புதுவரவு| Dinamalar

புதுவரவு

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காட்சி மொழியை நுட்பமாக கையாண்டு, வெற்றி பெற்ற, மிக முக்கியமான ௧௫ குறும்படங்கள் பற்றிய அறிமுகம் தான் இந்த நுால். தமிழில் வெளிவந்துள்ள, சினிமா பற்றிய அழகியல் பார்வையிலான ஒன்றிரண்டு நுால்களில், இது குறிப்பிடத் தக்கது. இந்த குறும்படங்கள், சமூக நலனுக்காக எடுக்கப்பட்டவை என்பது, நுாலாசிரியரின் வாதம். உலகமயமாக்கலை, எதிர்த்து கேள்வி கேட்காத, இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் திணிப்பது தான், வெகுஜன ரசனை என்ற பெயரிலான சினிமா மாயை என்கிறார் அவர்.

நாடு கடந்த கலை
பக்கம்: 160விலை: ரூ.120
நுாலாசிரியர்: அருண் மோவெளியீடு: மெய்ப்பொருள்மின்னஞ்சல்: thamizhstudio@gmail.com



செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் அனுப்பும், இந்த நவீன அறிவியல் உலகிலும், மனிதனின் கழிவை மனிதன் அள்ளும் சமூக கொடுமை இன்னும், ஒழிந்தபாடில்லை. இங்குள்ள அரசியல் கட்சிகளும் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க உள்ள, மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து, இந்த நுாலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்நிலை, எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்கள் மீது அவிழ்த்து விடப்படும் வன்முறை என, அனைத்து தகவல்களும் இதில், அடங்கி உள்ளன.


தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்
பக்கம்: 400விலை: ரூ.300


நுாலாசிரியர்: பாஷா சிங் தமிழில்: விஜயசாய்வெளியீடு: விடியல் பதிப்பகம் ( -94434 68758

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X