வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ': - ஆர்.முருகேசன்| Dinamalar

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ': - ஆர்.முருகேசன்

Added : ஜன 23, 2015 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ':  - ஆர்.முருகேசன்

பழந்தமிழ் நாட்டில் மாதம் 3 முறை தவறாது மழை பெய்ததாக நாம் இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே அறிகிறோம். இன்று, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளைச்சல் கண்டாலே மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இன்றைக்கு அதிக செலவு பிடிக்கும் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது.

விவசாயம் நலிவடைய காரணம் மழை இன்மையே. மழை பொய்த்து போக கருவேலமரம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மரங்களால் ஒரு சிலரின் வாழ்வாதாரம் சிறப்படையலாம். ஆனால், அடுத்த தலைமுறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு.


மழை பொழிவு குறையும்:

'சாத்தான் மரம்' (டெவில் ட்ரீ) என சில நாடுகளில் கருதப்படும் இந்த சீமைக்கருவேல மரத்தின் தாவரவியல் பெயர், 'புரோஸோபிஸ் ஜூலிபுளொரா'. 'பேபேஸி' என்ற தாவரவியல் குடும்ப வகையைச் சேர்ந்த இது, 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் நிலத்தடி தண்ணீரை தேடித்தேடி உறிஞ்சி விடும். நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும். எங்கெல்லாம் கருவேலமரங்கள் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் மழைப் பொழிவு குறைந்து விடும். ஆங்கிலேயர் ஆட்சியில் 1876ல் அப்போதைய மாகாணத்தின் தலைமை வனத்துறை தலைவராக இருந்த பெட்டோர்ன் என்பவரால் இந்தியாவில் சீமைக்கருவேல மரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் உட்பட தென்மாவட்டங்களில் 1960ல் தான் இந்த விதை தூவப்பட்டது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 4.50 லட்சம் எக்டேர் நிலத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.50 லட்சம் எக்டேர் நிலத்திலும் பரவியுள்ளது. ஆரம்பத்தில், தரிசு நிலங்கள் பசுமையாக வேண்டும் என்ற நோக்கத்தில் பரவச் செய்யப்பட்டது. ஆனால், பின்பு தரிசு நிலம் மட்டுமல்லாது விளை நிலங்களிலும் வளர்ந்து மற்ற தாவரங்களின் வளர்ச்சியை தடுத்து மண் வளத்தையும் அழித்து விட்டது, இந்த கருவேலமரம். பாலைவனமாக மாற்றும் மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் ஆகியவற்தை தாயகமாக கொண்ட இவை தற்போது இந்தியா, இலங்கை, சோமாலியா, எத்தியோபியா உள்ளிட்ட நாடுகளில் பரவி, அங்கெல்லாம் வறட்சியை வரவழைத்து பாலைவனமாக மாற்றி வருகிறது. இந்த மரம் வளரும் இடங்களில் மற்ற தாவரங்கள் வளராது. மண்ணை உவர் நிலம் ஆக்கி விடும். உவர் நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கூட விளையாது. கால்நடைகளின் கழிவுகள் கிடைக்கப்பெறாத மண், மலடாகி வளம் குன்றிவிடும். இந்த மரம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனங்களில் வன்மங்களும், கொடிய சிந்தனைகளுமே மேலோங்கி இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் விழிப்புணர்வு:

இந்த மரத்தை 'வளரக்கூடாத நச்சு மரங்கள்' பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்தியாவில், கேரள அரசு இந்த மரத்தை தடை செய்துள்ளது. அங்கு இந்த மரத்தை பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இப்போது தான் இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், 'வைகை ஆறு மற்றும் பிரதான நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை ஒழிக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படி 'பார்த்தீனியம்' என்ற விஷச்செடியின் விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையுடன் கலந்து, நாடு முழுவதும் பரப்பப்பட்டதோ, அது போல் வறட்சி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, மேலை நாடுகளின் திட்டப்படியே இந்த மரத்தின் விதைகள் இந்தியாவில் பரப்பப்பட்டது. அதன் விளைவு, நீடித்த வறட்சி ஏற்பட்டு மண் வளமும் குன்றி விவசாயம் நலிவடைந்து விட்டது. இதனை அழிக்க இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர வேண்டும். என்.எஸ்.எஸ்., முகாம்கள் மூலமாக இந்த மரம் அழிப்பு பணியில் ஈடுபடலாம். சேவை சங்கங்கள் கிராமங்களை தத்தெடுப்பதன் மூலமாகவும் இதனை அழிக்கலாம். பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் போல் கருவேல மரம் ஒழிப்பு இயக்கத்தை கையில் எடுக்க வேண்டும். இம்மரங்களை முற்றிலும் ஒழித்து விட்ட கிராமங்களை கண்டறிந்து குடியரசு தின விழாக்களில், கலெக்டர்கள் பரிசளிக்க வேண்டும். சிந்தனையாளர்களும், மனிதாபிமானிகளும், நீதிமான்களும், ஆட்சியாளர்களும் ஒரே நாளில் ஒன்று சேர்ந்து திட்டம் வகுத்து மனித குல சீரழிவிற்கு காரணமான கருவேல மரங்களை 'வேர் அறுக்க' வேண்டும். அது ஒன்றே மனித குலத்திற்கு, நீர்வளத்திற்கு செய்யும் பெரிய தொண்டு.

- ஆர்.முருகேசன்.
தலைவர்,
தரணி விவசாய ஆராய்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்.
94434 65991

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Rajabather - Jahra,குவைத்
24-ஜன-201518:18:33 IST Report Abuse
Baskaran Rajabather நம்மால் ஆனா தொண்டு கண்டிப்பாக செய்யணும்.
Rate this:
Share this comment
Cancel
தமாஷ் சிங்கம் - mumbai,இந்தியா
24-ஜன-201513:50:06 IST Report Abuse
தமாஷ் சிங்கம் இங்கு ஒரு வாசகர் குறிபிட்டது போல இது ஒன்றும் தெரியாமல் ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டு வரப்பட்டது அல்ல . எல்லையில்லா விவசாய பரப்பை கொண்ட தமிழ் நாட்டில் , இங்குள்ள விவசாயத்தை அழித்தாலே இம் மக்களை நிரந்தர அடிமையாக வும் வறுமையிலும் வைத்திருக்க முடியும் என்று உணர்ந்த அபோதைய ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு பரப்பிய ஒன்று தான் கருவேல மரம். இதில் பறவைகள் கூட கூடு கட்டுவது இல்லை, காரணம் சந்ததி விருத்தி ஆகாது என்பதை உணர்ந்ததால். இந்த மரத்தை நீங்கள் கேரளா, கர்நாடக, மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பார்க்கமுடியாது . என்னுடைய வாகனத்தின் பின்புற கண்ணாடியில் நான் எழுதி இருக்கும் வாசகம் இது " கருவேல மரத்தை கருவறுப்போம் , நிலத்தடி நீரை வளர்ப்போம் " என்பது. தமிழ் நாட்டில் மீண்டும் பசுமை புரட்சியை உருவாக பாடுபடும் தினமலருக்கு மிகவும் நன்றி . வாருங்கள் மீண்டும் வசந்தத்தை உருவாக்குவோம் .
Rate this:
Share this comment
thevar - Scarborough,கனடா
12-பிப்-201505:54:31 IST Report Abuse
thevarசபாஷ். நானும் இந்த முள் செடியை கேரளாவில் பார்த்ததில்லை. தமிழகத்தில் மக்கள் புரட்சியாக இந்த முள் மரம் ஒழிக்கப் பட வேண்டும். இதை செய்ய முன் வரும் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். இந்த மரத்தில் பறவைகள் கூடு கட்டாது. தாமிர பரணி ஒரு வற்றாத ஜீவநதி- அங்கு நதிக்கரை முழுவதும் இந்த மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பது- சாராயம் காச்சுவொர்க்கு பாது காப்பாக-அரசியல் வாதிகள் இவைகளைப் பாது காக்கின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
NALLA THAMBI - RAIPUR,இந்தியா
24-ஜன-201511:05:20 IST Report Abuse
NALLA THAMBI சீமைக் கருவேல மர ஒழிப்பை அரசும் சட்டம் மூலம் செய்ய வேண்டும் . அதைவிட இதை மக்கள் ஒரு தீவிர இயக்கமாகவே செய்து ஒழித்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது . நீராதத்திற்கு எதிரான இந்த விஷ மரம் ஒழிக்கப் பட அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
24-ஜன-201508:54:12 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நல்லா சொன்னீங்க, சிவகங்கை மாவட்டமே மழை மறைவு பிரதேசம் ஆனது இதனால் தான் என்று பல நாட்களுக்கு முன்னர் நான் எழுதியதை இப்போ நினைவு கூறுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
24-ஜன-201508:32:00 IST Report Abuse
ரத்தினம் மொதல்ல தமிழக அரசு சாராயக்கடைங்களை எல்லாம் மூடி விட்டுட்டு அந்த ஊழியர்களை நாடு முழுதும் கருவேல மரம் ஒழிப்பு, பிளாஸ்டிக் இல்லாமல் சுத்தப்படுத்துதல், மரம் வளக்குரதுக்குன்னு மாத்தி விடுங்க
Rate this:
Share this comment
Cancel
SANKARRAJ.S - MUSACT,ஓமன்
24-ஜன-201508:17:40 IST Report Abuse
SANKARRAJ.S அரசு நினைத்தால் ஓராண்டுக்குள் இந்த மரமே இல்லாமல் செய்து விடலாம். அறிக்கைகளும் கட்டுரைகளும் எந்த பலனும் தரப்போவதில்லை. மாறாக விவசாயிகளை இந்த விசயத்தில் தொந்தரவு செய்யாமல் அரசும் அதிகாரிகளும் இருக்கவேண்டும் ஏனெனில் ஏழை விவசாயிகளோ மக்களோ இதற்க்கு கரணம் இல்லை. அரசுதான் இந்த திட்டத்தை செயல்படுத்தி நம் மண்ணை நாசப்படுதியிருக்கிறது. இதற்க்கு பிராயச்சித்தமாக அரசே விரைவில் இப்படியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
24-ஜன-201507:18:47 IST Report Abuse
N.Purushothaman தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் என அனைவரும் ஒரு நாள் கூடி வாரத்தில் ஒரு நாள் செய்தாலே போதும்...நிச்சயம் அழிக்கப்பட்டு விடும்..
Rate this:
Share this comment
Cancel
Ethiraju Ramasamy - chennai,இந்தியா
24-ஜன-201506:16:53 IST Report Abuse
Ethiraju Ramasamy தங்களின் இந்த அறிவிப்பு எதோ சொன்னதை சொல்லிவிட்டோம் அதை ஏற்பவர்கள் நன்மை அடைவார்கள் மற்றவர்கள் விட்டுவிடுவார்கள் என்று இருக்ககூடாது .அரசாங்கமே இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்து சட்டம் இயற்ற வேண்டும் .விவசாய பட்டா நிலங்களில் இந்த மரம் இருந்தால் அந்த நிலத்தின் உரிமையாளருக்கு கிராம நிர்வாக அதிகாரிமூலம் நோட்டீஸ் கொடுத்து குறிப்பிட்ட சில தினங்களில் இந்த தாவரத்தை அழிக்க கட்டளை இட வேண்டும் .தரிசு மற்றும் புறம்போக்குகளில் இது வளர்ந்து இருந்தால் சம்பப்தப்பட்ட பஞ்சாயத்து மூலம் இது வளர்வது மற்றும் பரவுவதை தடுக்கவேண்டும் .மக்களுக்கு தீங்குசெய்யும் எந்தஒரு தாவரமும் வளர விடக்கூடாது .தீவிரமான நடவடிக்கையின் மூலமே இதை கட்டுபடுத்தமுடியும் .பரிசு எல்லாம் யார் வேகமாக செயல்பட்டு இந்த தாவரத்தை அழிகின்றனரோ அவர்களுக்கு கொடுக்கலாம் .முதலில் நமது அரசாங்கம் போகால நடவடிக்கையில் இந்த தாவரம் பரவுவதை தடுக்கவேண்டும் .தமிழகம் வளர்ச்சி பெற இந்த கருத்தை எடுத்துரைத்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
24-ஜன-201505:45:11 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கருவேலங்காட்டுலே மழைக்கே வாய்ப்பிலேன்னு சொல்லுவாங்க. அந்தகாலத்துலே பாலா விவாசாயிங்கா பூமியின் நிலத்தடிநீரையே உறிஞ்சி அழிச்சுரும் வல்லமை இந்ததாவரத்துக்கு ,கண்ட இடத்துலே அழிக்கனும்னு சொல்லுவாங்க்காலே உண்டு
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
24-ஜன-201503:10:47 IST Report Abuse
கதிரழகன், SSLC செய்யற காரியம் நல்ல காரியந்தான், ஆனா சும்மா தேவை இல்லாம வெள்ளக்காரன தாக்குறாரு. வெள்ளக்காரன் கோவில்பட்டி பருத்திய ஏற்றுமதி செய்ய தூத்துக்குடிக்கு ரயில் போட்டான். மக்களுக்கா போட்டான்? பருத்திக்குப் போட்டான். ஆசுபத்திரி பள்ளிகூடம் காலேஜு எல்லாம் மத மாற்றம் செய்யப் போட்டான், அதையெல்லாம் பெருசா புகழவும் வேண்டாம், இந்த கருவேலமரம் தெரியாமப் போட்டான் அந்த காலத்துல. அதுக்கு இடிக்கவும் வேண்டாம். தெரியுமா? உருளைக் கெழங்கு, தக்காளி, பச்ச மொளகா எல்லாம் அவன் கொண்டு வந்ததுதான். சுத்தமான பழந்தமிழர் சாப்பாடு எப்படி இருந்ததுன்னு பாக்கணுமா? பிராமணர்கள் திதி கொடுக்கரபோது செய்யற சமையலப் பாருங்கவே. வருஷத்துக்கு ஒரு தடவ வெள்ளக்காரன் ஐநூறு வருஷம் முன்னாடி கொண்டுவந்த காய்கறி எதுவும் இல்லாம சமைப்பாங்க. ஆனா சொந்தக் காரங்களத் தவிர வெளி ஆளுங்களுக்கு கண்ணுல கூட காட்ட மாட்டாங்க. கேட்டு பாருங்க சொல்லுவாங்க எந்த காயெல்லாம் தெவச சாப்பாட்டுல சேக்க கூடாதுன்னு.
Rate this:
Share this comment
Raj - London,யுனைடெட் கிங்டம்
24-ஜன-201514:52:13 IST Report Abuse
RajHello Mr.Kathir Azagan, Your comments are SPOT ONand it is sprayed with hidden facts which is an eye er for all readers. Thanks once again Best wishes Raj from London...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை