-குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா?| Dinamalar

-குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா?

Updated : ஜன 20, 2015 | Added : ஜன 20, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள். கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன.தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:இங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.குழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும். ஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்? எழுத்தாளர்கள், எழுத முன்வருவர்? குழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

உருக வைத்தது உடையார் நாவல்!
என் அம்மா, எழுத்தாளர் பாலகுமாரனின் விசிறி. அவர் எழுதிய அத்தனை நுால்களையும், அவர் தேடிப்பிடித்து வாங்குவார். அம்மா மூலம் தான், எனக்கு பாலகுமாரனின் எழுத்துக்கள் அறிமுகமாயின. அவரின் எழுத்துக்கள், இயல்பாக நம்மை இடமாற்றம் செய்து விடும். சிறுகதைகள், நாவல்கள் என, எல்லாவற்றிலும் அவர் செய்யும் எளிய ஜாலங்கள் நம்மை கரைக்கும். கடந்த ஆண்டு புத்தக திருவிழாவில், உடையார் நாவலை வாங்கினோம். அதில், ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவிலை கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்கு ஏற்பட்ட தடைகளும் விளக்கப்பட்டிருக்கும். அந்த கதையில் மனம் உருகி விட்டது.


செ.தீபாவர்ஷாகணினி பொறியியல் மாணவி


புத்தகங்கள் கற்பனையை வளர்க்கும்!
எனக்கு, ஷெர்லாக் ஹோம்ஸ் எழுதிய துப்பறியும் நாவல்கள் பிடிக்கும். அவை, நுட்பமான அறிவை பயன்படுத்தி, சிக்கலான குற்றங்களின் பின்னணியினை அலசும். அதனால், படிக்கும் போது தொய்வில்லாமல், ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கும். நான், விசித்திர கதைகளையும் விரும்பி படிப்பேன். அவை, நம்மை வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும். அவற்றில் வரும், மாயாஜாலங்கள், பாரம்பரிய நம்பிக்கைகள் என, பல்வேறு தகவல்கள் நம் ஆச்சரியத்தை அதிகரிக்கும். பொதுவாக, கதைகளை படிக்கும் போது, நம் வசதிக்கேற்ப கதாபாத்திரங்களையும், காட்சி பின்னணியையும் உருவாக்கி கொள்ள முடியும். அதனால், நம் கற்பனை சிதைந்து விடுவதில்லை.


நா.ரோஷினி6ம் வகுப்பு, வேலம்மாள் மேல்நிலை பள்ளி, அயனம்பாக்கம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X