வெல்வதே வேலை...| Dinamalar

வெல்வதே வேலை...

Added : ஜன 18, 2015
Advertisement
வெல்வதே வேலை...

லியானர்டோ டாவின்சியின் மோனோலிசா ஓவியம் உயிர் பெற்றால்...! அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் நடந்து வந்தால்...! பைசா நகர கோபுரங்கள் தலை சாய்த்து எட்டிப் பார்த்தால்...! நயாகரா நீர் வீழ்ச்சி சிரித்து பேசினால்... விண்மீன்களுக்கு ரெக்கை முளைத்தால்...! இதெல்லாம் நடப்பது சாத்தியமில்லை என்றாலும், இந்த ஆச்சரிய குறிகள் எல்லாம் 'ஸ்டைலிஷ் இங்கிலிஷ்' பேசும் மதுரையை சேர்ந்த ராகிணி, அஞ்சலி சகோதரிகளை பார்த்தால் ஆச்சரியப்படும்.இவர்களிடம் அப்படி என்ன தான் திறமை இருக்கிறது என்று காது கொடுத்து கேட்டால் நம் மூளையில் ஆயிரம் 'டெரா பைட் ஹாட் டிஸ்க்' பொருத்தினாலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. எதை கேட்டாலும் நேஷனல், இன்டர்நேஷனல் லெவலுக்கு தான் சொல்கிறார்கள். உலகம் இவர்கள் காலடியில் உருளும் ஒரு சின்ன பந்தாகவே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுகிறார் ராகிணி...நான் கனடா யுனிவர்சிட்டி ஆப் டொர்னடோல 'இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ்' படிக்கிறேன். நாம படிக்கிற இடம் நம்மிடம் உள்ள திறமைகளை வளர்க்குற மாதிரி இருக்கணும். நான் அப்படி ஒருஇடத்துல படிக்குறதனால தான் நல்ல 'புட் பால்' பிளேயரா வளர முடிஞ்சது. இது மட்டும் இல்லை; ஜாஸ் பாடல், மாடலிங் என என்னோட திறமையை வளர்த்துக்கிட்டு இருக்கேன். இதெல்லாம் விட எனக்கு டிராயிங் ரொம்ப பிடிக்கும். என்னோட தாத்தா வசந்தன், அவர் ஒரு ஓவியர்; அவரது நினைவாக மதுரையில் கண்காட்சி நடத்தி உள்ளோம். அவரோட இன்ஸ்பிரேஷன்ல, நான் நிறைய படங்கள் வரைஞ்சுருக்கேன். இது தவிர சோஷியல் எஜூகேஷன், யூத் என்விரான்மென்ட் படிப்புகளையும் படிச்சு உலகம் முழுவதும் வலம் வந்துகிட்டே இருக்கேன்.அக்கா எக்ஸ்பிரஸ் என்றால் தங்கை அஞ்சலி ஜெட் வேகத்தில் பேசுகிறார்...நான் படிச்சதெல்லாம் அமெரிக்காவுல. இப்போ நான் கனடால 'இன்டர்நேஷனல் என்விரான்மென்ட் லா' துறையில வேலை பார்க்கிறேன். 'யூத் லீடர்' என்ற அமைப்பையும் நடத்திட்டு வரேன். எனக்கும் தாத்தா வசந்தன் தான் ரோல் மாடல். கவிதை, சிறுகதை, பாட்டு... அப்புறம் அரசியல் ஆய்வுகள் என, ஒவ்வொரு துறையிலயும் ஆர்வத்தை வளர்த்துகிட்டுசுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிகளையும் செஞ்சுகிட்டு இருக்கேன். என்ன தான் வெளியூரில் படிச்சாலும் மதுரை தான் எங்களுக்கு புடிச்ச ஊரு. நாங்க கத்துகிட்ட விஷயங்களை எங்களால முடிஞ்ச அளவிற்கு மத்தவங்களுக்கு சொல்லி கொடுத்து சமூக பொறுப்போட இருப்போம், என்றனர்.உலக அரங்கில் அத்தனை துறைகளிலும் சாதனை கொடி நாட்டி, மதுரை மண்ணிற்கு பெருமை சேர்க்கும் இந்த சகோதரிகளை வாழ்த்த a.appadurai@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X