இலவச தமிழ் மின்நூல்கள் வலைதளம்!| Dinamalar

இலவச தமிழ் மின்நூல்கள் வலைதளம்!

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிண்டில், நுாக், ஆண்ட்ராய்ட், டேப்லெட் போன்றவற்றை, எப்போதும், கையில் இருக்கும், மின்நுாலகம் என, சொல்லலாம். அவற்றில், பி.டி.எப்., இ.பியு.பி., எம்.ஓ.பி.ஐ., ஏ.இசட்.டபிள்யூ., ௩, போன்ற வடிவங்களில் உள்ள நுால்களை படிக்க முடியும். பெரும்பாலான, மின்நுாலகங்களில், தமிழின் சமீபத்திய படைப்புகள் கிடைப்பதில்லை என்னும், குறையை போக்குவதாக, 'இலவச தமிழ் மின்நுால்கள்' வலைதளம் உள்ளது. இந்த வலைதளத்தை, தன்னார்வ வாசகர் குழு, வடிவமைத்திருக்கிறது. இதில், தமிழில், இலக்கியம், விளையாட்டு, கலாசாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்பட கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட எண்ணற்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள, பழைய, புதிய புத்தகங்களின் மின் தொகுப்புகளை, அலைபேசிகளில் பதிவிறக்க முடியும். நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய நுால்கள், இந்த வலைதளத்தில் உள்ளன. அவற்றில், சிறந்த கவிதை, கட்டுரை தொகுப்புகளும் உள்ளன.அலைபேசியில், இந்த மின்நுால்களை வாசிக்க, http://www.FreeTamilEbooks.com என்ற வலைதளத்திற்கு சென்று, தேவைப்படும் நுால்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு, freetamilebooksteam@gmail.com எனும், மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X