மருத்துவ குணமுடைய பழுபாகற்காய் சீஸன் துவக்கம்| Dinamalar

தமிழ்நாடு

மருத்துவ குணமுடைய பழுபாகற்காய் சீஸன் துவக்கம்

Added : பிப் 05, 2015

வேதாரண்யம்:நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் மருத்துவக் குணமுடைய பழுபாகற்காய் சீஸன் துவங்கி உள்ளது.கசப்பு தன்மையுடைய பாகற்காயில் கொம்பு பாகற்காய், மெறி பாகற்காய், பழுபாகற்காய், என பல வகை உள்ளது. இதில் பழுபாகற்காயை சைவ சமயலுக்கு மட்டுமின்றி மட்டன், கோழி, இறால் போன்ற அசைவ உணவில் சேர்த்து பயன்படுத்தினால், சுவை மிகுந்து இருக்கும் ஆரம்பத்தில் பழுபாகற்காய் கோடியக்காடு, கோடியக்கரை உள்ளிட்ட காட்டுப்பகுதியில், பறவைகள் மூலம் பரவியது. வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த கத்திரிப்புலம், செம்போடை, கருப்பம்புலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த பழுபாகற்காய் கிழங்கு மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. தோற்றத்தில் சிறிய பாலப்பழம் போல உள்ள இந்த காய்கள், இயற்கை உரத்தின் மூலம் சாகுபடி செய்யப்படுவதால், அதிக செலவில்லை.பழுபாகற்காயை குறைந்தபட்சம், ஐந்து மாதங்கள் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியும். நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை. செடியில் காய் காய்க்கும், குறைந்த பட்சம், எட்டு நாட்கள் முற்றிய காய் நன்றாக சுவையாக இருக்கும்.பழுபாகற்காயை விதையுடன் சேர்த்து சமைத்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். ஒரு செடிக்கு வாரம், ஒரு முறை இரண்டு கிலோ அளவிற்கு காய் பறிக்க முடியும்.விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ, 90க்கு கொள்முதல் செய்யபட்டு கடைகளில் சில்லரையாக, 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், பழுபாகற்காயை அசைவ சமையலுக்கு, மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்பழுபாகற்காய் பொதுவாகவே மருத்துவக் குணமுடையது. சர்க்கரை நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கும் ஏற்றது, என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X