ஆயிரம் ஆண்டானாலும் மக்காத குப்பை: டாக்டர் சாமிநாதன்| Dinamalar

ஆயிரம் ஆண்டானாலும் மக்காத குப்பை: டாக்டர் சாமிநாதன்

Added : பிப் 05, 2015 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆயிரம் ஆண்டானாலும்  மக்காத குப்பை: டாக்டர் சாமிநாதன்

முன்பெல்லாம் மளிகை கடைக்கு செல்வதென்றால் சீனி வாங்க தனிப்பை, பருப்பு, வத்தல் போன்றவற்றிற்கு தனிப்பை கொடுத்து அனுப்புவர். பொருட்களை பத்திரமாக வாங்குவது எப்படி என்பது குறித்து தனி வகுப்பு நடத்தி குழந்தைகளை கடைக்கு அனுப்பி வைப்பார் தாயார். அந்த சமயங்களில் எல்லாம் நான், கடைக்காரர் மளிகை பொருட்களை பல்வேறு வடிவங்களில் கட்டுவதை கண்டு வியந்தது உண்டு.அப்போது பிளாஸ்டிக் என்றால் வீடுகளில் ஒயர்களில் செய்யப்படும் கூடைகள், நாற்கலிகள் பின்னப்படுவை மட்டுமே. ஜவுளிக்கடைகளில் கூட சணல் பைகள் கொடுக்கும் வழக்கம் இருந்தது.


தடைசெய்யப்பட்டவை :

1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வந்த போது, அதை மரங்களின் நண்பன் என்றும், இனி பேப்பருக்காக மரங்களை வெட்டவேண்டாம்; நச்சுத்தன்மை இல்லாதது, நீர்புகாதது உள்ளே உள்ள பொருட்கள் வெளியே தெரிவதால் பொருட்களின் தரத்தை பார்த்து வாங்கலாம். உணவுகளை பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் இல்லாமல் பாதுகாக்க முடியும் எனக் கூறினர். இதன் ஆபத்தை உணராமல் பாராட்டி வரவேற்றோம். இப்படி சீரும், சிறப்புமாக வரவேற்கப்பட்ட பாலிதீன் பொருட்கள் தான், இப்போது, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. துவக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தவை தற்போது குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், பால் பாட்டில்கள், குழந்தைகளுக்கான நாப்கின் என ஆரம்பித்து, குப்பை எடுக்கும் கருப்பு கவர்கள், விளம்பர பேப்பர்கள், குடிக்கும் தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொருட்களை பார்சல் செய்யும் கவர்கள், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொருட்கள், டம்ளர்கள், செருப்புகள் என நாம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அளவிற்கு கலந்துவிட்டது.இது தவிர மருத்துவ துறையில் ரத்தம் வைக்கும் கவர்கள், ஊசிகள், குளுக்கோஸ்பாட்டில்கள், மருந்து பாட்டில்கள், கை உறைகள் என மருத்துவ உலகிலும் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது.ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பில்லியன் (ஒரு பில்லியன் 100கோடி) பைகளும், 24 பில்லியன் தண்ணீர் பாட்டில்களும் தூக்கி எறியப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, சீனா, பாகிஸ்தானில் மட்டும் 23 ஆயிரம் டன் மின்னணு குப்பை சேகரமாகின்றன. இந்த பாலிதீன் குப்பை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கிவிடுவதில்லை.


மழைநீர் செல்லாது :

இதனால் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்கின்றனர். ஆனால் மறுசுழற்சியின் அளவை விட, பயன்பாட்டின் அளவு பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. இப்படி வளர்ந்து நிற்கும் பாலிதீன் மனித இனத்திற்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள், சுற்றுப்புறத்தில் உள்ள நுண் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எறிதல், எரித்தல், பயன்படுத்துதல் என மூன்று வகையிலும் பாலிதீனால் ஆபத்து ஏற்படுகிறது.பயன்படுத்திய பாலிதீன் கவர்கள், பாட்டில்களை பூமியில் எறிவதன் மூலம் மழைநீர் பூமியின் அடியில் செல்வதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்களில் மழைநீர் தேங்கி, மலேரியா, டெங்கு, கொசுக்களின் உற்பத்தி கூடாரமாகி விடுகிறது. இத்தகைய கவர்கள் ஆற்றினையும் மாசுபடுத்தி, நீரோட்டத்துடன் கலந்து அணைகள், கடல் பகுதிகளை மாசுபடுத்தி, கடல் வாழ் உயிரினங்களுக்கு அழிவினை ஏற்படுத்தி விடுகிறது. வண்ண, வண்ண பாலிதீன் பைகளை உணவு என நினைத்து விலங்குகள் சாப்பிட்டு இறந்துவிடுகின்றன. இந்தியாவில் சராசரியாக பாலிதீனை உட்கொண்டு தினமும் 20 பசுக்கள் இறக்கின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


புற்றுநோய் வரும் :

பாலிதீன் பைகள் எரிக்கப்படுவதால் கார்பன் மோனாக்சைடு, டயாக்ஸின், அல்டிஹைடு ஆகிய நச்சுப்புகைகள் வெளியாகிறது. இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புற்றுநோய்கள், கண் எரிச்சல், தலைவலி, நுரையீரல், தைராய்டு சம்பந்த மாக நோய்கள் வருகின்றன. இதனால் புவிவெப்பமயமாதலும் நடக்கிறது.பாலி எத்தினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், சமையலறை பொருட்களில் அதிக சூடான உணவுப்பொருட்களை வைக்கும் போதோ, சூடான குடிநீரை வைக்கும் போதோ அதிலிருந்து டயாக்சின் என்னும் நச்சுப்பொருள் வெளியாகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இந்த நச்சுப்பொருள் வெளியாகும். பாட்டிலில் உள்ள தண்ணீரில் அசிட்டால்டிஹைடும், பிஸ்டீனால் ஏ என்னும் நச்சுப்பொருளும் கலக்கிறது. இதனால் புற்றுநோய் வரும். உடல் பருமன், சர்க்கரை நோய் உண்டாகும். குடிநீர் குழாய்களில் அதன் வளையும் தன்மைக்காக 'தாலேட்' என்னும் நச்சுப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த 'தாலேட்' குழந்தைகளின் விளையாட்டு பொருளிலும் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தையின்மை, பிறப்பு குறைபாடுகள், கருப்பை கட்டிகள் உண்டாகிறது.பாலிதீன் பைகள் 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ளவற்றை அரசு 2002ல் தடை செய்துவிட்டது. 20 மைக்ரான் தடிமன் உள்ள ஒரு பை தயாரிக்க 10 காசு செலவானால், 40 மைக்ரான் தடிமன் உள்ள பை தயாரிக்க 2 ரூபாய் செலவாகும். அதிகப்படியான பைகளின் பயன்பாட்டினை தடுக்கவே இந்த தடை.மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகள் அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொறுத்து ஆக்ஸோபிளாஸ்டிக்குகள், ஹைடிரோ பிளாஸ்டிக்குகள் அல்லது நார்ச்சத்து உடைய பிளாஸ்டிக்குகள் என வகைபடுத்தப்படுகின்றன.ஹைடிரோ அல்லது நார்ச்சத்து உள்ள பிளாஸ்டிக்குகள் விவசாய கழிவு பொருட்கள், மக்காச்சோளம், சோயா, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்குகள் 10 முதல் 45 நாட்களில் மக்கிவிடும் என்றாலும் இவற்றை மற்ற பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்த்து மறுசுழற்சியோ அல்லது மக்கச்செய்யவோ முடியாது. தனி இடம் வேண்டும். இவற்றை எரிப்பதால், மீத்தேன், கரியமில வாயுக்கள் வெளியாகின்றன. இதனை தயாரிக்க செலவும் அதிகம் ஆகும்.எனவே பாலிதீன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாற்றாக சணல், துணிப்பைகளை பயன்படுத்தவேண்டும். பொருட்கள் வாங்கும் போது பாத்திரங்கள், பைகள் எடுத்துச் செல்லவேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
-டாக்டர் சாமிநாதன்
சித்த மருத்துவர், தேனி.
99446 25511.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani - chennai,இந்தியா
05-பிப்-201521:24:11 IST Report Abuse
mani மக்கள் எல்லோரும் முட்டாள்கள்ளாக இருக்கும்வரை அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்தான். அரசு ஏன் பலகோடி மக்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்? பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டணை கொடுக்கபட்டால், முற்றிலும்மாக ஒழிந்துவிடுமே இதை செய்யமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
05-பிப்-201520:56:29 IST Report Abuse
Manoharan Prushothaman எவர்சில்வர் டிபன் பாக்ஸ் டிபன் கேரியர் ஆகியவற்றை பார்த்து நீண்ட நாளாகிவிட்டது எல்லாமே பிளாஸ்டிக் பை ஆகிவ்ட்டது டீ கூட பிளாஸ்டிக் பைகளில்தான் கொடுகிறார்கள் அன்றாட வாழ்கையில் பிலாச்டிக்கே முக்கிய பங்கு வகிக்கும்படி செய்துவிட்ட்ர்கள் பழையபடி கூஜவையும் டிபன்கேரியரையும் தூக்க பழக்குவது மிகவும்கடினம்
Rate this:
Share this comment
Cancel
Vincent Jayaraj - salem,இந்தியா
05-பிப்-201520:51:44 IST Report Abuse
Vincent Jayaraj மிக சிறந்த கட்டுரை. யாருக்கோ ஆபத்து ஏற்படுகிறது,நமக்கு அல்ல என்று பரபரக்கும் அவசர உலகில் ,நமக்கு நம் முன்னோர்கள் விட்டுசென்ற இந்த மண் அடுத்த தலை முறையினருக்கும் வாழ தகுதி உடையதாக மாற்ற வேண்டும். இல்லையெனில் பதிப்பு எனபது நமது வாரிசுகள் சொத்தாக மாறிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
PICHAIYAN JAYARAJ - Alakkudi,இந்தியா
05-பிப்-201519:50:17 IST Report Abuse
PICHAIYAN JAYARAJ பாலிதீன் பைகளை உபயோகிப்பதால் காக்கா இனம் அழிந்து வருகிறது. வீணாப்போன மற்றும் மீந்து போனதை பாலித்தீன் பைகைளில் போட்டு தூக்கி போடுவதால் காக்காவிற்கு சாப்பிட ஒன்றும் கிடைப்பதில்லை. சகோதர சகோதரிகளே, தயவுசெய்து பாலிதீன் பைகளை உபயோகிக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Visilladichan Kunju - Yathum Oore,இந்தியா
05-பிப்-201518:19:29 IST Report Abuse
Visilladichan Kunju ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் இந்த அரசு (மத்திய , மாநில ) உற்பத்தி செய்யகூடாது என்று ஆலைகளுக்கு தடை போட்டால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
M. Ashokkumar - Hyderabad,இந்தியா
05-பிப்-201516:51:52 IST Report Abuse
M. Ashokkumar வருங்கள சந்ததியினரின் ஆரோக்கியம், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றில் அக்கறை உள்ளவர்கள் பிளாஸ்டிக் கை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மனித குலத்திற்கு தீவிரவதியினரிடம் இருந்து எவ்வளவு அபத்தோ , அதை விட கொடுமை இந்த பிளாஸ்டிக்கால் ஏற்பட போகிறது. தயவு செய்தி பிளாஸ்டிக்கை தவிர்க்க பழகுங்கள். இங்கு எந்த அரசியல் கட்சிகளும் இதை ஒரு தீவிர பிரச்சினையாக பார்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
05-பிப்-201515:36:24 IST Report Abuse
ganapati sb பிளாஸ்டிக் குப்பைகளை துகள்களாக்கி தாரோடு இணைத்து பயன்படுத்தினால் சாலைகளின் தரமும் வாழ்நாளும் கூடும் என மதுரை விஞ்சானி ஒருவர் கண்டுபிடித்து அரசுக்கு கூறியுள்ளதாக சில வருடம் முன்பு படித்ததாக ஞாபகம்.அதை ஆராய்ந்து அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஓரளவு பிரச்சனை தீரும். மக்களுக்கும் பிளாஸ்டிக்பொருட்கல் மற்றும் குப்பைகளை கையாள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மற்றபடி கனமான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுவதால் மரங்கள் வெட்டப்படுவது குறையும்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
05-பிப்-201518:17:40 IST Report Abuse
K.Sugavanamமதுரை,தியாகராஜர் பொறி இயல் கல்லூரி வேதி இயல் துறை பேராசிரியர் 2000 ங்களில் சொன்னதோடு நில்லாமல் முதன் முதலில் சேலத்தில் தாருடன் பிளாஸ்டிக் கழிவுகள் 10% சேர்த்து பரீட்சார்த்தமாக 2 km சாலை அமைத்து காட்டினார்.அது 6 ஆண்டுகள் வரை மழை,வெப்பம் பாதிப்பில்லாமல் அருமையாக உழைத்தது..ஆனால் அப்புறம் கான்றக்டர்களின் நன்மைக்காக அதை எல்லா இடங்களிலும் அமல்படுத்தாமல் விட்டு விட்டனர் போல..பிளாஸ்டிக் கழிவை மறு சுழற்சி,மறு உபயோகம் செய்வதை சிங்கப்பூர் சென்று இவர்கள் படிக்க வேண்டும்..அங்கு இதை வைத்தே மின் உற்பத்தி செகிறார்கள்..அங்கு இந்த மாதிரி பிளாஸ்டிக் உபயோகிக்க தடை ஏதும் இல்லை..ஆக்க பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும்.....
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
05-பிப்-201515:26:28 IST Report Abuse
kundalakesi பிளாஸ்டிக் வேசடை முழுவதுமாய் எரித்து கொதிகலன் நீராவியால் மின் சக்தி உற்பத்தி செய்யும் ஆலைகளும் உள்ளன, அவை இன்னும் திருத்தப்ப் பட்டு 100% நல்ல காற்று கிடைக்கோமாறு முனைகின்றனர். ஒரு 2500 கிலோ வாட் பரீட்சார்த்த மின் ஆளை கூட டில்லியில் இருந்தது. ஆனால் அங்கு வரும், காகித, காய்கறி , பிளாஸ்டிக் குப்பைகளில் மண் அதிகம் இறந்ததால் மின்கலன் சரி வர இயங்காத நிலை. மனிதன் நினைத்து விட்டான். அதை சாதித்தே தீருவான். குப்பை பிளாஸ்டிக் இனி மின்சாரம் தந்து உதவும் நாள் சீக்கிரமே.
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
05-பிப்-201514:33:26 IST Report Abuse
Rajarajan தற்போது மக்கும் பிளாஸ்டிக் பைகள் வெளி வருகின்றன. அவற்றை கட்டாயமாக்கவேண்டும். மக்காத பிளாஸ்டிக்கில் பொருள் தயாரிக்கவே கூடாது என்ற சட்டம் வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
05-பிப்-201511:40:26 IST Report Abuse
P. SIV GOWRI அருமையான பதிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பை ஒழிக்க பட்டு உள்ளது. எல்லா மாவட்ட ஆட்சியரும் முயற்சி எடுத்தால் ஒழிக்க முடியும். நாமும் சிந்திக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை