புதுவரவு| Dinamalar

புதுவரவு

Added : ஜன 20, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியரின், 20 நாடகங்களை தமிழில் தந்துள்ளார் நுாலாசிரியர். வெனிஸ் நகரத்து வியாபாரி, ரோமியோ - ஜூலியட், ஹேம்லெட், ஜூலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்ற புகழ் பெற்ற நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நுாலில், சுபமுடிவு நாடகங்கள், சோகமுடிவு நாடகங்கள் என்ற இருபிரிவிலான நாடகங்களை மட்டுமே ஆசிரியர் கொடுத்திருக்கிறார். நாடகங்களின் தலைப்புகளை அப்படியே நேர்மொழிபெயர்ப்பாக கொடுக்காமல், அவற்றின் உள்ளடக்கத்திற்கு ஏற்றபடி தமிழிலேயே தந்திருக்கிறார் நுாலாசிரியர்.கதைகளை எளிய தமிழில் விறுவிறு நடையில் மொழிபெயர்த்திருக்கிறார்.
உலக புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்பக்கம்: 432விலை: ரூ.300
தமிழில்: எஸ்.வீரண்ணன்வெளியீடு: விஜயா பதிப்பகம்( -0422 - 2394614



இன்றைய நிலையில் பெண்கள், படித்து வேலைக்கு சென்று, தங்கள் சொந்த காலிலேயே நிற்கும் நிலைக்கு உயர்ந்து விட்டாலும், அவர்கள் சார்ந்த பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை.அவை, காலத்துக்கேற்ற படி வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கின்றன. அவற்றில், மாமியார் - மருமகள் பிரச்னையும் ஒன்று. இந்த பிரச்னையை உலகளாவிய பிரச்னையாகவே இந்த நுாலாசிரியர் பார்க்கிறார். மாமியார்களை ஐந்து வகையினராக பிரிக்கிறார். அவர்களை சமாளிப்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்கிறார். புதிதாக திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி, மாமியாரை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்களுக்கும் இந்த நுால் உதவும்.



உங்கள் மாமியாரை புரிந்து கொள்ளுங்கள்
பக்கம்: 160விலை: ரூ.120


நுாலாசிரியர்: திருமலை அம்மாள்வெளியீடு: உஷா பிரசுரம்( -044 - 28111506



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X