குழந்தை இலக்கியம் பெருகினால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்!| Dinamalar

குழந்தை இலக்கியம் பெருகினால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்!

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குழந்தை இலக்கியங்களை, 40 ஆண்டுகளாக எழுதி வரும் கோ.ம.கோதண்டத்துக்கு வயது, 72. இவர் எழுதிய, 96 புத்தகங்களில், 40 புத்தகங்கள், குழந்தை இலக்கியம் தொடர்பானவை. 'நீலன் நமது தோழன், பிறந்த பூமி, தேனீ வளம், காக்கை குருவி எங்கள் ஜாதி, உச்சிமலை ரகசியம், இருண்ட வனத்தில் இளம் சிறுவர்கள், காட்டுக்குள்ளே இசை விழா' உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். குழந்தை இலக்கியங்களுக்கு வழங்கப்படும் விருதுகளை பெற்றுள்ளார். இவரது, 'காட்டுக்குள்ளே இசை விழா' என்ற புத்தகம், குழந்தை இலக்கியங்களுக்கு வழங்கப்படும், பால சாகித்ய அகாடமி விருது பெற்றது. தனது குழந்தை இலக்கிய புத்தகங்களுக்காக, குடியரசுத் தலைவரின் இலக்கிய விருது பெற்ற, ஒரே எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது குழந்தை இலக்கிய சேவையை பாராட்டி, மலேசிய பல்கலை, தொலைநிலை கல்வி துறை, டாக்டர் பட்டத்தையும், வாழ்நாள் சாதனை விருதையும் வழங்கி, கவுரவப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு புனைகதை ஆசிரியரும், தங்கள் புனைகதையில், குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதைகள் புனைவர். இவரது அனைத்து குழந்தை கதைகளிலும், 'நீலன்' என்ற பழங்குடியினச் சிறுவனை மைய பாத்திரமாக அமைப்பது, இவரின் தனிச்சிறப்பு. தனது படைப்புகள் குறித்து, கோ.ம.கோதண்டம் கூறியதாவது:இளைஞர்களே நம் நாட்டின் எதிர்கால துாண்கள் என, பலரும் சொல்வர். பிற்காலத்தில் இளைஞர்களாக மாறுவோருக்கு நல்ல அடித்தளம் தேவை. அதனாலேயே, குழந்தை இலக்கியம் பக்கம் என், கவனத்தை திருப்பினேன். குழந்தைகள் மனதில் நல்ல விதைகளை விதைத்தால், எதிர் காலத்தில் நல்லவைகளே அறுவடை செய்யப்படும். இன்று வரை, குழந்தைகளை முழுமையாக அறிந்து கொள்ள முயல்கிறேன். இந்த தேடல் இருக்கும் வரை, தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுதி வருவேன். இன்றைய நவீன தொழில்நுட்பம் போல் அல்லாமல், எங்கள் காலத்தில், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. அதனால், குழந்தைகள் 'காமிக்ஸ்' புத்தகங்களையும், சிறுவர் இலக்கியத்தையும் படிப்பர். ஆனால், இப்போது சூழ்நிலை மாறி விட்டது. குழந்தை இலக்கியம் பெருகினால், குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தில் ஈடுபட்டால், சமூகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

கதை புத்தகங்கள் தான் என் தோழியர்!
எனக்கு தமிழை எழுத்துக் கூட்டித் தான் படிக்க தெரியும். அதனால், தமிழ் புத்தகங்களை படிப்பதற்குள் சோர்வடைந்து விடுவேன். ஆனாலும், அம்மாவை வாசிக்க சொல்லி, தமிழ் கேட்பேன்.ஆங்கிலத்தில், ஷெர்லாக் ஹோம்ஸின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், ஆங்கில காதல் கதைகள், துப்பறியும் கதைகள், நீதிக்கதைகள் என, எல்லா கதைகளும் பிடிக்கும். பள்ளி விடுதியில், கதை புத்தகங்கள் தான், எனக்கு தோழியர். கதை படிக்கும் போது, அருகில் என்ன நடக்கிறது என்பதே எனக்கு தெரியாது. கதை புத்தகங்கள் படிப்பதால், படிப்பு பாதிக்கப்படும் என்பதெல்லாம் பொய். அளவோடு, மற்ற புத்தகங்களை படித்தால், அவை நம்மை புத்துணர்ச்சியாக தான் வைத்திருக்கும்.என்.பூஜாபிளஸ் 2 மாணவி


சாப்பிடும் போதும் வாசிப்பேன்!
படிப்பது சுகம்; அதை, சாப்பிடும் போதும் அனுபவிப்பேன். சமீபத்தில், டான் ப்ரவுனின் டாவின்சி கோட் நுாலும், பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழனும் படித்தேன். ஒரு புத்தகத்தில் அடங்கிவிடும் நாவல்களை விட, பல பாகங்களை கொண்ட நாவல்களை படிக்கும் போது, படிக்கும் வேட்கை அதிகரிக்கும். அந்த வகையில், பாலகுமாரன் எழுதிய, கங்கை கொண்ட சோழன் நாவல், என் வேட்கையை அதிகரித்தது. அந்த நாவலில், பழங்கால தமிழர்களின் வீரம், எதிரிகளை வெற்றிகொள்ளும் போர் திறம், கடற்படையின் வலிமை, தகவல் பெறும் நுட்பத்தின் வளர்ச்சி என, பல்வேறு பிரமிப்புகள் சுட்டப்பட்டிருக்கும். எது வரலாறு, எது கற்பனை என்று அறியவே முடியாதவாறு, கதையின் போக்கு இருக்கும்.


எஸ்.விஜயலட்சுமிகல்லுாரி மாணவி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X