கதை கதையாம் செயலி!| Dinamalar

கதை கதையாம் செயலி!

Added : ஜன 20, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'வேர்ல்டு வைட் வெப்' என்ற மென்பொருள் நிறுவனம், 'கதை கதையாம்' செயலியை வெளியிட்டு உள்ளது. இதில் பல்வேறு தலைப்புகளில், குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.பரமார்த்த குரு கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள், ஈசாப் நீதிக் கதைகள், அக்பர் - பீர்பால் கதைகள், முல்லா கதைகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.மேலும், பெரியவர்கள் படிக்கும் வகையில் ந.பிச்சமூர்த்தி, மு.வ., லியோ டால்ஸ்டாய் கதைகளும், ஜென் கதைகளும் உள்ளன. சிறுவர்களுக்கான பாடல் என்ற தலைப்பில், 'நிலா நிலா ஓடி வா' என்ற பாடல் துவங்கி, முயல் - ஆமை பாடல், அணில் பாடல், தாலாட்டு பாடல் முதலானவை கிடைக்கின்றன. குறிப்பிடத் தகுந்த அம்சமாக, தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம், பாரதியின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் சங்கே முழங்கு பாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'கூகுள் பிளே ஸ்டோரில்' இந்த செயலி கிடைக்கிறது.https://play.google.com/store/apps/details?id=in.erumbu.Kathaigal&hl=en என்ற சுட்டியின் மூலம், இந்த செயலியை அலைபேசியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை