பியம், இலக்கணம், நீதிநெறி என, ஒவ்வொரு நுாலையும் வகைப்படுத்தி இருப்பது கூடுதல் சிறப்பு.தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் முதல், கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை, சோலைமலை இளவரசி வரை, அத்தனை முக்கயமான தொகுப்புகளும் கிடைகின்றன. -- சீனு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X