காலங்கள் தோறும் காந்தி: இன்று தியாகிகள் தினம்| Dinamalar

காலங்கள் தோறும் காந்தி: இன்று தியாகிகள் தினம்

Added : ஜன 29, 2015 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
காலங்கள் தோறும் காந்தி: இன்று தியாகிகள் தினம்

"கடவுள் என் முன்னே தோன்றி உனக்கொரு வரம் தரப்போகிறேன்! என்ன வேண்டும் கேள் என்றுகேட்டால்! என் வாழ்நாளில் மறைந்த இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியுடன் ஒருநாள் இரவு உணவருந்த வேண்டும் என்று கேட்பேன்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் பதிலளித்தார் பராக் ஒபாமா.ஆயுத உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் வல்லரசு நாட்டின் தலைவர் ஒருவர் மூன்றாவது காலாக கைத்தடியை மட்டுமே வைத்துக் கொண்டு, அங்குமிங்கும் இந்திய மண்ணின் விடுதலைக்காக ஓடிக்கொண்டிருந்த அந்த மனிதரைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார் எனில் அந்த அரையாடைத் துறவி நம்மைவிட்டு மறையவில்லை. கடல் கடந்து காலம் கடந்து இனம், மொழி, மதம் என எல்லாவற்றையும் கடந்து இன்றும் உலகின் வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.


காந்தி வணங்கிய கடவுள்:

உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு காந்திக்கு மட்டும் எப்படி என எண்ணும் போது அவரின் வாழ்க்கை நிகழ்வுகளே அதற்கான பதில்களாக விரிகின்றன. போர்பந்தரில் பிறந்த காந்தி ஆயுத போர்களை நம்பாதவர். 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அகிம்சை சத்தியாகிரகம் என்ற தத்துவங்களை நவீன காலத்தில் வெற்றிகரமாக மறு நிர்மாணம் செய்து உலக மக்களைக் கவர்ந்தவர். "சத்தியமே அவரின் மதம். அன்பு அறவழி ஒழுக்கம்; மனசாட்சி இவையே அவர் வணங்கிய கடவுள்கள்”. வழக்கறிஞராக தான் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் தாய் நாட்டின் விடுதலை வேள்விக்கு காணிக்கையாக வழங்கிய வள்ளல் நம் காந்தி! ஒத்துழையாமை இயக்கப்போராட்டம் வெற்றிகரமாக நடை பெறவேண்டுமென்றும; அதேவேளையில் சாமானிய ஏழைமக்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் திலகர் நினைவு நிதி வசூலிக்க உண்டியல் குலுக்கிய தன்னலமற்ற மனிதர்! இதன் மூலம் எங்களை எவரும் அசைக்க இயலாது என்று ஆணவத்துடன் எக்காள முழக்கமிட்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அரியாசனத்தை அசைத்த முதல் மனிதர். இதில் சிலருக்கு மாற்றுக் கருத்தும் உண்டு. ஆனால் முதல் சந்திப்பிலேயே முரண்பட்டு காந்தியக் கொள்கையை நிராகரித்த தேசியநாயகன் நேதாஜி, காந்தியின் போராட்ட வலிமையையும் தாய் நாட்டின் விடுதலைக்காக காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றமக்கள் சக்தியையும் பார்த்து, 'தேசத்தந்தை' என அழைத்தார். இதுவே காந்தியின் போராட்டங்களுக்கான அங்கீகாரம். பாரதியின் வரிகளைத் தொட்டுச் சொல்வதானால் "நரைகூடிக்கிழப்பருவமெய்திய”பின்னரும் "குன்றென நிமிர்ந்து நின்று” உள்ளத்தில் போராட்ட உணர்வோடு 30 கோடி இந்தியர்களை தன்னுள் அடக்கி வைத்திருந்தவர் காந்தி.


காந்தி விரும்பிய பொது வாழ்வு:

உடல் உழைப்பு சிறுமை; மூளை உழைப்பே உயர்வு என்ற மேல்த்தட்டு சிந்தனையை முற்றிலுமாக நிராகரித்த காந்தி தனது சர்வோதயா சமூகத்தில் மூளை உழைப்பாளர்களும் கண்டிப்பாக உடல் உழைப்பை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். உடல் உழைப்பும் மூளை உழைப்பும் சேரும் போதுதான் தனிமனித வளர்ச்சி மற்றும் சமூகவளர்ச்சி சாத்தியம் என்று விளக்கினார். "எல்லோரும் சரிநிகர் சமம்” என்ற உணர்வு அனைவரிடமும் ஏற்படவேண்டும் என்று விரும்பிய காந்தி எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஏழ்மையான வாழ்க்கையை வெறுத்தார். நாமே விரும்பி தேவைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து ஏழ்மையை விரட்டமுடியும் என்று நம்பினார். இன்றுள்ளதுபோல் நகரங்கள் கிராமங்களைச் சுரண்டும் நிலை ஏற்பட கூடாதென்று, தான் கனவுகண்ட பொதுவாழ்வு சமூகத்தை கிராமிய நாகரிகத்தால் கட்டமைக்க விரும்பியவரே நமது காந்தி.


காந்தி விரும்பிய கல்வி:

ஆங்கில அரசு 1835-ல் புகுத்திய கிளார்க்குகளை உருவாக்கும் கல்வி முறைதான் 2015-ம் ஆண்டிலும் சில மாற்றங்களுடன் தொடர்ந்து பின் பற்றப்படுகிறது. ஆங்கில அரசின் மெக்காலே கல்வித் திட்டத்தின் சீர்கேடுகளை காந்தி தெளிவாகவேஅறிந்திருந்தார். அது நமது கலாச்சார பண்பாட்டு வேர்களிலும் ஆழமாக வேரூன்றி நம் முன்னோர்களின் அடையாளங்களை மறைத்து விடும் என்று உணர்ந்தார். ஆங்கிலக் கல்வி முறை நேரடியான சமுதாய சூழ்நிலைகளிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் நமது குழந்தைகளைப் பிரித்துவிடுகின்றது என்றும் இதனால் மாணவர்கள் உள்ளத்தில் சமுதாய உணர்வு வளராமல் போகும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். "உண்மையான கல்வி என்பது தனிமனிதனின் மனதில் பண்பு, ஞானம், பொறுமை, உண்மை ஆகியவற்றை விதைப்பதில் அடங்கியிருக்கிறதே தவிர இலக்கிய பயிற்சியில் இல்லை” என்று சிறந்தகல்விக்கு இலக்கணம் கூறியவர் காந்தி.

"அகிம்சையை நேசித்து ஆணவத்தை எதிர்த்து சத்தியம் என்ற உண்மையைக் கடைப்பிடித்து சரித்திரமாய் ஒருவர் இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்துள்ளார்” என்பதையே இன்றைய பெரும்பாலான இளைய தலை முறை நம்ப மறுக்கிறது. "காந்தியவாதம்”அவர்களுக்கு இன்று கசப்பு மருந்தாகிப் போனது. இனிப்பை மட்டுமே சுவைக்க விரும்பி பழகிவிட்ட இன்றைய இளைய தலைமுறைக்கு"காந்திய சித்தாந்தம்”என்ற மருந்து கசந்தாலும் அதை நிச்சயம் அருந்த வேண்டியகாலம் வரும். அப்பொழுது இந்தப் புனித மண்ணில் எண்ணற்ற காந்திகள் தோன்றுவர்.

- முனைவர் .சி.செல்லப்பாண்டியன், உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை. 78108 41550

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shivarama Subramanian - Chromepet,இந்தியா
31-ஜன-201517:20:41 IST Report Abuse
Shivarama Subramanian தேச தந்தையின் சிந்தனை இன்றைய தலைவர்களிடம் இல்லை.. எங்கள் தலைமுறை இப்படி அவஸ்தை பட்டாலும் பரவாயில்லை.. வரும் தலைமுறையினருக்கு தேச தந்தையின் கனவை பகிருங்கள்.. மீண்டும் காந்தியம் மெல்ல மெல்ல வளரும்.. அதற்கு முன் இங்குள்ள காங்.. மற்றும் உடைந்த இந்த மற்ற கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.. அன்று உண்மையனே காந்தியம் உதயமாகும்..
Rate this:
Share this comment
Cancel
Naga chennai - chennai,இந்தியா
30-ஜன-201519:18:49 IST Report Abuse
Naga chennai Absolutely, true comment.whites brilliant infinite year planning (till human disappear from this planet) still working.we would have been very strong if pakistan is one of our state.......
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
30-ஜன-201517:06:21 IST Report Abuse
Tamilnesan உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தபால் தலை வெளியிட்டது மகாத்மா ஒருவருக்கு தான். இன்றைய தேதி வரை உலகில் உள்ள வேறு எந்த தலைவருமே இந்த சிறப்பு பெறவில்லை. மேலும், தமிழ் நாட்டில் அப்போது இருந்த சில திராவிட தலைவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ்காரர்களிடம் சொல்லி உள்ளார்கள். இவை எல்லாம் வரலாற்று பதிவுகள். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Venkataraman Subramanian - Chennai,இந்தியா
30-ஜன-201516:42:38 IST Report Abuse
Venkataraman Subramanian கர்மத்தை செய், பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாசகத்தின் படியே மகாத்மா காந்தி வாழ்ந்தார். இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று நாடே விடுதலை அடைந்ததை கொண்டாடியபோது, நாட்டின் அப்போது சில பகுதிகளில் நடந்த கலவரங்களில் குறிப்பாக நவகாளி கலவரம் நடந்த அந்த பகுதியை நோக்கி மகாத்மா காந்தி சென்றார். இந்து முஸ்லிம் ஒற்றுமையை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தீவிர மத வெறியர்களுக்கு அது இந்துவோ அல்லது முஸ்லிமோ அவர் நாட்டிற்காக செய்த தியாகங்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா விடுதலை அடைந்த பின் அவர் நினைத்து இருந்தால் அதிகார பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்து இருக்க முடியும்.ஆனால் அவர் அதை விரும்பவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரியவேண்டாம் என பல முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வி அடைந்தன. அதே நேரத்தில் பாகிஸ்தானில் இந்துகளுக்கு நேரும் துன்பங்களுக்கும் , கொடுமைகளுக்கும் பல்லுக்கு பல் என்ற ரீதியில் இங்கும் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகளும் நிகழ்ந்தன . மத ரீதியாக ஒரு நாடு பிரிக்கப்பட்டு அங்கும் நிகழும் கொடுமைகள் இந்தியாவில் நிகழ கூடாது என அவர் விரும்பினார். ஆகவே இங்கு இந்துக்கள் இஸ்லாமியரை தாக்குவதையும், இஸ்லாமியர் இந்துக்களை பதிலுக்கு தாக்குவதையும் அவர் கண்டித்தார் . இந்த தேசம் இந்துக்கள் , இஸ்லாமியர் , சீக்கியர் ,கிறிஸ்தவர் என அனைத்து மதங்களை பின்பற்றுபவர் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என அவர் விரும்பியதில் என்ன தவறு காண முடியும் ? இஸ்லாமிய மதம் ஒன்று என்றாலும் அதில் சியா , சன்னி என்ற பிரிவுகள் உள்ளன. இதே போல் பல மதங்களில் பல பிரிவுகள் உள்ளன .ஒரு நாட்டில் ஒரே மதம் தான் பின்பற்றப்படவேண்டும் என்று கட்டாய படுத்தபட்டால் அதில் பல சாதி உட்பிரிவுகள், மத பிரிவுகள் தோன்றி மத வெறி அலை பாய்ந்து (என் மத உட்பிருவுதான் ஒரிஜினல் உன் பிரிவு டுப்ளிகட்) அந்த நாட்டை நாசமாகிவிடும் . இன்று சில இஸ்லாமிய நாடுகளில் இத்தகைய வெறியர்கள் தீவிரவாத அமைப்புகளாக உருவாகி அவர்கள் நாட்டு மக்களையே கொன்று குவித்து வருகின்றனர் . இத்தகைய மத வெறி இந்தியாவிற்கு அவசியம் இல்லை என்று தான் இது அனைத்து மதத்தவர் அரவணைத்து செல்லும் நாடாக அன்பு என்னும் மனித நேயத்தை வளர்க்கும் நாடாக இருக்க அவர் விரும்பினார். அனைத்து மதங்களும் அன்பை அற நெறியாக சொல்பவையே என்றாலும் அதை பார்க்கும் நபர் தனக்குள்ள இயல்பை அவர் பின்பற்றும் மதத்தின் மீது பூசி விடுகிறார் . கீதையை போற்றி அதை பின்பற்றும் ஒரு மகானை அதே கீதைக்காக அது வளர்வதற்கு என்று கூறி ஒரு அறிவீனன் கொலைகாரனாக மாறியது கீதையின் குற்றமன்று . அது அந்த மூடனின் குற்றம் . இந்த தேசம் ஏன் உலகம் உள்ளவரை மகாத்மா காந்தி போற்றபடுவார்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
30-ஜன-201514:56:15 IST Report Abuse
P. SIV GOWRI SanSar ஜி அருமையா எழுதி உள்ளீர்கள். நீங்க எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
30-ஜன-201513:48:53 IST Report Abuse
Raja உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு காந்திக்கு மட்டும் எப்படி? அந்த தலைவர் பாடுபட்டு வங்கி கொடுத்த சுதந்திர மண்ணில் அவரை சுட்டு கொன்றவனுக்கு கோவில் கட்டும் சிறப்பு, வேறு எந்த நாட்டு தலைவருக்கு கிடைக்கும்?
Rate this:
Share this comment
Cancel
SanSar - chennai,இந்தியா
30-ஜன-201510:47:18 IST Report Abuse
SanSar காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலம் 1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள். காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. "காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார். "நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே. யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை. எனவே "வேண்டாம் பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின. இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள். சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி கொலைகாரா" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான். போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார். அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது. டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. கைது செய்யப்பட்ட கோட்சே டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை எதற்காக கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தை அப்படியே தருகிறேன் படியுங்கள். காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை. ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார். தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை. பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும். நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார். முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது. 15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன். 1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான் குறிப்பு: இது இனையத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒருவேளை இது தவறான செய்தியாகக்கூட இருக்கலாம். தவறிருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுங்கள்.
Rate this:
Share this comment
Loganathan Kanniyappan - chennai,இந்தியா
30-ஜன-201517:02:38 IST Report Abuse
Loganathan Kanniyappanஇதை மறுப்பதற்கு இல்லை காங்கிரஸ் காந்தியின் பெயரை சொல்லி அழித்து வந்தது என்பதே உண்மை திரு மோடியின் ஆட்சி குறைந்தது 10 ஆண்டுகள் இருந்தால் இதை நாடே உணரும் கட்டாய மத மற்ற தடை சட்டம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் அதற்கான பெரும்பான்மை இந்த அரசுக்கு உள்ளது அப்படி சுயமாக மாறும் பட்சத்தில் அதற்கான சில விதி முறைகளை கொண்டு வர வேண்டும் இந்த விசயத்தில் பல ஆயிரம் கோடி ருபாய் விளையாடுகிறது என்பதையும் ஏழை மக்கள் ஏமாற்ற படுகிறாகள் என்பதையும் யாரும் மறுக்க மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை