கவிஞர்களுக்காக இயங்கும் கவிதை உறவு!| Dinamalar

கவிஞர்களுக்காக இயங்கும் கவிதை உறவு!

Added : ஜன 14, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, மேற்கு அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள, ஆபீசர்ஸ் காலனி பூங்கா அரங்கில், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை, 'கவிதை உறவு' அமைப்பின் கூட்டம் நடக்கும். அதில், மரபு கவிதையோ, புதுக்கவிதையோ விவாதிக்கப்படும். 'கவிதை உறவு' இதழின் ஆசிரியர், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் நடத்தும், இந்த அமைப்பு, 1972ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில், விவேகா, நா.முத்துக்குமார், யுகபாரதி என, முன்னணி கவிஞர்கள், கவிதை வாசித்திருக்கின்றனர். வலம்புரிஜான், நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன் உள்ளிட்ட பெரும் கவிஞர்கள், இந்த அரங்கத்தை அலங்கரித்து இருக்கின்றனர். இதுகுறித்து, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கவிஞர்கள் புதிது புதிதாக படைக்க வேண்டும் என்பதற்காக, 'கவிதை உறவு' நுாலில், சமூக விழிப்புணர்வு குறித்த தலைப்பு களை கொடுப்பேன். நல்ல கவிதைகளை, புத்தகமாக தொகுத்து, புத்தக கண்காட்சியில், 415, 416வது, அரங்கில் விற்பனைக்கு வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்புக்கு: 94441 78790

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X