மண்டல கோ-கோ போட்டி ஆவிச்சி பள்ளி இரண்டாம் இடம்| Dinamalar

மண்டல கோ-கோ போட்டி ஆவிச்சி பள்ளி இரண்டாம் இடம்

Added : பிப் 12, 2015

விருகம்பாக்கம்: மண்டல அளவிலான, குடியரசு தின கோ-கோ போட்டியில், விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி, அணி இரண்டாம் இடம் பெற்றது.புதுக்கோட்டையில், குடியரசு தின சீனியர் கோ-கோ போட்டிகள் நடந்தன. அதில், 15 மண்டல அணிகள் பங்கேற்றன. சென்னை மண்டலம் சார்பில், விருகம்பாக்கம் மேல்நிலைப் பள்ளி அணி பங்கேற்றது. இறுதி போட்டியில், ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி (சென்னை) அணி, 10-12 என்ற புள்ளிக்கணக்கில், சி.ஆர்.ஆர்., மெட்ரிக் (கோவை) அணியிடம், தோல்வி அடைந்து, இரண்டாம் இடத்தை பெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X