ஆரணியில் உலக தரத்தில் அரிசி உற்பத்தி: மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணியில் உலக தரத்தில் அரிசி உற்பத்தி: மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு

Added : ஜன 15, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருவண்ணாமலை:ஆரணியில், உலக தரத்தில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், மின் கட்டண உயர்வால் தற்போது, தொழில் பாதிப்படைந்துள்ளதாக, அரிசி ஆலை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உலக தரம் வாய்ந்த அரிசி உற்பத்தி செய்வதில் புகழ்பெற்ற நகரமாக விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் அரிசி, தமிழகத்தில் மட்டுமின்றி, வட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.குறிப்பாக ஆரணி, களம்பூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இவற்றின் தினசரி, 1,500டன் முதல், 2,200 டன் வரை, அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அரிசி உற்பத்திக்காக ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சிதம்பரம், விருத்தாசலம். உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், நெல் அறுவடை காலங்களில் பல்வேறு ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலிருந்தும், அரிசி ஆலை அதிபர்கள் நேரடி நெல் கொள்முதல் செய்கின்றனர்.
நவீன தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி தரமான அரிசியை உற்பத்தி செய்து வருகின்றனர். இத்தொழிலில் நேரடியாக மற்றும் மறைமுகமாக, 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆரணியில் உற்பத்தியாகும் அரிசி, 50 முதல், 60 சதவிகிதம் வரை, சென்னையிலும், 15 முதல், 20 சதவிகிதம் வரை சேலம், தர்மபுரி, கோவை மாவட்டங்களிலும், 20 முதல், 25 சதவீதம் வரை, உள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.அரிசி உற்பத்தியின் போது நெல்லில் இருந்து உமியும், தவிடும் தனியாக பிரிக்கப்பட்டு உமி, அரிசி ஆலைகளில் எரிபொருளாகவும், பல்வேறு இடங்களில் பொருட்கள் பாக்கெட் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தாவர எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிலிற்கு தவிடு பயன்படுத்தப்படுகிறது.
உணவு உற்பத்தியில் முக்கிய பங்களிக்கும் அரிசி உற்பத்தி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளையும், மின்சார கட்டண சலுகைகையும் வழங்கவேண்டும், என அரிசி ஆலை உரிமையாளர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை.மேலும் தற்போது, மின் கட்டண உயர்வால், அரிசி ஆலை தொழில் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என, அரிசி உற்பத்தி ஆலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிக்காக, ஆரணியில் உள்ள தரமான அரிசி ஆலைகளிலில் இருந்து அரிசியை நேரடியாக கொள்முதல் செய்து, நேரடியாக ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழக அரசு அரிசி கொள்முதல் திட்டத்தை கொண்டு வந்தால், அரிசி உற்பத்தி தொழில் மேலும் சிறப்படையும்.இதன் மூலம், பொதுமக்களுக்கும் மிக குறைந்த விலையில் தரமான அரிசி வழங்கவும் வழிவகை ஏற்படும். அரிசி உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களும் வளர்ச்சியடைவார்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X