இளம் படைப்பாளிகளின் 'கூட்டாஞ்சோறு'| Dinamalar

இளம் படைப்பாளிகளின் 'கூட்டாஞ்சோறு'

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, நுங்கம்பாக்கம் கே.வி.பி., சிற்றரங்கில், ஒவ்வொரு மாதமும், 'கூட்டாஞ்சோறு' அமைப்பின் கூட்டம் நடைபெறும்.

சமகாலத்தில் வெளிவந்த கதை, கட்டுரை, நாவல், கவிதை குறித்து இதில், விவாதிக்கப் படும். எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், பிரளயன், திருநாவுக்கரசு உள்ளிட்ட, படைப்பாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, விவாதத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தி உள்ளனர்.மேலும், வெகுஜன சினிமா, குறும்படம், நாடகம், ஓவியம் ஆகியவை குறித்தும் இங்கு விவாதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் சென்னை எப்படி இருந்தது, அன்று வாழ்ந்த வாழ்க்கை, இன்றைய வாழ்க்கை முறை குறித்தும் கலந்துரையாடல் நிகழும்.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளம் படைப்பாளிகள், சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட, பல தரப்பினர்களின் களமாக, 'கூட்டாஞ்சோறு' அமைந்துள்ளது.சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பலர் வருகை தருகின்றனர். தொடர்புக்கு: 94442 71479

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X