ஆசிரியர், பெற்றோர் படிக்காத வரை குழந்தைகளும் படிக்க மாட்டார்கள்!| Dinamalar

ஆசிரியர், பெற்றோர் படிக்காத வரை குழந்தைகளும் படிக்க மாட்டார்கள்!

Added : ஜன 14, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குழந்தை இலக்கிய எழுத்தாளர், கம்பீரனின், இயற்பெயர் நீதிமணி. வேலுார் மாவட்டத்தை சேர்ந்த அவர், கல்வி துறையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவரின், 'சந்தைக்கு போன பேன், புலிகிலி, ஒரு பக்க கதைகள்' உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளை எப்படி கதை புத்தகங்களை படிக்க வைப்பது என்பது குறித்து, கம்பீரன் கூறியதாவது:நான், சமீபத்தில் ஒரு பள்ளிக்கு சென்றேன். அங்கு, 130 ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில், 20 பேர் திருக்குறள் புத்தகமும், மூன்று பேர், பாரதியார் புத்தகமும் வைத்திருப்பதாக கூறினர். அங்கிருந்த தமிழாசிரியர்களிடம், ''திருக்குறளையோ, பாரதியார் கவிதை களையோ, நீங்கள் படிப்பதில்லையா?'' என்று, கேட்டேன். 'எங்கள், பாடப்பகுதியில் உள்ளவற்றை நன்றாக படித்தால் போதாதா?' என்று, கேட்டனர். இந்த நிலையில், நாம் 'குழந்தைகள் படிக்க வேண்டும்' என, எதிர்பார்ப்பது எந்த கையில் நியாயம்? குழந்தைகளால், புத்தகம் வாங்கவோ, அவற்றை பற்றி அறியவோ முடியாது. அதை செய்ய வேண்டியது, பெற்றோரும், ஆசிரியரும் தான். அதிலும், குறிப்பாக, 10 மணிநேரம் வரை, குழந்தைகளோடு பழகும் ஆசிரியர்கள் தான், அவற்றை செய்ய வேண்டும். நான், பல பள்ளிகளுக்கு சென்று, குழந்தைகளுக்கான கதைகளை சொல்லி வருகிறேன். அப்போது, அவர்கள், என்னிடம், மிக அன்பாகவும், நெருக்கமாகவும் பழக ஆரம்பித்து விடுவர். அவர்கள், கதை கேட்க தயாராகவே உள்ளனர். நாம் தான், அவர்களுக்கு அது பிடிக்கும், இது பிடிக்காது என்ற தவறான புரிதல்களை வைத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு, இசை, கராத்தே, நீச்சல் என, பல்வேறு பயிற்சிகளை அளிப்பதில், பெற்றோர் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், புத்தகம் படிக்க வைப்பதை பற்றி சிந்திப்பதே இல்லை. ஆசிரியர்களில் பெரும்பாலோர், நுாலகம் செல்வதில்லை. நாளிதழ் கூட, அவர்கள் வாசிப்பதில்லை. தங்களின் அறிவை பெருக்கி கொள்ள, அவர்கள் தயாராகவும் இல்லை. அதனால் தான், பெரும்பாலான, பள்ளி நுாலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. நாங்கள், சிறுவர்களாக இருந்த போது, நீதிபோதனை வகுப்புகள் உண்டு. அதில், எங்களின் வாசிப்பு தகுதிக்கு ஏற்ற, எளிய நடையில் உள்ள, அரிய புத்தகங்களை கொண்டு வந்து ஆசிரியர்கள் கொடுத்து, படிக்க சொல்வர். பின், படித்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பற்றி கேள்விகளை கேட்பர். அதற்காக, நாங்கள் குறிப்புகள் எடுத்தோம். அந்த குறிப்புகள், என் போட்டி தேர்வு களுக்கு கூட உதவின. இன்று, நிலைமை அப்படி இல்லை. வாசிப்பின் மூலம் தான் கேள்வி கேட்கும் இளைய சமுதாயம் உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

பெண் கவிகளின் சிறுகதைகள் பிடிக்கும்!கடந்த, 2010ம் ஆண்டு முதல், கோவையில் இருந்து, ரயில் முன்பதிவு டிக்கெட் பணத்தை மிச்சப்படுத்தி, சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்து, அந்த மிச்ச பணத்தில் புத்தகம் வாங்கி செல்கிறேன். நம்முடைய பணத்தில், புத்தகம் வாங்கி படிப்பது, சுதந்திர உணர்வை முழுமைப்படுத்துகிறது. பெண்ணியம், சாதியம் சார்ந்த புத்தகங்கள் விரும்பி படிப்பேன். பெண் கவிஞர்களின் சிறுகதைகள், கவிதைகள் மிகவும் பிடிக்கும். மண்ட்டோவின் 'அவமானம்' என்னை அழவைத்தது. தினசரி ஒரு மணிநேரம், பயண நேரம், விடுமுறை நாட்கள் என, வாசிக்கிறேன்.


ஜீவலட்சுமி, கோவை
என்னை போராளியாக்கியது புத்தகம் தான்!ஒரு பெண்ணாக நான், பட்டப்படிப்பு படிப்பதை, என், பெற்றோர் உட்பட பலர் விரும்பவில்லை. என் வீடு, என் சமூகத்தின் தவறான புரிதலுக்கு எதிராக, நியாயமான, தீர்க்கமான முடிவை எடுக்க உதவியாக இருந்தவை, புத்தகங்கள். ஆங்கில பெண் எழுத்தாளர்களின் கதைகளில், பெண்ணை பற்றிய வர்ணனைகளுக்கு பதில், பெண்ணின் முடிவெடுக்கும் திறன், போராடும் மனஉறுதி ஆகிய குணநலன்கள் எடுத்தாளப்பட்டிருக்கும். அவற்றை படித்ததால், நான், என் பெற்றோரிடம் என், நியாயமான கருத்தை பதிவு செய்தேன். இளம் வயதில் திருமணக்கூட்டில் அடையாமல், படிப்பு எனும் வானில் சிறகடிக்கிறேன்.


பாமிதா , முதுநிலை ஆங்கில இலக்கியம், இரண்டாம் ஆண்டு, எத்திராஜ் மகளிர் கல்லுாரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X