முத்தொள்ளாயிரத்தை செயலியில் கேட்கலாம்!| Dinamalar

முத்தொள்ளாயிரத்தை செயலியில் கேட்கலாம்!

Added : ஜன 19, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்ட்ராய்டு, பிளாக்பெர்ரி அலைபேசிகளில், தமிழ் நூல்களை படிக்கும் வகையில் பல்வேறு செயலிகள், உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறள், முத்தொள்ளாயிரம் ஆகியவற்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த செயலியை இலவசமாக தரவிறக்கம் செய்ய, https://play.google.com/store/apps/details?id=com.cict.thirukkuralhl=enThirukkural என்ற, தளத்திற்கு சென்று, செயலியை, தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியில், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பிரிவுகளிலும், கேட்டகரீஸ், ரேண்டம் என்னும் பிரிவுகளில், அகர வரிசைப்படியும், குறட்பாவை தேடும் வசதிகள் உள்ளன. ஒவ்வொரு குறளும், தமிழ் மற்றும், ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழின் ஒலி வடிவை, பாடல்களாகவும் கேட்கும் வசதி உள்ளது. மேலும், முத்தொள்ளாயிரத்தை யும், ஐபோன், ஐ - பாட், ஆண்ட்ராய்டு மொபைல்களில், இதே செயலி யின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு, https://play.google.com/store/apps/details?id=com.cict.muthhollayiram என்ற, இணைய முகவரியை நாடவேண்டும். அதில், 'மன்னிய நாண்மீன்' எனும் பாடல் துவங்கி, 'மல்லனீர் மாந்தை யார்' எனும், பாடல் வரை உள்ள 108 பாடல்களும், அவற்றிற்கான, மூன்றுவித, ஆங்கில விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. அகர வரிசைப்படியும் பாடல்களை தேடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X