நான் கண்ட நல்ல முதல்வர்!| Dinamalar

நான் கண்ட நல்ல முதல்வர்!

Added : ஜன 25, 2015 | கருத்துகள் (10)
Advertisement
நான் கண்ட நல்ல முதல்வர்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1957 ல், நான் பணியில் சேர்ந்தேன். பி.டி.ஓ. அலுவலகம், சமூக நல வாரியம், பெண் ஒருவரும், நானும் பணியில் அமர்த்தப்பட்டோம். மாதம் 100 ரூபாய் சம்பளம்; 10 ரூபாய் இதர அலவன்ஸ். தற்காலிகமான பணி என்று பணி ஆணை பிறப்பித்தார்கள்.நான் தளவாய்பட்டினம் என்ற கிராமத்தையும், அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள கிராமங்களுக்கு இருவருமாகச் சென்று சுத்தம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று, கிராம மணியக்காரர் மூலம் தகவல் கூறி, கிராமம், கிராமமாக சென்று செய்த பணியினை, தினமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.மாதம் ஒரு முறை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்து அறிவுரை வழங்குவார்கள். எங்களது சம்பள பட்டியலை பெற்று, தாராபுரம் மாவட்ட கருவூலத்தில் பணம் பெற்றுக்கொள்வோம்.கோவையிலுள்ள விவசாயக் கல்லுாரியில், ஒரு விழாவினை துவக்கி வைக்கவும், பார்வையிடவும், அந்நாள் முதலமைச்சர் காமராஜ் அய்யா வந்தார்கள். சாதாரண அரசு ஜீப்பில், முன்னதாக உட்கார்ந்து கொண்டு, வெள்ளை கதர் சட்டை, வேஷ்டியுடன் கம்பீரமாக வந்து இறங்கினார்.இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் 4-5 காவலர்கள் மட்டும் முன்னும், பின்னும் நடந்து வந்தார்கள். கல்லுாரியில் விழாவினை துவக்கி வைத்து, மக்களுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகளும், கலந்து கொண்டு, விழா முடிந்ததும் விடைபெற்றனர்.அங்கு முதல்வருக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. முதல்வர் வந்து இருக்கையில் அமர்ந்தார். அத்தனை அதிகாரிகளும் என்ன கேட்பாரோ என்று, மனதில் ஒருவித பய உணர்வுடன் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் அய்யா தனது இருக்கையில் அமர்ந்து, பரிமாறப்பட்டிருந்த அனைத்து உணவு வகைகளையும் பார்த்து, புன் முறுவல் செய்த வண்ணம், அங்கிருந்த மாவட்ட ஆட்சியரை பார்த்து, என்னை ஜீப்பில் வைத்து, இங்கு பாதுகாப்பாக ஓட்டி வந்த ஜீப் ஓட்டுனர் எங்கே? என்று கேட்டார்.அவர் வெளியில் நின்று கொண்டு இருந்தார் போலும். மாவட்ட ஆட்சியர் விழித்தார்; பதில் சொல்ல முடியவில்லை. அடுத்து, அவருக்கு உணவு கொடுத்து சாப்பிட வைத்தார்களா? என்று கேட்டார். அனைவரும் பதில் சொல்ல முடியவில்லை. 'என்னை பத்திரமாக ஜீப்பில் வைத்து ஓட்டிவரும் ஓட்டுனருக்குத்தான், முதலில் சாப்பாடு கொடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளே வந்த ஓட்டுனரை, அங்குள்ள ஒரு மேஜையில் உட்கார வைத்து, 'சாப்பிடும் அய்யா' என்று கூறிவிட்டு, தனது இலையில் வைத்திருந்த உணவை சுவைக்க ஆரம்பித்தார்.இவரல்லவா அருமை முதல்வர்!- கட்டுரையாளர்: டி.சின்னப்பன் ( ஓய்வு பெற்ற அரசு அலுவலர், கோவை)மொபைல் எண்: 9360336014

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iyer naagarazan - Chennai,இந்தியா
05-பிப்-201506:39:43 IST Report Abuse
iyer naagarazan தி மு க ஆட்சிக்காலத்தில் திரு. கோவிந்தசுவாமி என்ற மந்திரி ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அவர் மேடையில் இருந்தார். அந்த மாவட்ட கலெக்டர் கிழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். மந்திரி அதை பார்த்ததும் மேடைக்கு அழைத்து வர சொல்லி முதல் வரிசையில் அமர்த்தினார். அந்த மாவட்டத்தின் முதல்வர் என்ற மரியாதையை உறுதி செய்தார். கோவிந்தச்வாமியைப் போல் எளிமையான மந்திரியை காணுதல் மிக அரிது.
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
26-ஜன-201501:59:26 IST Report Abuse
Muthukumaran ஆனாலும் அந்த நல்லவரை தோற்கடித்தோம். மஞ்சள் துண்டாரை மட்டும் தொடர்ந்து ஜெயிக்க வைக்கறோமே? அது எப்படி?
Rate this:
Share this comment
Cancel
pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்
25-ஜன-201520:17:19 IST Report Abuse
pradeban தெய்வம் எப்போதாவது மட்டும் தான் மனிதர்களுக்கு காட்சி தரும் போலும் .அந்த தெய்வ பிறவியே அலஹாபாத் வங்கியில் அக்கௌண்டில் ஊழல் செய்த பணம் வைத்திருக்கிறார் என்று சொன்ன புனிதர்களின் மத்தியில் இப்போது வாழ்கிறோம் .அவர் பாவமெல்லாம் இவர்களை சும்மா விடாது
Rate this:
Share this comment
Cancel
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
25-ஜன-201520:05:14 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. கர்ம வீரர் காமராஜருக்கு ஈடு இணை யாருமே கிடையாது. மனிதாபிமானமும் - மக்களுக்காக எப்போதும் சிந்திக்கும் மனமும் - தொலைநோக்கு பார்வையும் - கல்விதான் நாட்டை உயர்த்தும் என்று உறுதியான நம்பிக்கையுடன் கல்விக்கண்ணை ஏழை எளிய மக்களுக்கு திறந்து வைத்த மகான் தன்னலம் இல்லாத - பிறர் வாழ வழி காட்டியவர் - மக்களின் சேவைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர் பெருந்தலைவரின் புகழ் இந்த வையம் உள்ளவரை நீடித்து இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
25-ஜன-201514:15:10 IST Report Abuse
rajarajan தன்னலமற்ற கர்மவீரர் காமராஜரை ஒரு சாதிக்குள்ளும் ஒரு கட்சிக்குள்ளும் அடைக்க பார்க்கும் இந்த சமூகம் திருந்த வேண்டும் .
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
26-ஜன-201503:14:10 IST Report Abuse
Anandanதமிழகத்தில் ஜாதி பற்று எப்போதும் உண்டு. அதனால்தான் அவர் சாராத இனத்தை சேர்ந்தவரை நிறுத்தி அவரை தோற்கடித்தனர் திமுக. அந்த இன மக்கள் அவர்களுடைய இனத்தவருக்கு ஒட்டு போடுவதை பெருமையாக நினைத்தனர். இன்று தமிழகமே அவதி படுகிறது. இந்த இரண்டு கழகங்களிடையே மாட்டிகொண்டு....
Rate this:
Share this comment
Cancel
Subash R - Trichy,இந்தியா
25-ஜன-201512:35:10 IST Report Abuse
Subash R காமராஜருக்கு நிகர் காமராஜர் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
V.R.N - Tiruchy,இந்தியா
25-ஜன-201512:21:03 IST Report Abuse
V.R.N மனிதருக்குள் மாணிக்கம். இந்த ஆண்டவன் இவர்கலுக்கு மட்டும் ஆயுளை குறைத்து விடுகிறான் ஏன் என்றே தெரியவில்லை. மக்கள் நன்மை அடைந்து விடுவார்கள் என்றா புரியவில்லை மற்றவர்கள் ஆயுளில் கொஞ்சம் அவருக்கு கொடுக்கலாம் என்ற நிலை இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கனோர் ஒரு வருடம் என்று கொடுத்திருப்பார்கள் அவருக்கு அழிவே இல்லை இந்த சமுதாயம் இன்னும் நலம் பெற்றிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
25-ஜன-201511:28:29 IST Report Abuse
N.Purushothaman தமிழகத்தில் கர்மவீரர் என்றால் அவர் ஒருவர் மட்டும் தான்...
Rate this:
Share this comment
Cancel
shanmuganathan - mayiladuthurai ,இந்தியா
25-ஜன-201509:35:44 IST Report Abuse
shanmuganathan நான் உலகை உணர்ந்த பின் எந்த முதல்வரும் என்னை கவர வில்லை காமராஜர் காலத்தை பற்றி கேட்டு இருக்கிறேன் களத்தில் உணரவில்லை பொற்காலங்கள் கனவுகள்தானா ?கனவுகள் மெய்ப்படாதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை