சென்னை வாசிக்கிறது: வாசிப்பின் அனுபவத்தை செயல்திட்டமாக்கும் 'குக்கூ'| Dinamalar

சென்னை வாசிக்கிறது: வாசிப்பின் அனுபவத்தை செயல்திட்டமாக்கும் 'குக்கூ'

Added : ஜன 19, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தொண்டர்களால் நடத்தப்படுகிறது, 'குக்கூ' குழந்தைகள் அமைப்பு. கிராமம், நகரங்களில், குழந்தைகளுக்கு வாசிப்பின் சுவாரசியத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த அமைப்பினர், புத்தகங்களை, சிறுவர், சிறுமியருக்கு சுவாரசியமாக வாசித்துக் காட்டி, கேட்பதிலும், வாசிப்பதிலும் ஆர்வத்தை தூண்டுகின்றனர். ஆர்வம் ஊட்டும் புத்தகங்களை படிக்க பரிந்துரைக்கின்றனர். வாசிப்பின் மூலம் கிடைக்கும் அனுபவ வெளியையும், சந்தேக தளத்தையும், கலந்துரையாடல் மூலம் சிந்தனை என்ற தளத்துக்கு நகர்த்துகின்றனர். வாசிப்பு அடிப்படையில் கலந்துரையாடல் நடப்பதால், சிந்திக்கும் ஆற்றல் உருவாக வழிபிறக்கிறது. சிந்தனையால் தூண்டப்பட்டோர், தங்கள் அனுபவ ஆற்றலை, எழுத்து மூலம் வெளிப் படுத்த 'குக்கூ' அமைப்பு ஊக்குவிக்கிறது. வாசிப்பு அனுபவத்தை செயல்பாட்டு தளத்தில் உரசிப்பார்க்கும் வகையில், பல பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் கூடும் முகாம்களையும், 'குக்கூ' அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. 'குக்கூ' அமைப்புக்கு நிர்வாகிகள் இல்லை. அமைப்பின் தொடர்பாளர் அழகேஸ்வரி. அவரை, 99421 18080 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X