மாயாஜால, கற்பனை கதைகள் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமானதல்ல!| Dinamalar

மாயாஜால, கற்பனை கதைகள் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமானதல்ல!

Added : ஜன 19, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நெப்போலியன், பில்கேட்ஸ், அம்பானி, ரிச்சர்ட் பிரான்சன், ஏ.ஆர்.ரகுமான் போன்ற ஆளுமைகள் குறித்து, புத்தகம் எழுதிய பிரபல எழுத்தாளர் என்.சொக்கன், குழந்தைகளுக்காக இதுவரை, 24 புத்தகங்களை எழுதி உள்ளார். அண்ணாதுரை, சச்சின், அப்துல் கலாம், 'இன்போசிஸ்' நாராயண மூர்த்தி உலகப்புகழ் பெற்ற, நம் நாட்டு ஆளுமைகள் குறித்து, குழந்தைகள் எளிதில் அறியும் வண்ணம், அவர்களின் மொழியிலேயே, எழுதியுள்ளார். துவக்கத்தில், குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமே எழுதி வந்த சொக்கன், தற்போது குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி வருகிறார். இந்த ஆண்டிலிருந்து, மாதந்தோறும், இரண்டு புத்தகங்கள் வீதம், குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுத வேண்டும் என, உறுதி பூண்டுள்ளார். பெரியவர்களுக்கு மட்டுமே, பழக்கமான இ- புத்தக வாசிப்பை குழந்தைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியில், ஈடுபட்டு வருகிறார். அடிப்படையில், மென்பொருள் பொறியாளர். பெங்களூரூவில், தனியார் மென்பொருள் நிறுவன இயக்குனர். தன் மகளிடமிருந்தே, குழந்தைகளுக்கு கதை சொல்லும் உத்தியை பெற்றதாக சொல்வதில் பெருமிதம் அடைகிறார்.
தன் படைப்புகள் குறித்து, என்.சொக்கன் கூறியதாவது: குழந்தைகளுக்கு, மாயாஜால, கற்பனை கதைகள் மட்டுமே போதுமானதல்ல; ஒரு நிலையில், அவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பர். அப்போது, இவை எல்லாம் கற்பனையில் மட்டுமே சாத்தியமா என்ற கேள்வி எழும். எனவே, அவை நிஜத்திலும் சாத்தியம் என்பதை நாம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால், நம் முன் இருக்கும் வரலாற்று ஆதாரங்களை, குழந்தைகளுக்கு காட்ட வேண்டிய, பொறுப்புணர்வு நமக்கு உண்டு. அதனாலேயே, குழந்தைகள் மொழியில் ஆளுமைகளை அறிமுகப்படுத்தினேன். வெற்றியை நோக்கி நகர்த்துவது இதன் நோக்கம் அல்ல; வரலாற்றை தெரிந்து கொள்வது. வாழ்க்கை பண்புகளை இதன் மூலம் அறிந்து கொள்வர். பண்புகளை சொல்லித் தர வேண்டியது, நம் அனைவருக்குமான பொறுப்பு. இன்றைய நவீன தொழில்நுட்பத்தில், இ - புத்தக வாசிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், அங்கு குழந்தைகளுக்கு இடம் குறைவு. தமிழில் இல்லவே இல்லை என்று சொல்லலாம். அதை நிரப்ப வேண்டும் என்பதற்காகவே, இ - புத்தக முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X