சித்திர திருக்குறள் செயலி!| Dinamalar

சித்திர திருக்குறள் செயலி!

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில், பல்வேறு வகையிலான திருக்குறள் செயலிகள் கிடைத்தாலும், சித்திர திருக்குறள் செயலி மட்டும் அவற்றில் இருந்து சற்றே வேறுபட்டு இருக்கிறது. 'மேரி மார்டின்' என்ற மென்பொருள் நிறுவனம், தயாரித்து வெளியிட்டிருக்கும், சித்திர திருக்குறள், உலகப் பொதுமறையை கற்று தருவதோடு அல்லாமல், மேலும் சில சிறப்பான பயன்பாடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது.

ஒவ்வொரு திருக்குறளையும் விளக்கும் வகையில், ஓவியங்கள் இதில் உள்ளன. மேலும், அந்த ஓவியங்களை நம் அலைபேசியின் முகப்பு படமாக (வால் பேப்பர்) கூட வைத்து கொள்ள முடியும். தினமும் ஒரு குறள் என்ற வகையில், செயலியே நம் அலைபேசியின் முகப்பு படத்தை தானாக மாற்றி கொள்ளும் வசதியும் இருக்கிறது. திருக்குறள்களின் எண் வரிசைப்படி, அவற்றை தேடி படிக்கும் வகையிலும் இந்த செயலி, வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நமக்குப் பிடித்த குறள்களையும் அவற்றின் விளக்கவுரையையும், நண்பர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியையும் உள்ளடக்கி இருக்கிறது என்பது, கூடுதல் சிறப்பு. https://play.google.com/store/apps/details?id=andriod.mms.thirukural என்ற சுட்டியின் மூலம், இந்த செயலியை நம் அலைபேசியில், இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.
- சீனு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X