புத்தகம் வாசித்தால் சிறகு முளைக்கும்! மாணவர்களின் மகிழ்ச்சி அனுபவம்| Dinamalar

புத்தகம் வாசித்தால் சிறகு முளைக்கும்! மாணவர்களின் மகிழ்ச்சி அனுபவம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புத்தக கண்காட்சியில், கடந்த ௧௨ நாட்களும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று, காலையிலேயே வந்து, வரிசையில் காத்திருந்து, அரங்கில் நுழைந்தவர்களில், பெரும்பாலானோர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். அவர்களில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அதிகம்.அவர்களிடம் பேசியதில் இருந்து... முருகவல்லி, 6ம் வகுப்பு மாணவி, ஆத்தனஞ்சேரி அரசு காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தனஞ்சேரி அரசு மேல் நிலைப்பள்ளி யின், ஆறாம் வகுப்பு மாணவி முருகவல்லி கூறுகையில்,''எங்க, பள்ளியில, ஒவ்வொரு தலைவர் பிறந்த நாளுக்கும் பேச்சு போட்டிகள் நடக்கும். அதுல, சரோஜினி நாயுடு, காந்தி, நேரு பிறந்த நாட்கள்ல கலந்துக்கிட்டு, பரிசுகள் வாங்கி இருக்கேன். இந்த புத்தக காட்சியில, தெனாலிராமன், பீர்பால் கதைகள், தலைவர்களோட புத்தகங்களை வாங்கலாம்னு இருக்கேன்,'' என்றார். மற்றொரு மாணவி யாஷிகா கூறுகையில்,''எங்க பள்ளி நுாலகத்திலேயே அதிக புத்தகங்களை நான் படிச்சிருக்கேன்னு, கடந்த ஆண்டு, எனக்கு, பரிசு வழங்கினாங்க. இந்த புத்தக காட்சியில, விக்கிரமாதித்தன், அறிவியல் அறிஞர்களோட கதைகளையும், திருக்குறள், அகராதி ஆகியவற்றையும் வாங்க திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.ஒரு அரங்கில், மும்முரமாக புத்தக வேட்டையில் ஈடுபட்டு இருந்த தோழிகளிடம் பேசினோம். 'நாங்க, அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் இருந்து வந்திருக்கோம். 8ம் வகுப்பு படிக்கிறோம். எங்களோட, எங்க ஆசிரியர்களும் வந்திருக்காங்க' என்றனர். முதலில், பொற்கோதை கூறுகையில்,''நான், நிறைய படிச்சிருக்கேன். சேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் த கால் சென்டர்', எனிட் பிளைட்டோனின், 'சீக்ரெட் 7, பேமஸ் 5', ஜெரோனிமோ ஸ்டில்டன் வரிசைகளையும் வாங்க திட்டமிட்டுள்ளேன். புத்தகம் படிக்கும் போது, சிறகு முளைக்கிற மாதிரியும், எங்கேயோ பறக்கற மாதிரியும் இருக்கும்,'' என்றார். ''நானும், ஜெரோனிமோ ஸ்டில்டன், சேத்தன் பகத், எனிட் பிளைட்டன், ஷேக்ஸ்பியர் நுால்களை வாங்க வந்துள்ளேன். ஆனால், பொற்கோதை வாங்கிய புத்தகங்களை, கண்டிப்பாக வாங்க மாட்டேன். நாங்கள் எல்லோரும், வெவ்வேறு புத்தகங்களை வாங்கி, படித்து விட்டு, எங்களுக்குள் மாற்றிக் கொள்வோம்,'' என்றார், ஷிவிஷா. அதையே வழிமொழிந்து விட்டு, ''என் பங்குக்கு, புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்குவேன். அதாவது, நான் இதுவரை படிக்காத எழுத்தாளரின் படைப்புகளை,'' என்றார், பிரத்யங்கிரா. இவர்கள், அனைவரும் சொன்ன ஒரு நெருடலான தகவல், ''எங்களுக்கு, தமிழ் அவ்வளவாக தெரியாது. அதனால், தமிழ் புத்தகங்களை வாங்க போவதுஇல்லை,'' என்பது தான். மும்முரமாக, புத்தகங்களை கலைத்து போட்டு தேடிக்கொண்டு இருந்த, ஐந்து வயது ஆதித்யாவிடம் பேசினோம். அவர் கூறிய தாவது: இப்போது தான், முதல் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். எனக்கு, அம்மா, பாட்டி எல்லாம், நிறைய கதை சொல்வாங்க. எனக்கும், கதைன்னா, ரொம்ப பிடிக்கும். இது வரைக்கும், 'ஸ்டோரீஸ் ஆப் பஞ்சதந்திரா, தெனாலிராமன், த்ரீ ஸில்லி கோட்ஸ்' ஆகியவற்றை படிச்சிருக்கேன். இப்போ, 'டைரி ஆப் விம்பி கிட், கான் சீக்வென்செஸ், தெனாலி ராமன், தி மவுஸ் அண்டு தி லயன், மங்கூஸ், மேக்கிங் ஆப் எ லயன், பஞ்சதந்திரா கதைகளை எடுத்து இருக்கேன். இன்னும், நிறைய காமிக்ஸ் வாங்கணும். இவ்வாறு கூறிவிட்டு சிறுவன் ஆதித்யா, மீண்டும் புத்தகங்களை புரட்ட துவங்கினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.