முதுமை தொல்லையா? - ப.சுப்பிரமணியன்| Dinamalar

முதுமை தொல்லையா? - ப.சுப்பிரமணியன்

Added : ஜன 30, 2015 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
முதுமை தொல்லையா? - ப.சுப்பிரமணியன்

"மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா” மண்ணுக்கு மரமும், மரத்துக்கு இலையும், கொடிக்கு காயும், குழந்தை தாய்க்கும் பாரமில்லை. ஆனால் இன்று...பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரே பாரமாகி விட்டார்கள்.

முதுமை ஒரு செல்லாக்காசு. இப்படி சொல்வதற்கு காரணம். முதுமையினால் தள்ளாமை, தள்ளாமையினால் இயலாமை, இயலாமையினால் மற்றவர்களின் உதவியை நாடியே தீர வேண்டிய கட்டாயம். எப்பொழுதும் யாரோ ஒருவரின் கையை எதிர்பார்த்தே வாழ வேண்டிய சூழ்நிலை. சொந்தங்களோ, சுற்றங்களோ, எத்தனை பேர் பெற்றோரை ஒரு சுமையாக கருதாமல் பேணி பார்க்கின்றனர். பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், படிக்கின்றார்கள், வேலைக்கு செல்கின்றார்கள். திருமணமும் ஆகிறது. பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். பிறந்த பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எண்ணியே உழைத்து, உழைத்து, பிள்ளைகளை கரை சேர்க்கின்றனர். இதற்குள் வாழ்க்கை முழுவதையும் உண்ணாமல், உறங்காமல், உழைத்து ஓய்ந்து போய் விடுகின்றனர். கடமைகளை எல்லாம் முடித்ததும், கடைசிப்பயணம் உடனே வந்து விட வேண்டும். கடமையை முடிக்காதவர்களுக்கு கடமையை முடிக்கும் வரை காலனிடம் கொஞ்சம் வாய்தா வாங்கி கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரு ஏற்பாடு இறைவனின் படைப்பில் இல்லை. அதனால், முதுமை காலத்தில் முகப்பில் அமர்ந்து கொண்டு மோட்டை பார்த்து கொண்டு, பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருக்கின்றனர். முதுமை காலத்தில் பெரும்பாலானோருக்கு நடமாட முடிவதில்லை. நடை, உடை இன்றி நலிந்து, மெலிந்து போனபோது, மகனோ, மகளோ, சுற்றமோ உதவிக்கு வந்து கவனித்து கொள்ள மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இன்றைய சூழலில் முதுமை உற்றத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் தொல்லையாகவே படுகிறது.


தனிமைபடுத்தல்:

முதுமையால் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. "மண்ணும் தான் நல்ல மண்ணு மன்னவரும் நல்லவரே


மன்னவரை பெற்றெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு”


"பூமியும் தான் நல்ல பூமி புண்ணியரும் நல்லவரே


புண்ணியரை பெற்றெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு” என்று மாமியாரை வசை பாடியே, அவர் மகனை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் சென்ற மருமகள்கள் உண்டு. பணியின் காரணமாக வெளிநாடு சென்று விட்ட பிள்ளைகளும் உண்டு. மனம் போனபடி குணங்கள் போகாமல், குணம் மாறி பெற்றோரை பிரிந்து சென்ற பிள்ளைகளும் உண்டு. சொத்தை பிரிப்பதில்லை என்று பெற்றோரும், சொத்தை பிரி என்று பிள்ளைகளும் இருபக்கம் இழுக்க, ஒரு பக்கத்தில் பெற்றோரை பிரித்து விட்ட பிள்ளைகளும் உண்டு. "தங்க மக்கள் வாசலிலே, தங்க காசு தரையெல்லாம் உருளுது. எங்கட்கு உண்பதற்கு காசு இல்லை” என்று முதுமை காலத்தில் புலம்பும் பெற்றோரும் இருக்கிறார்கள். சொந்த வீட்டை தவிக்க விட்டு சின்ன வீட்டை தேடி சீரழிந்த மகனால், முதுமைக் காலத்தில் பெற்றோர் முனங்கித் தீர்க்கும் நிகழ்வுகளும் உண்டு. இப்படி பல காரணங்களுக்காக பிரிந்து சென்ற பிள்ளைகள் கவனிக்காததால், தனியே தவிக்கும் பெற்றோர் ஏராளம்.


வரிசை கட்டிய பிரச்னைகள்:

சில இடங்களில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் முடிவதில்லை. காரணம், அவர்களின் குடும்பச் சூழல். பிள்ளைகள் கவலை, பணி செய்யும் இடத்தில் பிரச்னை, வருமானம் பற்றாக்குறை என அவர்களின் பிரச்னை வரிசையில் நிற்கின்றன. பெற்றோரின் பிரச்னைகளை கேட்டால் நிச்சயம் பிள்ளைகள் நல்ல தீர்வு சொல்வார்கள். ஆனால், பிள்ளைகளுக்கு பெற்றோரின் பிரச்னையை கேட்கவே நேரமில்லை. அதனால்தான் இன்று முதியவர் இல்லம் பெருகி கொண்டே இருக்கிறது. முதியவர்களை இல்லத்தில் சேர்த்து விட்ட கையோடு, பிள்ளைகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், முதியவர்கள் மகிழ்வாக இருக்கின்றார்களா? அது தான் இல்லை. காரணம் சற்று நல்ல நிலையில் இருப்பவர்களை, அதாவது அவர்கள் வேலைகளை அவர்களே செய்து கொள்ளுபவர்கள் அங்கு சென்றால், அங்குள்ள சூழல் அவர்களை பைத்தியமே ஆக்கிவிடும். நம்மை விட ரொம்பவும் நலிவுற்றவர்களை, அங்கு காணும்போது, நமக்கும் இப்படி ஆகிவிடுமோ, என்ற பீதியும் ஒரு வித பயமும் கூட ஏற்பட்டு மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.


குறை காணாதீர்கள்:

முதுமை, அது எல்லோருக்கும் ஒருநாள் கண்டிப்பாக வரும். ஏன், கடவுள் கூட மனித அவதாரம் எடுத்தால் முதுமையை சந்திக்க வேண்டியது வரும். ஆகவே முதுமையை தொல்லையாக கருதாதீர்கள். கடமைக்காக பெற்றோரை கவனிக்காவிட்டாலும் ஒரு தொண்டாய் நினைத்து செய்யலாமே. நம்மை பெற்றவர்கள் என்ற எண்ணம் கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சியை தரும். முதியவர்களுக்கு ஒரு செய்தி. நமக்கு பிள்ளைகள் வேண்டும் என்று எண்ணி, மக்களை பெற்று கொண்ட பெற்றோர்களே, உங்களின் பிள்ளைகளிடம் குறை காணாதீர்கள். சொந்தங்களிடமும், சுற்றங்களிடமும், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அனுசரித்து செல்லுங்கள். அவர்கள் அன்பை பொழிவார்கள். பிறகு என்ன, முதுமைக்கு 'குட்பை' சொல்லுங்கள். மனதினால் என்றும் இளமையாக இருங்கள்.

- ப.சுப்பிரமணியன், வங்கி மேலாளர் (ஓய்வு), காரைக்குடி. 94431 22045.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
02-பிப்-201517:57:42 IST Report Abuse
மஸ்தான் கனி உயிரோடு இருக்கும்போதே பிள்ளைகள் சொத்தை எழுதிவாங்கிக் கொள்கிறார்கள் சில காரணங்களை சொல்லி நிராகதியாகி விட்டும்விடுகிரார்கள். பெற்றோரின் அருமை தான் முதுமை பெறும்போது தான் தெரியும். பெற்றோர்கள் சுகமான சுமைகள் தான்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
01-பிப்-201501:47:55 IST Report Abuse
Manian A recent article tells that Helicopter Parents are hated by their children. Many parents who moved away from joint families want their children to full their own failed dreams and force the children to study subjects the children do not like. Instead showing love and controlled guidance, they use force. The result is reverse when they parents become old. Also, most who retire think they are entitled to carefree life rather than participating and empowering themselves by sharing their life long learning and experience in some useful ways. These old parents (most) interfere and impose their old values on the married children and so on.Old age problem is a simple one. Through unbiased research alone will list the reasons, then we can start working on the solutions. Just listing problems alone do not solve it. It is a sad situation in every part of the world, not special to India.
Rate this:
Share this comment
Cancel
ARUN - coimbatore,இந்தியா
31-ஜன-201516:45:24 IST Report Abuse
ARUN முதியோருக்கு போய் விட்டீர்களே ,யார் தன்னுடைய தாய் ,யார் தன்னுடைய தந்தை ,என தெரியாமல் எதோ ஒரு பெற்றோரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டன.இவர்களின் எதிர்காலம் எங்குபோய் முடியும் என்றே தெரியவில்லை .மிக எளிதான வாழ்க்கையே மனித பண்புகளை உயர்த்தி பிடிக்கும்.வரும் காலங்களில் முதியோர் இல்லம் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை.கூட்டு குடும்பங்களை உடைத்தது யார்?ஏன் உடைந்தன ?என்பதற்கு யாராலும் பதிலே கண்டுபிடிக்க முடியாது.அந்த காலம் முதலே முதியோர்(முதுமை) ஒரு சுமையாகவே இருந்துள்ளனர்.ஆனால் அதை சுமக்கும் வலுவும்,பொறுமையும் ,மனசும்,அன்றைய இளைய தலைமுறைக்கு இருந்தது.இன்றைய இளைய தலைமுறை அனைத்தையும் இழந்து விட்டு நிராதரவாக நடுத்தெருவில் நிற்கிறதோ என்கிற ஐயமே ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
ARUN - coimbatore,இந்தியா
31-ஜன-201516:12:27 IST Report Abuse
ARUN 1970 வரை மனிதன் வசதிகளை பார்த்ததில்லை.1980 க்கு பிறகே டிவி யும் ,வாசிங் மெசின்களும் வர ஆரம்பித்தன.மோட்டார் வாகனங்கள் வரவு அதிகரிக்க தொடங்கியது.அதுவரை வேப்பங்குச்சியில் பல்துலக்கி,சீகக்காயில் தலைக்கு குளித்து வந்தான்.அரசுப்பள்ளிக்கு விரும்பும்போது செல்வான்.சளி பிடித்தால் கசாயம் குடிப்பான்.அவ்வளவே அவனுடைய தேவைகள்.உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த கால கட்டங்கள்.ஆனால் இன்றைக்கு எவ்வளவு பணம் வந்தாலும் அதற்கு மேல் தேவைகள் வரிசை கட்டி நிற்கின்றன.18 வயதில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் மிகவும் காலம் கடந்து விட்டதாக வருந்துவார்கள்.அந்த வயதில் பெண்ணுக்கு திருமணம் ஆனால் மட்டுமே புகுந்த வீட்டோடு ஒன்றிப்போக வாய்ப்புகள் அதிகம்.பெண்கள் முன்னேற்றம்,பெண்கள் பாதுகாப்பு,பெண்கள் சுதந்திரம்,முழுமையாக அடைந்து விட்டோம் என்று கூறிவிடமுடியுமா?மனித தேவைகள்,விஞ்ஞான வளர்ச்சி ,அதிகரிக்கும் போது ,மனித உணர்வுகள் செத்துதான் போகும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜன-201515:36:51 IST Report Abuse
Endrum Indian முன்வினைப்பயன் (பிராரப்த கர்மா) முடியும் வரை நமது உடல் மண்ணில் சாயாது. ஆகவே வயதான காலத்தில் இங்கே வலிக்குது, பணமில்லை, குழந்தைகள் கவனிக்கவில்லை, சுற்றம் கைவிட்டது என்று கூறாமல் இருங்கள். இது தான் கடவுள் நமக்கு காட்டும் ஞானப்பாதை, இதில் ஞானம் வந்தால் அடுத்த பிறவியில் மிக சிறப்பாக வாழ்வீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
pchandrasekaran - manama,பஹ்ரைன்
31-ஜன-201514:55:56 IST Report Abuse
pchandrasekaran வங்கியில் கணக்கில் நிறைய பணம் இருந்தாலே போதும்,சொந்த கணக்கில் பிள்ளைகள் நன்கு கவனித்துக்கொள்வார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Visilladichan Kunju - Yathum Oore,இந்தியா
31-ஜன-201513:28:07 IST Report Abuse
Visilladichan Kunju முதுமையை நினைத்தாலே பயமாக இருக்கிறது....முதுமையில் நோய் நொடியின்றி இருக்க வேண்டுமானால் இளமையிலே நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி நமது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். இளமையில் கண்ணாபின்னவென்று சிகரட் , மது பழக்கங்களை பின்பற்றி நிறைய பேர் முதுமையில் துன்பபடுகிறார்கள். நோய் அற்ற வாழவே குறைவற்ற செல்வம்.
Rate this:
Share this comment
Cancel
T N Subramaniyan - TRIVANDRUM,இந்தியா
31-ஜன-201508:36:01 IST Report Abuse
T N Subramaniyan முதுமை எல்லோருக்கும் வரும் .இறப்பு என்று தான் தெரியவில்லை . கடைசி காலம் வரை உங்கள் சேமிப்பை உங்களிடமே வைத்து கொள்ளுங்கள் . அசைய சொத்துக்களின் பேரில் remortgage லோன் வங்கி உங்கள் செலவை கணக்கு இடுங்கள். உங்கள் காலத்திற்கு பிறகு தான் உங்கள் பிள்ளைகளுக்கு. உங்களை உங்களின் முதுமை காலத்தில் கவனிக்காத பிள்ளைகள் வட்டியும் முதலும் கட்டி சொத்தை அனுபவிக்கட்டும். வீடு வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை (remortgage லோன்) சொத்தின் பாதுகாப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை