M Karunanidhi alleges money distribution by AIADMK in Srirangam | ஸ்ரீரங்கத்தில் முடிந்த பண பட்டுவாடா: இனியாவது விழிக்குமா தேர்தல் ஆணையம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் முடிந்த பண பட்டுவாடா: இனியாவது விழிக்குமா தேர்தல் ஆணையம்?

Added : பிப் 10, 2015 | கருத்துகள் (108)
Advertisement
ஸ்ரீரங்கத்தில் முடிந்த பண பட்டுவாடா: இனியாவது விழிக்குமா தேர்தல் ஆணையம்?

சென்னை : ஸ்ரீரங்கம் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாக்காளர்களுக்கு, ஓட்டு ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வீதம் ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு விட்டது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒருசில இடங்களில், மனசாட்சியுள்ள வாக்காளர்கள் அ.தி.மு.க.,வினர் கொடுத்த தொகையை வாங்க மறுத்துள்ளனர். அப்போது, அ.தி.மு.க.,வினர் வலுக்கட்டாயமாக அந்த வாக்காளர்களின் வீடுகளில் பணம் அடங்கிய கவர்களை வைத்து விட்டு சென்றிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர்களிடம் இருந்து பதிலில்லை.இதிலிருந்து, அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டே, ஓட்டுக்கு பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறதென, திருச்சி பத்திரிகையாளர்கள் பேசிக் கொள்கின்றனர். இதை தடுக்க முயன்றவர்களை, ஆளுங்கட்சி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்துக் கொண்டு காரியத்தை முடித்து விட்டது.

ஸ்ரீரங்கத்தில் நேற்றைய தினமே, பா.ஜ.,வைச் சேர்ந்த தொண்டர்கள் மீது அ.தி.மு.க.,வினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்னொரு சம்பவத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதைத் தொடர்ந்து தான், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. சென்னையிலே உள்ள தலைமை தேர்தல் அதிகாரி, இந்த தேர்தல் முறையாக நடக்க வேண்டுமென்று விரும்பிய போதிலும், அவருக்கு அடுத்த நிலையிலே உள்ளவர்களும், குறிப்பாக திருச்சியிலும், ஸ்ரீரங்கத்திலும் உள்ள அதிகாரிகள், ஆளுங்கட்சியினரின் எடுபிடிகளாகவும், ஏவலுக்கு கட்டுப்படும் சேவகர்களாகவும் செயல்படுகிறார்கள்.இதை, தி.மு.க., வன்மையாக கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதற்குரிய நடவடிக்கைகளை இப்போதாவது விழித்தெழுந்து மேற்கொள்ள வேண்டுமென்றும்; அரசியல் சட்டத்தையும், மக்களாட்சி நெறி முறைகளையும் பாதுகாத்திட, தங்கள் கடமையினை ஆற்றிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
10-பிப்-201523:04:23 IST Report Abuse
K.Sugavanam தலீவா கைய கொஞ்சம் கீழ கொண்டா..காது அங்கதான் இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-பிப்-201522:30:42 IST Report Abuse
g.s,rajan என்ன செய்யறது கருணா,பிராரர்த்த கருமம் ,திருமங்கலம் பார்முலா "பூமராங்" போல திருப்பி உங்களைத் தாக்குதே .
Rate this:
Share this comment
Cancel
Thudappa Kattai - Orlando,யூ.எஸ்.ஏ
10-பிப்-201521:08:12 IST Report Abuse
Thudappa Kattai தானை தலைவர் அவர்களே, திருமங்கலம் தேர்தல் சமயம் எங்கே போயிருந்தீர். உமது மகன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் திருமங்கலம் தேர்தல் வெற்றி பற்றிய கேள்விக்கு, "எங்கள் கட்சியின் பயன்படுத்திய யுக்தி தான் வெற்றிக்கு காரணம்" என்று பதில் சொன்னார். இந்த யுக்தியின் ரகசியம் என்ன தலைவரே.... ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுகுதாம் ..... பாவம் இவர் என்ன பண்ணுவார்...
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
10-பிப்-201518:29:03 IST Report Abuse
raghavan அதற்குள் என்ன அவசரம், தேர்தல் முடிவுக்கு அப்புறம் இந்த போஸ் குடுக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
santhyasasi - COVAI  ( Posted via: Dinamalar Android App )
10-பிப்-201517:59:58 IST Report Abuse
santhyasasi டாசுமார்க் ல் அரசுக்கு ஐயாயிரம்கோடி வருமானம் என்றால் திமுக அதிமுக விற்கு ஐம்பதாயிரம் கோடி வருமானம் அதனால் தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை பற்றி தமிழினதலைவர் பேசமாட்டார் ஏன்எனில் அதில் அவருடைய வருமானம் பாதிக்குமே இந்த கேடு கெட்ட இரு கட்சிகளும் என்றுதான் அழியுமோ
Rate this:
Share this comment
Cancel
Vel Murugan - Madurai,இந்தியா
10-பிப்-201516:50:35 IST Report Abuse
Vel Murugan சாத்தான் மீண்டும் வேதம் ஓதுகிறது
Rate this:
Share this comment
Cancel
malar - chennai,இந்தியா
10-பிப்-201515:46:21 IST Report Abuse
malar யு கே விலே இருக்கிறவருக்கு தெரிந்த விஷயம் கூட நமக்கு தெரியவில்லை. ஆனா ஏழை மக்களுக்கு இந்த நகை யை மீட்டு கொடுக்கிற திட்டம் நல்லாத்தான் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
10-பிப்-201515:17:43 IST Report Abuse
Balaji என்னய்யா இவனுக 2000 தராங்க.... அவ்வளவுலாம் நம்பளால தரமுடியாது. யாரு வீட்டு பணத்த யாருக்கு கொடுக்கறது. நாங்க கஷ்டப்பட்டு விஞ்ஞான முறைல சேர்த்த காச அப்புடில பொசுக்குனு கொடுத்துட முடியாது. அவங்க இவ்வளோ கொடுக்குறாங்க அவ்வளோ கொடுக்குறாங்கன்னு ஒரு பிட்ட போட்டுட வேண்டியது தான்..........
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
10-பிப்-201514:20:13 IST Report Abuse
skandh எதுவும் ஆகட்டும் தீ மூ கா ஜெயிக்க கூடாது அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Mani - Coimbatore,இந்தியா
10-பிப்-201514:13:57 IST Report Abuse
Mani அய்யா கடந்த ஆடசியில சென்னை உள்ளாட்சி தோ்தல் நடத்தின போது உங்க கட்சிகாரங்க எவ்வளவு அடாவடில ஈடுபட்டாங்கனு இன்னும் நாங்க மறந்து போகல,,, அரசியலுக்காக நீங்க ஆளுங்கட்சியா இருந்தா ஒரு மாதிரியும், எதிர்கட்சியா இருந்தா ஒரு மாதிரியும் நடந்துப்பீங்க, திருமங்களத்து இடை தேர்தல்ல நீங்க வாக்களருக்கு பணம் குடுத்தபோது இந்த அறிக்கைய நீங்க விட்டுருந்தா நல்லவரு.. அன்னிக்கு உங்களுக்கு சந்தோசமா இருந்துச்சிலிங்க அய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை