வாசகர்களிடம் பதிப்பாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?| Dinamalar

வாசகர்களிடம் பதிப்பாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வெகுஜன ஊடகங்களில், பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்கின்றன. ஆனால், தரமான புத்தகங்களை எழுதும், புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள், 100 பிரதிகளைக் கூட தாண்டுவதில்லை. மிகவும் நுட்பமான புத்தகங்கள், நுாறையும் தொடுவதில்லை.

வாசகர்கள், அடுத்த தளத்துக்கு செல்ல விரும்பவில்லையா அல்லது இதே தளத்தில் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என, விரும்புகின்றனரா? வாசகனிடம் பதிப்பகங்கள் எதிர்பார்ப்பவை என்ன?'புலம்' பதிப்பக உரிமையாளர் லோகநாதன் கூறியதாவது:இதுவரை, வரலாறு என்பது, அதிகார வர்க்கம் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதாக எழுதிக் கொண்ட புனைவுகளாகவே இருக்கிறது. இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாற்றில், உண்மையான வரலாற்றை தேட வேண்டுமெனில், புதிய வரலாற்றை படிக்க வேண்டும்; மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் வர வேண்டும். புதிய வரலாற்று புத்தகங்களை படித்தால் மட்டுமே, அதுபோன்ற புத்தகங்களை பதிப்பிக்கும் எண்ணம், பதிப்பாளர்களுக்கு வரும். எனவே, வரலாற்று புத்தகங்களை வாங்கும் பழக்கம், வாசகர்களிடையே அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'அகநி' பதிப்பக உரிமையாளர், மு.முருகேஷ் கூறியதாவது:பிழை இல்லாமல், தரமான காகிதத்தில், கண்ணை கவரும் அட்டையுடன் வெளியிடப்படும் புத்தகங்கள், விலை குறைவாக இருக்க வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்ப்பது, முரண்.பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்குவதற்கே, 80 சதவீத வாசகர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். புதிதாக வெளியாகும் புத்தகங்களை பார்ப்பதே இல்லை. இது தவறு. புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அந்த பழக்கம் அதிகரித்தால் மட்டுமே, பதிப்பகங்களால் தேர்ந்த உள்ளடக்கம் கொண்ட புத்தகங்களை வெளியிட முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'வம்சி' பதிப்பக உரிமையாளர் ஷைலஜா கூறியதாவது:தரமான புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை அடையாளம் கண்டு வாசகர்கள் ஊக்குவிக்க வேண்டும். அது போன்று செய்தால் மட்டுமே, தரமான புத்தகங்களை பதிப்பிக்க முடியும். புத்தகத்தின் விலையை பதிப்பக உரிமையாளர் மட்டுமே தீர்மானிக்க முடியாது. வெளியூர்களில் இருந்து பதிப்பகங்கள், புத்தக காட்சிக்கு புத்தகங்களை எடுத்து வருவதற்கும், கொண்டு செல்வதற்கு மட்டும், 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவும், புத்தகத்தின் அடக்க விலையை தீர்மானிக்கும் சக்தி. அதிக பக்கங்கள் கொண்ட முக்கியமான புத்தகத்தை வெளியிடும் போது, குறைவாகவே அச்சடிக்க முடியும். அவை விற்பனையாகாத போது, பதிப்பாளருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சோதனை நோக்கில் புத்தகம் வெளியிட முடியாத அளவுக்கு, பதிப்பாளர்கள் அவதியுறுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் எனில், வாசகன் குறைவான விலையில், தரமான புத்தகங்கள் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கை விட வேண்டும். இன்று அனைத்து அத்தியாவசிய பொருட்கள் எல்லாம், விலையேறி விட்டன. இந்த நிலையில், பதிப்பகங்கள் மட்டும் குறைவான விலையில், புத்தகங்கள் விற்க வேண்டும் என, எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். எனவே, வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தந்தால் மட்டுமே, தரமான புத்தகங்களை வெளியிட முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

உண்மையில், தரமான புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களை வாசகர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதே நிஜம். குறிப்பாக, மொழிபெயர்ப்பு, தீவிர அரசியல், தீவிர இலக்கியம் குறித்த புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களை, வாசகர்கள் கண்டுகொள்வதே இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன், தரமான புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பகங்கள், இப்போது அடையாளமே இல்லாமல் அழிந்து போனதில், வாசகர்களின் பங்கு அதிகம். ஆனால், இப்போது வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுபோன்ற பிரச்னைகள் இனிமேல் எழாது என்பதே, பெரும்பாலான பதிப்பகங்களின் நம்பிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X