'டிவி மெகா சீரியல்களை' புறக்கணிக்கும் சைதை மகளிர்!| Dinamalar

'டிவி மெகா சீரியல்களை' புறக்கணிக்கும் சைதை மகளிர்!

Added : ஜன 14, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவில் தேரடியில் உள்ளது, மகாத்மா காந்தி நுாலகம். அதை பராமரித்து வருகிறார், ௮௪ வயது பெரியவர், மகாலிங்கம். அவர் 5ம் வகுப்பு வரையே படித்தவர்; செருப்பு கூட அணியாத, வாழும் காந்தியவாதி என்பதும், ஆச்சரியமூட்டும் செய்திகள். நுாலகம் துவக்கியது குறித்து அவர் கூறியதாவது:கடந்த, ௧௯௫௦,௬௦களில் வாழ்ந்த மனிதர்கள், வாசிப்பின் வாசத்தை உணர்ந்தவர்கள். விளையாட்டை தவிர வேறு பொழுதுபோக்குகள் அற்ற, அந்த காலங்களில், புத்தகங்கள் தான், அவர்களின் எண்ணங்களையும், செயல்களையும் வசீகரித்தன. நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் கிடைத்த மரியாதைக்கு குறைவில்லாமல், எழுத்தாளர்களுக்கும் மரியாதை கிடைத்த காலம் அது. புதிது புதிதாக புத்தகங்களை வாங்கி, அதன் மூலம், நான் பெற்ற அனுபவத்தை, என் பகுதியான சைதாப்பேட்டையில், மற்றவரும் பெற வேண்டும் என்பதற்காக, 1952ல் ஒரு நுாலகத்தையே ஏற்படுத்தினேன். இவ்வாறு, மகாலிங்கம் தெரிவித்தார். இப்போது, 63ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், அந்த நுாலகத்தில், 25,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 175க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், 80 சதவீதம் பேர் மகளிர் என்ற செய்திகளை நம்பாதோர், நுாலகத்திற்கு நேரில் சென்று, பார்வையிடுவது நல்லது. நாளிதழ், வார இதழ், மாத இதழ், ஆன்மிகம், அறிவியல், குடும்ப, துப்பறியும் நாவல்கள் என, எழுத்தாளர்கள் வாரியாக அடுக்கப்பட்ட, அரிய நுால்கள் அங்கு இருக்கின்றன. மாதத்துக்கு, 50 ரூபாய், ஆண்டு சந்தா 60 ரூபாய், வாசகர்களுக்கு கட்டணம். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் கொடுப்பது, நுாலகத்தின் கடமை. அங்கு, வரும் பெண்களிடம், 'புத்தகம் படிக்க எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?' என்று கேட்டால், 'நாங்கள், வீட்டு வேலைகளை முடித்தபின் புத்தகம் படித்து, புத்துணர்ச்சியோடு இருக்கிறோம். தொலைக்காட்சி தொடர்களை பார்த்து, உறவுகளை தொலைப்பதில்லை' என்கின்றனர். இந்த நுாலகத்திற்கு, நிறைய திரைத்துறையினரும், எழுத்தாளர்களும் வந்து போயிருக் கின்றனர் என்பதற்கு, அவர்கள் கையெழுத்திட்டு, வழங்கிய புத்தகங்கள் சாட்சி சொல்கின்றன. ஆண்டுக்கொரு எழுத்தாளருக்கு விருது கொடுப்பது, நன்றாக படிக்கும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது போன்ற, பணிகளிலும், மகாலிங்கம் ஈடுபட்டு வருகிறார்.
- நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X